ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 71 बलं बलवताम् चाहम् कामराग विवर्जितम् । (अध्याय ७ - श्लोक ११) பலம் பலவதாம் சாஹம் காம ராக விவர்ஜிதம் ... (அத்யாயம் 7 - ஶ்லோகம் 11) Balam Balavataam Chaaham Kaama Raaga Vivarjitham ... (Chapter 7 - Shloka 11) காமம் மற்றும் விருப்பங்கள் இல்லாத பலமும் நானே ... பலம் நானே ... ஸ்ரீ க்ருஷ்ணன் கூறுகிறான் . பலம் , ஆனால் காமம் மற்றும் ஆஶைகள் இல்லாத பலம் ... ராக்ஷஸர்களின் பலம் இல்லை ... ராவணனின் பலம் இல்லை . மைக் டைஸனின் (Mike Tyson) பலம் இல்லை . ஹப்தாஹ் வஸூல் (கட்டாய வஸூல்) செய்திடும் ரௌடியின் பலம் இல்லை . இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கையில் உள்ள துப்பாக்கிகளிலும் குண்டுகளிலும் உள்ள பலம் இல்லை . மெடிகல் , இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் கூட்டம் சேர்த்து புதிய மாணவன் மீது ரேக்கிங் என்ற பெயரில் வன்கொடுமை செய்திடும் மாணவர்களின் பலம் அல்ல . அஸஹாயப் பெண்ணை இருட்டிலும் தனிமை இடங்களிலும் கற்பழித்திட முயலும் ஆண்களின் பலம் அல்ல . ஏழைகளை பயமுறுத்தி கப்பம் கட்ட வைத்த கம்ஸனின் பலம் இல்லை . த...
राम गोपाल रत्नम्