ॐ
கீதையில் உள்ள பதங்களும் அவற்றின் அர்தமும்
(அத்யாயம் 1)
1. அத : – வேத மந்த்ரங்கள் "அத" என்ற ஶப்தத்துடன் ஆரம்பிக்கும் .. 'அத' என்ற பதம் ஸ்ரீ விநாயகரையும் குறிக்கும் .. கீதையில் ஒவ்வொரு அத்யாயமும் 'அத ப்ரதமோத்யாயஹ' ; 'அத த்விதீயோத்யாயஹ' ; என்று ஆரம்பிக்கும் .. 'அத' ஆரம்பம் என்றால் 'இதி' முடிவைக் குறிக்கும் .
2. தர்ம (I - 1) : – 'தர்ம' என்ற பதத்திற்கு மற்ற மொழிகளில் அர்தம் சொல்கிற ஸம வார்தை கிடையாது .. தர்மத்திற்கு அகன்று விரிந்த அர்தங்கள் உண்டு .. வெவ்வேறு ஸந்தர்பங்களில் வெவ்வேறு அர்தம் வெளிப்படும் .. தமிழில் தர்ம என்ற பதம் தவறாக பிச்சை , தானம் என்ற அர்தங்களில் உபயோகப் படுத்தப் படுகிறது .. தானம் அளிப்பவன் தர்மவானாக இருப்பான் என்பது நிஶ்சயம் இல்லை .. இவ்விஷயத்தில் கர்ணன் சிறந்த உதாஹரணம் ..
அனைத்தையும் தாங்குவது தர்மம் .. பஶு , ப்ராஹ்மணன் , வேதங்கள் , ஸதி ஸ்த்ரீ , ஸத்ய ஶீலர்கள் , பேராஶை இல்லாதவர்கள் , பரந்த ஹ்ருதயம் கொண்டவர்கள் ஆகிய எழுவர் ஸம்ஸாரத்தைத் தாங்குகின்றனர் ..
மனு ஸ்ம்ருதியில் தர்மம் ..
த்ருதி க்ஷமா தமோ(அ)ஸ்தேயம் ஶௌசமிந்த்ரியநிக்ரஹஹ
தீர்வித்யா ஸத்யமக்ரோதஹ தஶகம் தர்ம லக்ஷணம் ..
த்ருதி (உறுதி) , க்ஷமா (மன்னிப்பு) , தம (கட்டுப்பாடு) , அஸ்தேயம் (திருடாமை) , ஶௌசம் (தூய்மை) , இந்த்ரிய நிக்ரஹ (புலன் கட்டுப்பாடு) , தீ (பொறுமை / தைர்யம்) , வித்யா , ஸத்யம் , அக்ரோதஹ் (க்ரோதம் இன்மை , பழி வாங்கும் வெறி இல்லாமை) .. என்ற பத்தும் தர்மத்தின் லக்ஷணங்கள் .. (6 - 92) .
மநுஷ்யனை இஹ லோகத்திலும் பர லோகத்திலும் மேன்மையான நிலைக்கு அழைத்துச் செல்லக் கூடிய ஶக்தி வாய்ந்த ஸாதனம் தர்மம் .. தர்மமே மோக்ஷம் அருளக்கூடிய மார்கம் .. (புத ஸ்ம்ருதி) .
ஸ்வபாவம் அல்லது தன்மை என்றும் அர்தம் உண்டு .. ஒரு பொருள் அந்தப் பொருளாக இருப்பதற்கு ஆதாரமான தன்மை எதுவோ அது தர்மம் .. அக்னியின் தர்மம் உஷ்ணம் .. உஷ்ணத்தை நீக்கி விட்டால் அக்னி இல்லை .. கல்லின் தர்மம் கடினத் தன்மை .. ஜலத்தின் தர்மம் தரல ஸ்வபாவம் , ப்ரவாஹம் ..
கடமை என்ற அர்தமும் உண்டு .. இன்று பொதுவாக வெளியில் இருந்து திணிக்கப் படுவது கடமை என்று அறியப் படுகிறது .. செய்யும் தொழிலுடன் வருவது கடமை .. ஹிந்து தர்மத்தில் கடமை தன் நிலையில் உடன் வருவது .. ஸ்வயமாக ஏற்றுக் கொள்ளப் படுவது கடமை .. சட்டத்தினால் வரையறுக்கப் பட்டதில்லை .. என்றாலும் செய்யப் பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு உண்டு .. புத்ர தர்மம் (ஒரு புதல்வனின் கடமை) ; பித்ரு தர்மம் (பெற்றோரின் கடமை) ; ஆசார்ய தர்மம் ; க்ஷத்ரிய தர்மம் ; ராஜ தர்மம் (ராஜாவின் தர்மம்) ; ப்ரஜா தர்மம் (ப்ரஜைகளின் கடமை) .. புத்ர தர்மத்தைக் கடைப்பிடிக்காதவன் புதல்வன் இல்லை .. க்ஷத்ரிய தர்மத்தைக் கடைப்பிடிக்காதவன் க்ஷத்ரியன் இல்லை .. இவ்வாறு தன்மையும் கடமையும் ஒன்றே என ஆகின்றன .. இக்கடமைகளைச் செய்பவன் என்ற தன்மையே ஒருவனை புதல்வனாக , க்ஷத்ரியனாக , ஆசார்யனாக ஆக்குகிறது ..
கடமை என்ற அர்தமும் உண்டு .. இன்று பொதுவாக வெளியில் இருந்து திணிக்கப் படுவது கடமை என்று அறியப் படுகிறது .. செய்யும் தொழிலுடன் வருவது கடமை .. ஹிந்து தர்மத்தில் கடமை தன் நிலையில் உடன் வருவது .. ஸ்வயமாக ஏற்றுக் கொள்ளப் படுவது கடமை .. சட்டத்தினால் வரையறுக்கப் பட்டதில்லை .. என்றாலும் செய்யப் பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு உண்டு .. புத்ர தர்மம் (ஒரு புதல்வனின் கடமை) ; பித்ரு தர்மம் (பெற்றோரின் கடமை) ; ஆசார்ய தர்மம் ; க்ஷத்ரிய தர்மம் ; ராஜ தர்மம் (ராஜாவின் தர்மம்) ; ப்ரஜா தர்மம் (ப்ரஜைகளின் கடமை) .. புத்ர தர்மத்தைக் கடைப்பிடிக்காதவன் புதல்வன் இல்லை .. க்ஷத்ரிய தர்மத்தைக் கடைப்பிடிக்காதவன் க்ஷத்ரியன் இல்லை .. இவ்வாறு தன்மையும் கடமையும் ஒன்றே என ஆகின்றன .. இக்கடமைகளைச் செய்பவன் என்ற தன்மையே ஒருவனை புதல்வனாக , க்ஷத்ரியனாக , ஆசார்யனாக ஆக்குகிறது ..
