ॐ கீதையில் உள்ள பதங்களும் அவற்றின் அர்தமும் (அத்யாயம் 1) 1. அத : – வேத மந்த்ரங்கள் "அத" என்ற ஶப்தத்துடன் ஆரம்பிக்கும் .. 'அத' என்ற பதம் ஸ்ரீ விநாயகரையும் குறிக்கும் .. கீதையில் ஒவ்வொரு அத்யாயமும் 'அத ப்ரதமோத்யாயஹ' ; 'அத த்விதீயோத்யாயஹ' ; என்று ஆரம்பிக்கும் .. 'அத' ஆரம்பம் என்றால் 'இதி' முடிவைக் குறிக்கும் . 2. தர்ம (I - 1) : – 'தர்ம' என்ற பதத்திற்கு மற்ற மொழிகளில் அர்தம் சொல்கிற ஸம வார்தை கிடையாது .. தர்மத்திற்கு அகன்று விரிந்த அர்தங்கள் உண்டு .. வெவ்வேறு ஸந்தர்பங்களில் வெவ்வேறு அர்தம் வெளிப்படும் .. தமிழில் தர்ம என்ற பதம் தவறாக பிச்சை , தானம் என்ற அர்தங்களில் உபயோகப் படுத்தப் படுகிறது .. தானம் அளிப்பவன் தர்மவானாக இருப்பான் என்பது நிஶ்சயம் இல்லை .. இவ்விஷயத்தில் கர்ணன் சிறந்த உதாஹரணம் .. அனைத்தையும் தாங்குவது தர்மம் .. பஶு , ப்ராஹ்மணன் , வேதங்கள் , ஸதி ஸ்த்ரீ , ஸத்ய ஶீலர்கள் , பேராஶை இல்லாதவர்கள் , பரந்த ஹ்ருதயம் கொண்டவர்கள் ஆகிய எழுவர் ஸம்ஸாரத...
राम गोपाल रत्नम्