ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 273
धृत्या यया धारयते मनःप्राणेन्द्रियक्रियाः योगेनाव्यभिचारिण्या धृतिः सा सात्त्विकी .. (अध्याय १८ - श्लोक ३३)
த்ருத்யா யயா தாரயதே மனஹ - ப்ராணேந்த்ரியாஹ க்ரியாஹ் யோகேனாவ்யபிசாரிண்யா த்ருதி ஸா ஸாத்விகீ .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 33)
Dhrutyaa Yayaa Dhaarayate Manah Praanendriya Kriyaah Yogena Avyabhichaarinya dhrutih saa Saattviki .. (Chapter 18 - Shlokam 33)
அர்தம் : யோகத்தால் மலர்ந்திடும் உறுதி எதுவோ , மனஸ் , ப்ராணன் மற்றும் இந்த்ரியங்களின் செயல்பாடுகளை எது காக்கிறதோ , அது ஸாத்வீக த்ருதி ..
த்ருதி என்பது உறுதி . மன உறுதி அல்லது மனோ த்ருடம் .. யோக வழியில் பயிற்சி மன த்ருடம் வளர்த்திடும் .. இந்த்ரியங்கள் மற்றும் ப்ராணனின் செயல்படுதலை சீராக்கிடும் .. கட்டுக்குள் கொண்டு வந்திடும் .. இத்தகைய மன உறுதி , இடர்களைத் தகர்த்து , கவர்ச்சிகளில் மயங்கி தடம் மாறிடாமல் நாம் நம் லக்ஷ்யத்தை நோக்கி ப்ரயாணிக்க அவஶ்யமானதொரு ஸாதனம் .. இது ஸாத்வீக த்ருதி ..
உறுதியில் இருந்து உறுதி பிறக்கும் .. உறுதியான முயற்சியின் விளைவாக மன உறுதி பிறந்து வளர்ந்திடும் .. "தொடர்ந்து செய்தல் .. " , "இடையறாது செய்தல் .." தான் யோக முயற்சியின் ப்ரதானத் தன்மை .. ஆஸனப் பயிற்சி ஶரீரத்தில் தேவையற்ற அஸைவுகளைக் கட்டுப் படுத்துகிறது .. ஶரீரம் நம் ஈடுபடும் செயல்களில் , லக்ஷ்யத்தை நோக்கிய நம் ப்ரயாணத்தில் ஒத்துழைக்கத் தயார் ஆகிறது .. ப்ராணாயாமப் பயிற்சி மனஸை த்ருடப் படுத்துகிறது .. மனஸ் இங்கங்கு அலையாமல் ஒரு நிலையில் அமர்கிறது .. இத்தகைய மனஸ் கவர்ச்சிகளில் மயங்குவதில்லை .. இடர்களைக் கண்டு தடுமாறுவதில்லை .. லக்ஷ்யத்தை நோக்கிய ப்ரயாணம் ஸுலபம் ஆகிறது .. ப்ராணாயாமம் மற்றும் த்யானப் பயிற்சி நம் ப்ராணனை சிதறி விடாமல் காக்கிறது .. வலுப்படுத்துகிறது ..
மனஸ் , ப்ராணன் மற்றும் இந்த்ரியங்களை வஶப்படுத்தும் இத்தகைய த்ருதி ஸாத்வீக த்ருதி ஆகும் ..
Comments
Post a Comment