மதம் என்ற அர்தமும் உண்டு .. மதம் என்பது வணங்கப் படும் தெய்வ உருவம் , வழிகாட்டும் புஸ்தகம் , வழிகாட்டிய ஆசார்யன் , வழிபாட்டு ஸ்தலம் , வழிபடும் முறை ஆகிய ஐந்தும் சேர்ந்தது .. இந்த விளக்கத்தில் க்றிஸ்தவமும் இஸ்லாமும் மதம் ஆகும் .. ஆனால் , ஶைவமும் வைஷ்ணவமும் பௌத்தமும் ஜைனமும் இவற்றைத் தாண்டி உள்ள தர்மங்கள் .. இங்கு வழிபாடு உண்டு .. ஆயின் வழிபாடு மாத்ரம் இல்லை .. அன்பு , கருணை , மன்னிப்பு ஆகிய தன்மைகள் மலர வேண்டும் .. பார்வையும் மனஸும் விரிய வேண்டும் .. இந்தத் தன்மைகளே ஒருவனை ஶைவனாகவும் வைஷ்ணவனாகவும் ஜைனனாகவும் பௌத்தனாகவும் ஆக்குகின்றன .. எனவே இவை வெறும் மதங்கள் இல்லை .. தர்மங்கள் .. அதே போல் , இந்த அனைத்துப் பாதைகளையும் தன்னுள் அரவணைக்கும் ஹிந்துவும் தர்மமே ..
3. ஆசார்ய (I - 2) : – கற்றுக் கொடுப்பவன் என்று பொதுவாக அர்தம் எடுத்தாலும் ஆசார்ய அதைத் தாண்டி உள்ளவன் . "யஹ ஆசரதி ஸ ஆசார்யஹ" 'கற்றுக் கொடுக்கும் விஷயத்திற்கேற்ப நடந்து கொள்பவன் எவனோ அவன் ஆசார்யன்' என்பதே இப்பதத்தின் ஸரியான அர்தம் .. தான் நடந்து மற்றவர்களுக்கு அவ்வழியில் நடந்திட மற்றவருக்கு ப்ரேரணை அளிப்பவன் ஆசார்யன் .. வேதத்தைக் கற்று கொடுப்பவன் ஆசார்யன் .. வேத பாராயணம் செய்ய வைப்பவன் உபாத்யாய ..
4. உப (I - 2) : – அருகில் .. இது ஒரு முழு பதம் இல்லை .. மற்றொரு பதத்துடன் சேர்ந்து வரும் (prefix) . உபவாஸம் , உபநயனம் , உபநிஷதம் , உபாஸனா , உபந்யாஸம் .. வாஸம் என்றால் வஸிப்பது .. உபவாஸம் என்றால் (பகவானுக்கு) அருகில் வஸிப்பது .. (சாப்பிடாமல் இருப்பதல்ல உபவாஸம் .. அவன் அருகில் , அவன் நினைவில் இருப்பதால் உணவு மறந்து போகும் ..) பூணூலை அணிவிக்கும் வைபவத்தை உபநயனம் என்கிறோம் .. நயனம் என்றால் அழைத்துச் செல்வது .. உபநயனம் என்றால் (குருவிற்கு) அருகில் அழைத்துச் செல்வது .. பூணூல் அணிவித்தால் குருகுலத்திற்குச் சென்று , வேதம் அத்யயனம் செய்வதுதான் நியமம் .. (ஊரைக்கூட்டி , பார்ட்டி அளித்து , பரிசுகள் வாங்கும் கொண்டாட்டம் இல்லை ..) பரமனுக்கு அருகில் அழைத்துச் செல்வது உபநிஷத் .. வேதத்தின் இறுதியில் இருப்பதால் வேதாந்தம் என்றும் அறியப்படுகின்றன .. வேதம் முழுவதுமே கடவுளைப் பற்றியதுதான் என்றாலும் உபநிஷதங்களில் பரமாத்ம தத்வம் மாத்ரமே உள்ளன .. மற்ற பகுதிகளில் காம்ய கர்மங்களின் விளக்கங்கள் உள்ளன .. எனவே , உபநிஷதங்கள் ஸ்ரீ பரமனின் ஸாரம் எனலாம் ..
5. ஶிஷ்ய (I -3) : – ஶிஷ்யன் அல்லது மாணவன் என்பது நேரடி அர்தம் .. ஆசார்யனின் கட்டளைகளை , கட்டுப்பாடுகளை ஸ்வயமாக ஏற்று , கடைபிடிப்பவன் ஶிஷ்யன் .. கற்றுக் கொள்ளுதல் ப்ரதானம் இல்லை .. ஶிஷ்யனிடம் ஶ்ரத்தை மேன்மேலும் ஆழமாக , குருவின் பால் பக்தியும் அவர் கூற்றை ஏற்றுக் கொள்ளும் உறுதியும் மேன்மேலும் அதிகமாக , அவனது கற்கும் திறனும் அதிகமாகும் .. அவனுள் ஆஶ்சர்யமான மாற்றங்கள் ஏற்படுவதும் துரிதமாகும் .. ஆங்க்ல வார்தையான ‘Disciple’ இதை அழகாக விளக்குகிறது .. ‘Discipline’ என்பதே மூல வார்தை . Discipline தான் ஒரு ஶிஷ்யனின் முக்ய அடையாளம் .. குருகுலத்தில் நியமங்களும் கட்டுப்பாடுகளும் ப்ரஹ்மசர்யத்தின் எதிர்ப்பார்ப்புகளும் கடினமானவை .. இவற்றை ஆனந்தமாக ஏற்றுக் கொள்பவன் ஶிஷ்யன் ..
மிகச்சிறிய வயஸில் உபநயனம் செய்து வைக்கும் வழக்கம் இந்த நோக்கில் ஏற்பட்டது .. உலக வாழ்க்கையின் ஸுகங்கள் அறிமுகம் ஆவதற்கு முன் குருகுல வாஸத்தை ஏற்றுக் கொள்கிறான் .. ஶிஷ்யனின் இந்தத் தகுதியைப் புரிந்து கொள்ளாமல் , உபமன்யு போன்ற உதாஹரணங்களைப் புரிந்து கொள்ள முடியாது ..
மிகச்சிறிய வயஸில் உபநயனம் செய்து வைக்கும் வழக்கம் இந்த நோக்கில் ஏற்பட்டது .. உலக வாழ்க்கையின் ஸுகங்கள் அறிமுகம் ஆவதற்கு முன் குருகுல வாஸத்தை ஏற்றுக் கொள்கிறான் .. ஶிஷ்யனின் இந்தத் தகுதியைப் புரிந்து கொள்ளாமல் , உபமன்யு போன்ற உதாஹரணங்களைப் புரிந்து கொள்ள முடியாது ..
6. த்விஜ (I - 7) : – ரெண்டு முறை பிறந்தவன் . ‘ஜ’ என்ற எழுத்து பிறப்பைக் குறிக்கும் .. ஜலத்தில் பிறந்தவள் 'ஜலஜா' .. சேற்றில் பிறந்தவள் 'பங்கஜா' .. அடுத்து பிறந்த தம்பி 'அநுஜ' என்றால் தங்கை 'அநுஜா' .. த்வி என்றால் ரெண்டு .. த்விஜ என்றால் ரெண்டு முறை பிறந்தவன் .. முதல் பிறப்பு ஶரீரத்துடன் தோன்றிய ஜன்மம் .. க்ஞானப் பார்வைத் திறந்திட குருவை அடைதல் ரெண்டாம் பிறப்பும் .. மூன்று வர்ணங்களுக்கும் பொருந்தும் என்றாலும் பொதுவாக ப்ராஹ்மணனை மாத்ரம் குறிக்கும் பதம் இது .. (முட்டையாகப் பிறந்து றக்கை முளைத்து பறவையாக வெளிப்படும் பறவைகளுக்கும் த்விஜ என்ற பதம் பொருந்தும் ..)
