ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 71
बलं बलवताम् चाहम् कामराग विवर्जितम् । (अध्याय ७ - श्लोक ११)
பலம் பலவதாம் சாஹம் காம ராக விவர்ஜிதம் ... (அத்யாயம் 7 - ஶ்லோகம் 11)
Balam Balavataam Chaaham Kaama Raaga Vivarjitham ... (Chapter 7 - Shloka 11)
காமம் மற்றும் விருப்பங்கள் இல்லாத பலமும் நானே ...
பலம் நானே ... ஸ்ரீ க்ருஷ்ணன் கூறுகிறான் . பலம் , ஆனால் காமம் மற்றும் ஆஶைகள் இல்லாத பலம் ... ராக்ஷஸர்களின் பலம் இல்லை ... ராவணனின் பலம் இல்லை . மைக் டைஸனின் (Mike Tyson) பலம் இல்லை . ஹப்தாஹ் வஸூல் (கட்டாய வஸூல்) செய்திடும் ரௌடியின் பலம் இல்லை . இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கையில் உள்ள துப்பாக்கிகளிலும் குண்டுகளிலும் உள்ள பலம் இல்லை . மெடிகல் , இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் கூட்டம் சேர்த்து புதிய மாணவன் மீது ரேக்கிங் என்ற பெயரில் வன்கொடுமை செய்திடும் மாணவர்களின் பலம் அல்ல . அஸஹாயப் பெண்ணை இருட்டிலும் தனிமை இடங்களிலும் கற்பழித்திட முயலும் ஆண்களின் பலம் அல்ல . ஏழைகளை பயமுறுத்தி கப்பம் கட்ட வைத்த கம்ஸனின் பலம் இல்லை . தன் ஸ்வய ஸுக போகத்திற்காக , ஸ்வயநலத்திற்காக ஜனங்கள் மீது கொடுங்கோல் ஆக்ஷி நடத்திய ஸர்வாதிகளின் பலம் இல்லை .
ஸ்ரீ க்ருஷ்ணனின் கூற்றைத் தவறாகப் புரிந்து கொண்டால் , அரைகுறையாக முதல் பகுதியை மாத்ரம் புரிந்து கொண்டால் , இவ்வாறெல்லாம் தோன்ற வாய்ப்பு உண்டு . இவ்வாறு தவறாகப் புரிந்து கொண்டோரே "ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன ?" என்று கேட்பவர்கள் . அவர்களே தர்ம விரோத கொடுங்கோல முகலாயர்களை ராஜாவாக ஏற்றுக் கொண்டவர்கள் . அவர்களே 1857ல் ஒரு ஹிந்து ராஜாவின் தலைமையை ஏற்காமல் முகலாய வாரீஸு ஜஃபர் ஷாவின் தலைமையை ஏற்று ஆங்க்லேய ஆக்ஷியின் எதிராகப் போராடினர் . அவர்களே சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் , கடத்தல் வீரப்பன் போன்றோரும் காளியை வழிபட்டனர் , ஜனங்களுக்கு நன்மை செய்தனர் என்று கூறி போற்றுபவர்கள் . அவர்களே ஒழுக்கம் வந்தது , கட்டுப்பாடு வந்தது என்று கூறி இந்திராவின் எமர்ஜென்ஸி கொடுங்கோல ஆக்ஷியையும் ஏற்றவர்கள் .
வேறொரு இடத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன் , "நரர்களில் ராஜா நானே" என்கிறான் . ராஜா விதிக்கும் நியமங்களுக்குக் கட்டுப்படுவது நம் கடமை . அதில் ஸந்தேஹம் இல்லை . ஆனால் , ஸ்வயநலக் கொடுங்கோலன் எதிர்க்கப் பட வேண்டியவன் . அழிக்கப் பட வேண்டியவன் . ராவணன் எரிக்கப் பட வேண்டியவன் . "அவன் வேதம் பயின்ற ப்ராஹ்மணன் . தெய்வீக ஸங்கீதத்தில் நிபுணன்" என்பதெல்லாம் பொருட்டல்ல . காமத்துடன் கூடிய பலம் கொண்டவன் .
இந்த ஶப்தாவலியின் மூலம் பலத்திற்கு ஒரு ஹேது அளிக்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் . பலம் நாடுபவர்களுக்கு ஒரு நோக்கம் அளிக்கிறான் . பலம் ஶேகரியுங்கள் . பலத்தை வழிபடுங்கள் . எதற்காக ? தர்ம ரக்ஷணத்திற்காக .. பலஹீனர்களைக் காப்பதற்காக ... அதர்மத்தின் எதிரில் போராடுவதற்காக ... கொடுமையாளர்களை அழிப்பதற்காக .. பலம் நாடுங்கள் . ஒழுக்கம் இல்லாத பலம் , ஸ்வய நலம் கூடிய பலம் , காமத்துடன் கூடிய பலம் ராக்ஷஸ பலம் . ஒழுக்கம் கூடிய பலம் , தர்மம் காக்கும் பலம் , பலஹீனர்களைக் காத்திடும் பலம் (ராஜாவின் ப்ரதானக் கடமை கோ-ப்ராஹ்மண பரிபாலனம் .. பலஹீனர்களைக் காத்தல் ) அதர்மம் அழிக்கும் பலம் தெய்வத்தின் ஸ்வரூபமே .
Comments
Post a Comment