ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 273 धृत्या यया धारयते मनःप्राणेन्द्रियक्रियाः योगेनाव्यभिचारिण्या धृतिः सा सात्त्विकी .. (अध्याय १८ - श्लोक ३३) த்ருத்யா யயா தாரயதே மனஹ - ப்ராணேந்த்ரியாஹ க்ரியாஹ் யோகேனாவ்யபிசாரிண்யா த்ருதி ஸா ஸாத்விகீ .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 33) Dhrutyaa Yayaa Dhaarayate Manah Praanendriya Kriyaah Yogena Avyabhichaarinya dhrutih saa Saattviki .. (Chapter 18 - Shlokam 33) அர்தம் : யோகத்தால் மலர்ந்திடும் உறுதி எதுவோ , மனஸ் , ப்ராணன் மற்றும் இந்த்ரியங்களின் செயல்பாடுகளை எது காக்கிறதோ , அது ஸாத்வீக த்ருதி .. த்ருதி என்பது உறுதி . மன உறுதி அல்லது மனோ த்ருடம் .. யோக வழியில் பயிற்சி மன த்ருடம் வளர்த்திடும் .. இந்த்ரியங்கள் மற்றும் ப்ராணனின் செயல்படுதலை சீராக்கிடும் .. கட்டுக்குள் கொண்டு வந்திடும் .. இத்தகைய மன உறுதி , இடர்களைத் தகர்த்து , கவர்ச்சிகளில் மயங்கி தடம் மாறிடாமல் நாம் நம் லக்ஷ்யத்தை நோக்கி ப்ரயாணிக்க அவஶ்யமானதொரு ஸாதனம் .. இது ஸாத்வ...