7. வ்ருத்த (I - 12) : – பக்வம் அல்லது முதிர்ச்சி அடைந்தவன் .. ‘வயோதிகன்’ என்ற பதம் ஶரீரத்தின் வயஸைக் குறிக்கும் .. ஒரு ஸநாதன ஹிந்து சிறு வயஸில் ப்ரஹ்மசர்யத்தை ஏற்கிறான் .. வித்யைகளையும் கலைகளையும் பயின்று க்ஞானத்தைப் பெறுகிறான் .. அடுத்து க்ருஹஸ்த ஆஶ்ரமத்தில் நுழைகிறான் .. விவாஹம் புரிந்து கொண்டு வாழ்க்கையின் பல்வேறு அநுபவங்களைப் பெறுகிறான் .. இதன் விளைவாக , அவனுள் முதிர்ச்சி ஏற்பட வேண்டும் .. அவனே வ்ருத்தன் ..
ஒரு மொழியின் வார்தைகள் அந்த ஸமுதாயத்தின் கண்ணோட்டத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக அமைகின்றன .. இந்த்ரிய ஸுகத்தில் மூழ்கி இருக்கும் ஒரு ஸமுதாயத்தில் ‘வயோதிகன்’ என்பது வஸை வார்தை ஆகி விடுகிறது .. இந்த்ரிய ஸுகங்களை அநுபவிக்க முடியாதவன் என்று அர்தம் ஆகி விடுகிறது .. எவரும் வயோதிகன் ஆக விரும்புவதில்லை .. வயோதிகனாவதைத் தவிர்க்க முடியாதல்லவா !! ஆதலால் வயஸை மறைக்கும் முயற்சிகள் நடக்கின்றன .. அலங்கார உடைகள் , தலை மயிருக்கு ஸாயம் , பொய்ப்பல் என்று தொடக்கி ஸிலிகான் பேட் , வயாக்ரா வரை பல்வேறு முயற்சிகள் ..
ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள பதங்கள் ஹிந்து கண்ணோட்டத்தை அறிவிக்கின்றன .. வ்ருத்தன் மர்யாதைக்குரிய ஒரு பதம் .. வாழ்க்கையை அநுபவித்ததன் விளைவாக ஸரி - தவறை அறிந்து , ஸரியானதைத் தேர்ந்தெடுக்கும் மனமுதிர்ச்சி அடைந்தவன் வ்ருத்தன் .. ஒளவையார் , ஆதி ஶங்கரன் , திருக்ஞான ஸம்பந்தர் போன்றவர் இள வயஸில் வ்ருத்தன் ஆனவர்கள் .. யயாதி போன்றவர் வயஸான பிறகும் வ்ருத்தன் ஆக மறுத்தவர்கள் .. இன்றைய உலகத்தில் யயாதிகளே அதிகம் தென்படுகின்றனர் ..
8. ஶங்க (I - 12) : – ஶங்கு . வழிபாட்டில் இது ஒரு முக்ய ஸாதனம் .. நம் இறை உருவங்கள் அனைத்தும் கையில் ஶங்கு வைத்திருப்பர் .. ஶங்கு புநிதமானது .. ஶங்கொலி தெய்வீகமானது .. ஶங்கொலி எழுப்புவது இறை வழிபாட்டில் ஒரு உபசாரம் ஆகும் .. ஶங்கொலிக்கு ஶுத்தப் படுத்தும் ஆற்றல் உண்டு .. மரணம் நிகழ்ந்த வீட்டில் , ஶவ ஊர்வலத்தில் ஶங்கொலி எழுப்பும் வழக்கம் உண்டு .. இறைவனுக்கு ஶங்கினால் அபிஷேகம் செய்யப் படுகிறது .. ஜனங்களை பௌத்த மதத்தில் இருந்து ஹிந்து தர்மத்திற்கு மாற்றிட , ஆதி ஶங்கரர் ஶங்கொலியைப் பயன்படுத்தினார் .. ஆரம்பத்தில் மந்த்ரத்தைக் காதில் ஓதி , ஒவ்வொருவராக மாற்றினார் .. பின்னர் , கங்கை ஜலத்தைத் தெளித்து , ஒரே ஸமயத்தில் நூற்றுக்கணக்கான பௌத்தர்களை மாற்றினார் .. பின்னர் , ஶங்கொலி செய்து , அதைக் கேட்ட அனைவரும் ஹிந்து தர்மத்திற்கு மாறி விட்டனர் என்று அறிவித்தார் .. யுத்த க்ஷேத்ரத்தில் ஶங்கொலிக்கு ஒரு முக்யப் பங்கு உண்டு ..
9. த்வஜ (I - 20) : – த்வஜ என்பது கொடி .. அனைத்து பகவத் ஸ்வரூபங்களும் தம் கையில் த்வஜம் ஏந்தி இருப்பர் .. த்வஜமும் த்வஜஸ்தம்பமும் ஆலயத்தின் முதலிடம் வஹிக்கின்றன .. ஆலயத்தில் முதலில் வணங்கப் படுவது த்வஜஸ்தம்பமே .. ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யப் படுவதும் த்வஜஸ்தம்பத்தின் அருகில்தான் ..
