ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 198 गुणातीतः स उच्यते .. (अध्याय १४ - श्लोक २५) குணாதீதஹ ஸ உச்யதே .. (அத்யாயம் 14 - ஶ்லோகம் 25) Gunaateetah Sa Uchyate .. (Chapter 14 - Shlokam 25) அர்தம் : அவன் குணாதீதன் என்று அழைக்கப் படுகிறான் .. அவனை குணாதீதன் என்று அழைக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. குண அதீதன் .. குணங்களுக்கு அப்பால் .. குணங்களைத் தாண்டி .. இவை குணங்களின் கார்யம் .. உலகத்தில் நடக்கும் அனைத்தும் , நாம் அநுபவிக்கும் அனைத்தும் குணங்களின் கார்யம் .. எனவே , குணங்களால் பாதிக்கப் படாமல் அலக்ஷ்யமாக உட்கார்ந்திரு .. கம்பீரமாக உட்கார்ந்திரு .. உதாஸீனவத் ஆஸீனஹ .. என்றார் .. அவ்வாறு குணங்களுக்கு அப்பால் எழக் கூடியவனை குணாதீதன் என்கிறார் இங்கு .. அவன் எப்படி இருப்பான் என்று வர்ணிக்கும் போது , ஒரு முறை மீண்டும் ஸமத்வம் .. பற்றிச் சொல்கிறார் .. ஸமத்வம் கொண்டவன் குணாதீதன் என்கிறார் .. ஸுக - து:கத்தில் , மண் - ஸ்வர்ணத்தில் , ப்ரிய - அப்ரிய ப்ராப்தியில் , நிந்தை - ஸ்துதியில் , மான ...
राम गोपाल रत्नम्