\ ரக்ஷா பந்தன் உத்ஸவமும் உபவாஸமும் ஹிந்துவின் வாழ்வில் இரண்டு முக்ய ஆதாரங்கள் ஆகும். உத்ஸவத்தின் ருசிகர விருந்து மற்றும் உபவாஸத்தின் உண்ணா நோன்பு என்ற இரு த்ருவங்களுக்கு இடையில் தான் ஸராஸரி ஹிந்துவின் வாழ்க்கைப் பயணம். சில உத்ஸவங்கள் பாரத நாடு முழுவதும், அனைத்து ஜாதியினராலும், அனைத்து மொழியினராலும், அனைத்து ஸமூஹங்களாலும் கொண்டாடப் படுகின்றன. அந்தந்த ஊரில் மட்டும், ஒரு ஸமுதாயத்தினரால் மட்டும் கொண்டாடப் படும் உத்ஸவங்களும் உண்டு. சேர்ந்து வருதல், சேர்ந்து ஆடுதல் மற்றும் பாடுதல், சேர்ந்து உண்ணுதல் ஆகியவை மூலம் குடும்ப அளவிலும் க்ராம அளவிலும் ஸமுதாய அளவிலும் உள்ள உறவுகளை திடப் படுத்துவதும், உத்ஸவக் கொண்டாட்டத்திற்கானத் தேவைகளை உள்ளூர் விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் வ்யாபாரிகளிடம் வாங்க வேண்டிய நிர்பந்தம் காரணமாக பொருளாதாரத்தை திடப் படுத்துவதும், மக்களிடம் உத்ஸாஹம், ஆனந்தம் மற்றும் ஆக்கபூர்வ மனப்பான்மை ஆகியவைப் பெருக வைப்பதும், உத்ஸவத்தில் நடத்தப்படும் கதை, ஆடல், பாடல், விளையாட்டு போன்ற நிகழ்வுகள் மூலம் ஸராஸரி மனிதனின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை சீராக்கி...
राम गोपाल रत्नम्