வீட்டு வாஸலில் ஒரு மூங்கில் நட்டு , அதில் பகவத் த்வஜம் ஏற்றும் வழக்கம் தென்னாஃப்ரிக , மேற்கிந்திய ஹிந்து ஸமுதாயத்தில் உண்டு .. அதற்கு நித்ய பூஜை செய்யும் வழக்கம் உண்டு .. வருஷத்திற்கு ஒரு முறை , அபிஷேக ஆராதனையுடன் ஒரு விஶேஷ வைபவம் நடந்திடும் .. இதற்கு ஒரு அழகான பின்னணி உண்டு .. இந்த ப்ரதேஶங்களுக்கு ஹிந்துக்கள் 1850களில் கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டனர் .. அங்கு வெள்ளைக்காரனின் கரும்புத் தோட்டங்களில் கடும் உழைப்பிற்கு ஆளாயினர் .. ஹிந்துக்களின் வாழ்வின் மையம் தெய்வம் .. "கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்" என்பது நம் கோட்பாடு .. அவன் தன் அழகிய க்ராமத்தில் இருந்து பிடுங்கப் பட்டு , அந்ய தேஶங்களில் எறியப் பட்டான் .. ப்ராஹ்மணனும் ஸமயத்தை அறிந்த மற்றவர்களும் நடுக்கடலில் வீசப்பட்டனர் .. கல்வி கிடையாது .. ஸமயம் கிடையாது .. உழைப்பு மாத்ரமே அவனிடம் எதிர்பார்க்கப் பட்டது .. அந்த அடிமைத் தொழிலாளிகள் நாள் முழுவதும் உழைத்து விட்டு , அர்த ராத்ரியில் அருகில் உள்ள மூங்கில் புதரில் நுழைந்து , ஒரு சிறிய இடத்தை ஶுத்தம் செய்து , அங்கு ஆலய கோபுரம் போல் ஒரு மூங்கிலை நட்டு , அதனடியில் மாரியம்மன் , ஹனுமான் அல்லது ஶிவனின் ஶிலை வடித்து , வணங்கினர் .. தாம் அறிந்த துலஸி ராமாயணப் பாடல்களைப் பாடி வந்தனர் .. அந்ய தேஶம் .. இவர்களோ அடிமைகள் .. படிக்காதவர்கள் .. யஜமானன் வேற்று மநுஷ்யன் .. வேற்று மதத்தை ஸார்ந்தவன் .. இவனை மதம் மாற்றிட அனைத்து வழிகளையும் ஆதரிப்பவன் .. இந்த விபரீத சூழ்நிலையில் 180 வர்ஷங்கள் ஹிந்துக்களாகத் தொடர்ந்திட , அவனுக்கு அவஶ்யமான மன உறுதியை அளித்தது இந்த த்வஜ வழிபாடு .. காலப்போக்கில் அடிமை வாழ்வு முடிந்த பின்னர் , இந்த மூங்கில் ஆலயங்கள் வீடுதோறும் முளைத்து விட்டன ..
(இன்று அராபியாவில் வாழும் ஹிந்துவின் நிலையும் இதுவேதான் .. அடிமை .. ஒளிந்து மறைந்து வழிபடுகிறான் .. ரம்ஜான் மாஸத்தில் பயந்து பயந்து திருடனைப் போல் உண்கிறான் .. அங்கும் ஆயிரக்கணக்கில் ரஹஸ்ய வழிபாட்டு ஸ்தலங்களை உருவாக்கி இருக்கிறான் .. என்றேனும் ஒரு நாள் அங்கு மத ஸ்வாதந்தர்யம் கிடைத்தால் , ஒரே ராத்ரியில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் முளைத்து விடும் .. மத ஸ்வாதந்தர்யமா ?? அரேபியாவிலா ?? நீங்கள் கிண்டலாய்க் கேட்கலாம் .. காலத்தின் ரஹஸ்யப் பெட்டகத்தில் என்னவெல்லாம் புதைந்து உள்ளனவோ , எவர் அறிவார் ??
நாட்டை ஆளும் ராஜா இறைவனின் ரூபமாகவே கருதப் படுகிறான் .. எனவே , அவனுக்கும் த்வஜம் உண்டு .. ஹிந்து ராஜாக்கள் அனைவரும் நம் பாரத தேஶத்துப் பண்பாட்டுச் சின்னமான பகவத் த்வஜம் அல்லது காவிக் கொடியை த்வஜமாக ஏற்றனர் .. தத்தம் ராஜ்யத்தின் சின்னத்தைப் பொறித்தக் காவி கொடி ..
ஸந்ந்யாஸிகளும் பகவத் த்வஜத்தை ஏந்தினர் .. இது தர்ம த்வஜம் எனப்பட்டது .. பகவானையும் தர்மத்தையும் நினைவிற்குக் கொண்டு வரும் சின்னமாக அமைந்தது பகவத் த்வஜம் ..
ஒரு காலத்தில் யாக ஶாலைகள் நம் ஸமுதாயத்தின் மையமாக இருந்தன .. அக்காலத்தில் ஆலயங்கள் கிடையாது .. நாளடைவில் ஆலயங்கள் தோன்றி , ஸமுதாய மையங்கள் ஆகிவிட்ட பின்னர் , அக்னி ஜ்வாலை வடிவில் இருக்கும் காவி த்வஜத்தை ஆலய உச்சிகளில் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும் ..
10. ப்ரிய (I - 23) : – விருப்பம் . நமக்குள் நித்யம் நடந்திடும் போராட்டத்தை நினைவுப் படுத்திடும் பதம் இது .. "எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ?? ப்ரியஸா ஶ்ரேயஸா ?? பிடித்திருப்பதையா எனக்கு நன்மை பயக்கக் கூடியதையா ?? ஸாமான்ய மநுஷ்யன் ப்ரியத்தையே நாடுகிறான் .. இந்த ஶ்லோகத்தில் , "துர்புத்தி கொண்ட துர்யோதனன் மேல் ப்ரியம் வைத்தவர்கள் அவனுக்குத் துணையாக நிற்கின்றனர்" என்கிறான் அர்ஜுனன் .. அவர்கள் ஶ்ரேயஸை நாடி இருந்தால் , யுதிஷ்டிரனை ஆதரித்து இருக்க வேண்டும் அல்லவா !! த்ருவனின் தந்தை உத்தானபாதன் முன் இருந்த கேள்வியும் இதுதான் .. ப்ரியமா ஶ்ரேயஸா ?? அவனுக்குப் ப்ரிய மனைவி ஸுருசி (ருசி என்றால் ப்ரியம்) .. அவளைத் தன்னருகில் வைத்து இருந்தான் .. ஸுநீதியைத் தள்ளி வைத்திருந்தான் (எது ஸரியோ அது நீதி) .. பொதுவாக , மநுஷ்யன் சரியானதைப் பற்றுவதில்லை .. விருப்பமானதையே பற்றுகிறான் , அது கேடு விளைவிப்பதாக இருந்தாலும் ..
11. மனஸ் (I - 30) : – நம்மால் மனஸை உணர முடிகிறது .. எனினும் அதை அறிய முடிவதில்லை .. நம் ஸ்தூல ஶரீரம் உலக வாழ்க்கைக்கு ஒரு ஸாதனம் ஆகும் .. அது பஞ்ச பூதங்களால் ஆனது .. ஶரீரத்தில் ஐந்து க்ஞான இந்த்ரியங்களும் ஐந்து கர்ம இந்த்ரியங்களும் உண்டு .. இத்துடன் ஸூக்ஷ்ம ஶரீரங்களும் நமக்கு உண்டு .. அவற்றில் ஒன்று மனஸ் .. புத்தி , சித்தம் மற்றும் அஹங்காரம் ஆகியவை மற்ற மூன்று ஸூக்ஷ்ம ஶரீரங்கள் .. இவை அந்தஹகரணம் எனப்படுகின்றன ..
‘மனஶ்சஞ்சலம் அஸ்திரம்’ (VI - 26) , ‘ப்ரமாதிபலவத்த்ருடம்’ (VI - 34) என்று கீதை மனஸைப் பற்றிக் கூறுகிறது .. சஞ்சலமானது .. நிலை இல்லாதது .. பிடிவாதம் நிறைந்தது .. வலிமையானது .. வாழ்வின் ஸுக து:கங்களை அனுபவிப்பது மனஸே .. வரவேற்பும் எதிர்ப்பும் , மர்யாதையும் அபமானமும் , விருப்பும் வெறுப்பும் , கீர்தியும் அபகீர்தியும் , ப்ரியமும் வெறுப்பும் , கவலையும் ஶோகமும் உத்ஸாஹமும் மற்ற அனைத்து உணர்ச்சிகளும் மனஸ் அநுபவிப்பவை .. மனஸ்தான் இல்லாததை இருப்பதாகக் கல்பனை செய்கிறது .. நிதர்ஶன ஸத்யத்தை ஏற்க மறுப்பதும் மனஸே .. அநுகூலமான ஸுகமான அநுபவங்கள் மீண்டும் மீண்டும் கிடைக்க வேண்டும் என்று ஆஶைப்படுவதும் மனஸே .. ப்ரதிகூலமான , கசப்பான அநுபவங்கள் மீண்டும் கிடைக்கக் கூடாது என்று தவிப்பதும் மனஸே .. மனஸிற்கு விளைவுகளைப் பற்றியோ , நலன் கேடு பற்றியோ , அநுகூல ப்ரதிகூல ஃபலன்களைப் பற்றியோ கவலை கிடையாது .. ஒருவனை உணர்ச்சி வேகத்தில் அஸாதாரண கார்யங்களைச் செய்யத் தூண்டுவதும் மனஸே .. ஸாஹஸம் , வன்முறை , குற்றம் என்று எதையும் செய்யத் தூண்டும் .. கீதை ஸமத்வம் பேசுகிறது .. இருமைகளால் பாதிக்கப் படாத மனஸை வலியுறுத்துகிறது .. ஆன்மீகம் மனோ - நாஶம் என்கிறது .. மனஸ் நாஶம் ஆக வேண்டும் .. புத்தி அல்லது விவேகம் ஒளியுற வேண்டும் ..
12. ஶ்ரேயஸ் (I - 31) : – மேன்மையைத் தரக் கூடியது .. ஜீவன் முக்தி அல்லது மோக்ஷமே மநுஷ்யனுக்கு ஶ்ரேயஸ் ஆனது .. விருப்பங்களைத் துரத்தாமல் விவேகத்தைப் பயன்படுத்தி , ஶ்ரேயஸ் ஆனதைத் தேர்ந்தெடுப்பவன் மேன்மையானவன் .. ஐந்து வயஸுக் குழந்தையான த்ருவன் தன் தந்தையின் மடியில் அமர முயன்றான் .. தடுக்கப் பட்டான் .. அழுத வண்ணம் தாய் ஸுநீதியிடம் வந்தான் .. ஸுநீதி மிக உயர்ந்த தாய் .. குழந்தை ஐந்தே வயஸு நிரம்பியது என்பதை மறந்தாள் .. கணவனிடம் இருந்து பிரிந்த தனக்கு இருக்கும் ஒரே ஸஹாயம் இந்தக் குழந்தைதான் என்பதை மறந்தாள் .. இந்த எண்ணங்கள் மேலோங்கி இருந்தால் , குழந்தையைத் தூக்கி அரவணைத்து முத்தங்கள் பொழிந்து , ஆறுதல் அளிக்க முயன்றிருப்பாள் .. அது அவளது மனஸிற்குப் பிடித்த முயற்சியாகவும் இருந்திருக்கும் .. அப்படி செய்திருந்தால் நாம் ஒரு த்ருவனை இழந்திருப்போம் .. ஆனால் , ஸுநீதி அவனுடைய ஶ்ரேயஸ்க்கான பாதையை அவனுக்குக் காட்டினாள் .. ஆரண்யத்திற்குள் நுழைந்து , ஸ்ரீ நாராயணனைக் குறித்து தபஸ் செய்திட ஊக்கம் அளித்தாள் .. அவனை ஆஶீர்வதித்து , காட்டிற்குள் அநுப்பி வைக்கிறாள் .. மஹாபாரத யுத்தத்தில் அர்ஜுனன் திடீரென ஶோகத்தில் மூழ்கி , யுத்தம் புரிய மறுத்தான் .. தன் நிர்ணயத்திற்கு ஸாதகமாய் பல்வேறு வாதங்களை முன் வைக்கிறான் .. ஸ்ரீ க்ருஷ்ணன் அவனுடைய கண்ணீரிலோ வாதங்களிலோ மயங்க மறுத்தான் .. அவனுக்கு ஶ்ரேயஸ் ஆனதை கீதை ரூபத்தில் வழங்குகிறான் ..
13. ஆததாயினஹ் (I - 36) : – பயங்கரவாதி .. அர்ஜுனன் இங்கு துர்யோதனன் மற்றும் அவனது ஸஹோதரர்களைக் குறிப்பிட இப்பதத்தினை உபயோகப் படுத்துகிறான் .. வஶிஷ்ட ஸ்ம்ருதி , "தீ வைப்பவன் , விஷம் கலப்பவன் , ஆயுதம் எடுத்துக் கொல்லத் தயங்காதவன் , தனத்தைப் பறிப்பவன் , பூமியை ஆக்ரமிப்பவன் , பெண்ணைக் கடத்துபவன் பயங்கரவாதி" என்கிறது .. இன்று செய்திப் பத்ரிக்கைகள் தீவ்ரவாதி என்றொரு பதத்தை பயங்கரவாதி என்ற அர்தத்தில் உபயோகப் படுத்துகின்றன .. நாம் ஒவ்வருவரும் தீவ்ரவாதியாக இருக்க முடியும் .. ஏதோ ஒரு விஷயத்தில் தீவ்ரமாக இருக்க முடியும் ..
14. பாப (I - 36) : – மஹாபாரதம் பாபத்தை , "பாபாய பர பீடனம்" என்று வர்ணிக்கிறது .. மற்ற உயிர்களுக்கு கஷ்டம் அல்லது வேதனை கொடுப்பது பாபம் .. பாபம் - புண்யம் என்ற இரு பதங்கள் முழு ஹிந்து ஸமுதாயத்தையும் பல நூறு வர்ஷங்கள் மேன்மையான ஒரு பாதையில் வைத்திருக்கின்றன .. ஹிந்துவிற்கு தம் வாழ்வின் நோக்கத்தை அளித்துள்ளன .. "அதிக பக்ஷ புண்யம் சேர்க்க வேண்டும் .. பாபம் தவிர்க்க வேண்டும் .." என்ற குறிக்கோள் ஹிந்து வாழ்க்கையில் ஒரு எளிமையான வழிகாட்டி ஆகி விட்டது .. அதனால்தான் மிகக் குறைவான போலீஸ் தேவைப்படும் ஒரு ஸமுதாயமாக ஹிந்து ஸமுதாயம் விளங்குகிறது .. அந்ய தேஶங்களில் குடி பெயர்ந்திருக்கும் ஹிந்துக்களில் இந்த விஷயம் பளிச்சென்று கண்ணில் படும் ..
பாபம் என்பது ஸூக்ஷ்மமானது .. நாம் புண்யம் என்று கருதும் ஒரு செயல் வேறு ஏதோ ஜீவனுக்குக் கஷ்டம் கொடுப்பதாக இருக்கலாம் .. கோவிலில் ஸ்வாமி தர்ஶனம் புண்ய கார்யம் தான் .. ஆனால் வேறு ஒருவரின் தர்ஶனத்தைத் தடுக்கும் விதமாக நாம் நின்றிருந்தால் அது பாபமே .. அதே போல் அன்னதானம் , பூஜை போன்ற கர்மங்களும் .. மேலும் புண்ய கர்மமாக இருந்தாலும் மனசில் நோக்கம் பாப மயமாக இருந்தால் , செய்யும் கர்மமும் பாபமே .. அதனால் தான் பாபங்கள் மற்றும் புண்யங்களின் பட்டியல் அறிவிக்கப் படவில்லை .. அவரவர்தான் ஸ்வய நினைவுடன் பாப புண்யங்களை அறிந்து செயல்பட வேண்டும் ..
பாபம் என்பது ஸூக்ஷ்மமானது .. நாம் புண்யம் என்று கருதும் ஒரு செயல் வேறு ஏதோ ஜீவனுக்குக் கஷ்டம் கொடுப்பதாக இருக்கலாம் .. கோவிலில் ஸ்வாமி தர்ஶனம் புண்ய கார்யம் தான் .. ஆனால் வேறு ஒருவரின் தர்ஶனத்தைத் தடுக்கும் விதமாக நாம் நின்றிருந்தால் அது பாபமே .. அதே போல் அன்னதானம் , பூஜை போன்ற கர்மங்களும் .. மேலும் புண்ய கர்மமாக இருந்தாலும் மனசில் நோக்கம் பாப மயமாக இருந்தால் , செய்யும் கர்மமும் பாபமே .. அதனால் தான் பாபங்கள் மற்றும் புண்யங்களின் பட்டியல் அறிவிக்கப் படவில்லை .. அவரவர்தான் ஸ்வய நினைவுடன் பாப புண்யங்களை அறிந்து செயல்பட வேண்டும் ..
15. லோப (I - 38) : – பேராஶை . ஒரு வஸ்துவோ அநுபவமோ நிலையோ மேலும் மேலும் வேண்டும் என்ற அவா லோபம் .. தற்போதைய நிலையைப் பற்றி அத்ருப்தி அல்லது ஸந்தோஷம் அற்ற நிலை லோபத்திற்கு அடிப்படை .. மநுஷ்யனை வீழ்த்தக் கூடிய ஆற்றல் வாய்ந்த லோபம் மனஸின் ஆறு எதிரிகளில் ஒன்று .. சிந்தனையை , விவேகத்தை அழித்து விடும் பலமான ஆயுதம் லோபம் .. லோபி தன்னிடம் இருப்பதை அநுபவிப்பதில்லை .. மேலும் மேலும் சேகரிப்பதில் மூழ்குகிறான் .. பணத்தைச் செலவழித்து அநுபவிப்பதை விட , எண்ணுவதில் அதிக நேரம் செலவழிப்பான் .. அதிகம் ஆகும் போது மகிழ்வான் .. குறைந்தால் வருந்துவான் ..
16. சேதஸ (I - 38) : – விழிப்புள்ள மனஸ் .. ஸத்தை உணர்ந்த மனஸ் .. ஸத்தைத் தேர்வு செய்யும் மனஸ் .. ஜடம் - சேதனை இவை ரெண்டும் எதிர்ப்பதங்கள் .. ஜடம் தேக்க நிலை , உயிரற்ற நிலை , உணர்வற்ற நிலை .. சேதனம் உயிருள்ள , உணர்வுள்ள நிலை .. இந்த்ரிய ஸுகத்தில் திளைத்திருக்கும் மனஸு ஒரு வகை போதையில் , ஸ்வய நினைவற்ற நிலையில் இருக்கும் .. சேதஸ் என்பது இந்நிலையைக் கடந்துள்ள மனஸ் ..
17. ஸநாதன (I - 40) : – என்றென்றும் இருப்பது .. என்றென்றும் இருக்கப் போவது .. ஸம்ஸாரம் மாறிக் கொண்டே இருப்பது .. அழியக்கூடியது .. உருவானது அழிய வேண்டும் என்பதே நியதி .. தோன்றியது மறைய வேண்டும் .. ஆனால் சத்யம் ஸநாதனமானது .. தர்மம் ஸநாதனமானது .. அது அழிவதில்லை .. ஹிந்து தர்மத்தின் மற்றொரு பெயர் ஸநாதன தர்மம் .. ஸநாதன மூல்யங்களை , ஸத்ய தர்மத்தைப் பறைசாற்றுவதால் ..
18. வர்ண (I - 41) : – நிறம் என்பதுதான் நேரடி அர்தம் .. ஆனால் , இங்கு மநுஷ்ய ஸமுதாயத்தின் வர்ணங்களை இப்பதம் குறிக்கிறது .. அச்சுத் துறையில் மூன்று அடிப்படை நிறங்கள் உண்டு .. இம்மூன்றின் கலவைகள் ஆயிரக்கணக்கான நிறங்களாக பரிணமிக்கின்றன .. அதே போல் , மநுஷ்ய ஸமுதாயத்திலும் நான்கு அடிப்படை வர்ணங்கள் உண்டு .. ப்ராஹ்மணன் , க்ஷத்ரியன் , வைஶ்யன் மற்றும் ஶூத்ரன் .. சிந்தனையாளன் , ஆசார்யன் , ஆராய்ச்சியாளன் , க்ஞானத்தை நாடுபவன் , க்ஞானத்தைப் பகிர்பவன் ப்ராஹ்மணன் .. ஆள்பவன் , காப்பவன் , ஶக்தியை உபாஸிப்பவன் , போராடுபவன் க்ஷத்ரியன் .. செல்வத்தைப் பெருக்குபவன் வைஶ்யன் .. பின் தொடர்பவன் , உடல் உழைப்பாளி , உதவுபவன் ஶூத்ரன் .. இந்த விளக்கத்தைப் படித்தவுடன் வர்ண அமைப்பு தொழில் ரீதியான பிரிவினை என்று நினைக்கத் தோன்றும் .. வர்ண அமைப்பில் தொழில் அல்லாமல் மனப்பான்மை அல்லது ஸ்வபாவத்தில் உள்ள வேறுபாடுகள் தான் ஸமூஹப் பிரிவுகளுக்கு அடிப்படை .. ப்ராஹ்மணன் சிந்தனையாளன் என்றால் புத்தி அவனது ப்ரதான அங்கம் .. காப்பவன் க்ஷத்ரியன் .. எனவே , பாஹுபலம் தான் அவனது ப்ரதான அம்ஶம் .. புருஷ ஸூக்தம் இதை அழகாக விளக்குகிறது .. ‘ப்ராஹ்மணன் புருஷனின் தலையில் இருந்து , முகத்தில் இருந்து தோன்றினான் .. க்ஷத்ரியன் புருஷனின் புஜத்தில் இருந்து தோன்றினான் .. வைஶ்யன் புருஷனின் தொடைகளில் இருந்தும் ஶூத்ரன் புருஷனின் பாதங்களில் இருந்தும் தோன்றினர் .. க்ஞானத்திற்கு புத்தி ப்ரதானம் .. ஶக்திக்கு புஜம் ப்ரதானம் .. தொடை எலும்புகளில் உள்ள மஜ்ஜையில் புதிய ரக்தம் உத்பத்தி ஆகிறது .. அதுவே முழு ஶரீரத்திற்கும் ஆற்றல் மற்றும் ஸத்துக்களை அளிக்கிறது .. அதே போல் , வைஶ்யன் ஸமுதாயத்தில் செல்வத்தைப் பெருக்குகிறான் .. அவன் புருஷனின் தொடைகளில் இருந்து தோன்றினான் .. கால்களே நம் ஶரீரத்தின் சிறந்த ஸேவகன் .. சேவைக்குப் பணிவே ப்ரதானம் .. எனவே , ஶூத்ரன் புருஷனின் பாதங்களில் இருந்து தோன்றினான் என்கிறது புருஷ ஸூக்தம் .. இந்த விளக்கத்தைக் கேட்டவுடன் வர்ண அமைப்பு உயர்வு தாழ்வு பேதங்களைக் கற்பிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது .. இயற்கை வேறுபாடுகள் நிறைந்தது .. அவற்றில் உயர்வு - தாழ்வு என்ற முத்ரையைப் பதிப்பது மநுஷ்யனின் அறியாமை .. வேறுபாடுகளைக் காண மறுப்பதோ ஏற்க மறுப்பதோ அறியாமை அல்லது ஆணவம் .. இயற்கை இதைப் பற்றி கவலைப் படுவதில்லை .. அது வேறுபாடுகள் நிறைந்து தழைக்கிறது .. இந்நான்கு வர்ணங்கள் ஸமுதாயத்தில் உள்ள வேறுபாடுகள் .. உயர்வு தாழ்வு பேதங்கள் இல்லை .. மநுஷ்ய ஸமுதாயத்தில் அவ்வேறுபாடுகள் உள்ளன .. ஸ்தாவர , ப்ராணி உலகத்திலும் உள்ளன ..
18. வர்ண (I - 41) : – நிறம் என்பதுதான் நேரடி அர்தம் .. ஆனால் , இங்கு மநுஷ்ய ஸமுதாயத்தின் வர்ணங்களை இப்பதம் குறிக்கிறது .. அச்சுத் துறையில் மூன்று அடிப்படை நிறங்கள் உண்டு .. இம்மூன்றின் கலவைகள் ஆயிரக்கணக்கான நிறங்களாக பரிணமிக்கின்றன .. அதே போல் , மநுஷ்ய ஸமுதாயத்திலும் நான்கு அடிப்படை வர்ணங்கள் உண்டு .. ப்ராஹ்மணன் , க்ஷத்ரியன் , வைஶ்யன் மற்றும் ஶூத்ரன் .. சிந்தனையாளன் , ஆசார்யன் , ஆராய்ச்சியாளன் , க்ஞானத்தை நாடுபவன் , க்ஞானத்தைப் பகிர்பவன் ப்ராஹ்மணன் .. ஆள்பவன் , காப்பவன் , ஶக்தியை உபாஸிப்பவன் , போராடுபவன் க்ஷத்ரியன் .. செல்வத்தைப் பெருக்குபவன் வைஶ்யன் .. பின் தொடர்பவன் , உடல் உழைப்பாளி , உதவுபவன் ஶூத்ரன் .. இந்த விளக்கத்தைப் படித்தவுடன் வர்ண அமைப்பு தொழில் ரீதியான பிரிவினை என்று நினைக்கத் தோன்றும் .. வர்ண அமைப்பில் தொழில் அல்லாமல் மனப்பான்மை அல்லது ஸ்வபாவத்தில் உள்ள வேறுபாடுகள் தான் ஸமூஹப் பிரிவுகளுக்கு அடிப்படை .. ப்ராஹ்மணன் சிந்தனையாளன் என்றால் புத்தி அவனது ப்ரதான அங்கம் .. காப்பவன் க்ஷத்ரியன் .. எனவே , பாஹுபலம் தான் அவனது ப்ரதான அம்ஶம் .. புருஷ ஸூக்தம் இதை அழகாக விளக்குகிறது .. ‘ப்ராஹ்மணன் புருஷனின் தலையில் இருந்து , முகத்தில் இருந்து தோன்றினான் .. க்ஷத்ரியன் புருஷனின் புஜத்தில் இருந்து தோன்றினான் .. வைஶ்யன் புருஷனின் தொடைகளில் இருந்தும் ஶூத்ரன் புருஷனின் பாதங்களில் இருந்தும் தோன்றினர் .. க்ஞானத்திற்கு புத்தி ப்ரதானம் .. ஶக்திக்கு புஜம் ப்ரதானம் .. தொடை எலும்புகளில் உள்ள மஜ்ஜையில் புதிய ரக்தம் உத்பத்தி ஆகிறது .. அதுவே முழு ஶரீரத்திற்கும் ஆற்றல் மற்றும் ஸத்துக்களை அளிக்கிறது .. அதே போல் , வைஶ்யன் ஸமுதாயத்தில் செல்வத்தைப் பெருக்குகிறான் .. அவன் புருஷனின் தொடைகளில் இருந்து தோன்றினான் .. கால்களே நம் ஶரீரத்தின் சிறந்த ஸேவகன் .. சேவைக்குப் பணிவே ப்ரதானம் .. எனவே , ஶூத்ரன் புருஷனின் பாதங்களில் இருந்து தோன்றினான் என்கிறது புருஷ ஸூக்தம் .. இந்த விளக்கத்தைக் கேட்டவுடன் வர்ண அமைப்பு உயர்வு தாழ்வு பேதங்களைக் கற்பிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது .. இயற்கை வேறுபாடுகள் நிறைந்தது .. அவற்றில் உயர்வு - தாழ்வு என்ற முத்ரையைப் பதிப்பது மநுஷ்யனின் அறியாமை .. வேறுபாடுகளைக் காண மறுப்பதோ ஏற்க மறுப்பதோ அறியாமை அல்லது ஆணவம் .. இயற்கை இதைப் பற்றி கவலைப் படுவதில்லை .. அது வேறுபாடுகள் நிறைந்து தழைக்கிறது .. இந்நான்கு வர்ணங்கள் ஸமுதாயத்தில் உள்ள வேறுபாடுகள் .. உயர்வு தாழ்வு பேதங்கள் இல்லை .. மநுஷ்ய ஸமுதாயத்தில் அவ்வேறுபாடுகள் உள்ளன .. ஸ்தாவர , ப்ராணி உலகத்திலும் உள்ளன ..
19. பிண்டோதக (I - 42) : – ஹிந்து பத கோஶத்தில் மாத்ரம் காணப்படும் ஸில வார்தைகளில் இதுவும் ஒன்று .. In fact , இங்கு ரெண்டு வார்தைகள் உள்ளன .. பிண்டம் , உதகம் .. பிண்டம் என்பது உருண்டையாக பிடிக்கப்பட்ட சாதம் .. உதகம் என்பது நீர் .. முன்னோர்களுக்கு அளிக்கப் படுபவை இவை .. "மநுஷ்ய வாழ்க்கை இந்த ஒன்றோடு முடிவதில்லை .. தொடர்வது .. மநுஷ்யன் இந்த (பஞ்ச பூத) ஶரீரம் இல்லை .. பல ஸூக்ஷ்ம ஶரீரங்கள் அவனுக்கு உண்டு .. அவனுள் ஸ்ரீ பரமனின் திவ்ய அம்ஶமான ஆத்மா உறைகிறது .. ஶரீரத்தின் இயக்கத்திற்கும் ஆற்றல்களுக்கும் அதுவே காரணம் .. ஶரீரம் அழியக் கூடியது .. ஆத்மன் அழியாதது .. நித்யமானது .. நாம் அறியும் மரணம் ஶரீரத்திற்க்கு தான் .. வாழ்க்கையின் இறுதி இல்லை .. ஸூக்ஷ்ம ஶரீரங்களுடன் இணைந்த ஆத்மன் தொடர்கிறது .. மீண்டும் ஶரீரம் எடுக்கிறது" .. இதுவே ஹிந்து சிந்தனையின் ஆதாரம் .. பல வார்தைகளும் ப்ரயோகங்களும் இக்கருத்தை ஓட்டிப் பிறந்துள்ளன .. முன்னோர்கள் இறக்கவில்லை .. தம் ஶரீரத்தை விட்டுச் சென்றுள்ளனர் .. தத்தம் வாஸனைக்கு ஏற்ப மீண்டும் ஶரீரம் எடுத்து பூ - லோகத்தில் தோன்றுவர் .. அவருக்கு போஜனம் அளிப்பது என் கடமை .. பிண்டோதகம் அவருக்கு அளிக்கப் படும் உணவு .. இது அவரை எவ்வாறு சென்றடையும் ? அமெரிகாவில் உள்ள ஒருவருக்கு இங்கு நாம் ரூபாயில் அனுப்பும் பணம் டாலரில் கிடைக்கிறது அல்லவா ?? அதே போல , அவர் நினைவில் நாம் இங்கு ஶ்ரத்தையுடன் அளிக்கும் பிண்டோதகம் , அவர் எங்கிருந்தாலும் , எந்த ஶரீரத்தில் இருந்தாலும் , அவருக்கு ஏற்ற ஆஹாரம் தங்கு தடை இன்றி கிடைத்திடும் .. இது நம் ஶ்ரத்தை ..
20. ஜாதி (I - 43) : – பிறப்பு என்பதே ஸரியான அர்தம் .. எனினும் ஜாதி வெறும் பிறப்பு இல்லை .. ஸமூஹம் .. ஆனால் ஸமூஹம் இல்லை.. செய்யும் தொழிலுடன் ஸம்பந்தப் பட்டது .. ஜாதி என்பது வர்ணம் இல்லை .. ஆனால் வர்ண அமைப்பில் உருவானதுதான் .. நான்கு வர்ணங்கள் குணம் மற்றும் கர்மம் (செய்யும் தொழில்/கார்யங்கள்) அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ளன என்பது ஸத்யமே .. எனினும் , ஒரு ஜீவன் தன்னுடைய குணம் மற்றும் கர்மங்கள் மூலம் சேகரித்த வாஸனைகள் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் , ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் வந்து பிறக்கிறது .. ஆதலால் , பிறப்பும் மஹத்வம் உள்ளது தான் .. இன்று ஜாதி அமைப்பிற்கு எதிராக பெரும் ப்ரசாரம் செய்யப் படுகிறது .. ஜாதி தான் ஸமுதாயத்தைப் பிளக்கிறது என்று முழக்கப் படுகிறது .. அரஸியல் ஆதாயத்திற்கு ஜாதி உபயோகப் படுத்தப் படுகிறது .. ஜாதியுடன் இணைந்த தொழில் மறைந்து விட்டது .. ஆனால் , ஜாதி இருக்கிறது .. வர்ணம் ஒரு ஸத்யம் .. ஜாதி அதன் மேல் எழுப்பப்பட்ட ஒரு அமைப்பு .. அது அழிந்தால் வேறொரு அமைப்பு உருவாகும் ..
21. நரகம் (I – 42, 44) : – ஒவ்வொரு கர்மத்திற்கும் ப்ரதி ஃபலன் நிஶ்சயம் உண்டு . கர்ம ஸித்தாந்தத்தின் ஆதாரக் கருத்து இது தான் .. ஸத்கர்மங்கள் நல்ல விளைவுகளையும் துஷ்கர்மங்கள் வலி , வேதனை மிகுந்த விளைவுகளையும் ஏற்படுத்தும் .. மற்ற உலகங்களில் ஸுகங்களும் து:கங்களும் பூ - லோகத்தை விட பன்மடங்கு அதிகமானவை .. மரணத்துடன் நாம் நம் பஞ்ச பூத ஶரீரத்தை பூ - லோகத்தில் விட்டுச் செல்கிறோம் .. சூக்ஷ்ம தேஹங்களை எடுத்துச் செல்கிறோம் .. நரகத்தின் தண்டனைகளை அநுபவிக்க , நாம் 'யாதனா தேஹ'த்தைப் பெறுகிறோம் .. அதன் விஶேஷம் என்னவென்றால் நரக தண்டனைகளின் வேதனையை , வலியை அநுபவிக்கும் , ஆனால் அழியாது .. ஸ்ரீமத் பாகவதம் 28 வகையான நரகங்களையும் அங்கு அளிக்கப்படும் தண்டனைகளையும் வர்ணிக்கிறது ..
எண்
|
நரகத்தின் பெயர்
|
செய்த பாபம்
|
தண்டனை
|
1
|
தாமிஸ்ரம்
|
பிறர் மனைவி , குழந்தையை அபஹரித்து இழுத்துச் செல்லுதல் .. பணம் பறித்தல் ..
|
பசி இருக்கும் , உணவு இருக்காது .. தாஹம் இருக்கும் , ஜலம் இருக்காது .. கஸை அடி கிடைக்கும் ..
|
2
| அந்த தாமிஸ்ரம் |
தன் குடும்பத்தைக் காப்பாற்ற அந்யரை ஏமாற்றுதல் .. பிறன் மனையுடன் குலவுதல் ..
|
இருண்ட கிணற்றில் எறியப் படுதல் ; நினைவு இழத்தல் ..
|
3
|
ரௌரவம்
|
ப்ராணிகள் மீது ஹிம்ஸை ..
| ருரு என்ற பாம்பால் மீண்டும் மீண்டும் தீண்டப் படுதல் .. |
4
|
மஹாரௌரவம்
|
ப்ராணிகள் மீது மிகக் கடுமையான ஹிம்ஸை ..
|
ருரு என்ற பாம்புகளால் கடித்துக் , கிழித்துக் குதறப் படுதல் ..
|
5
|
கும்பிபாகம்
|
கெட்டு துர்நாற்றம் அடிக்கும் உணவை அளித்தல் .. மாமிஸத்திற்காக ப்ராணிகளைக் கொல்லுதல் ..
|
எண்ணைக் கொப்பரையில் பொறிக்கப் படுதல் ..
|
6
|
கால ஸூத்ரம்
|
பெற்றோர் , ப்ராஹ்மணன் மற்றும் வேதத்திற்கு த்ரோஹம்.
|
அக்னித் தணலில் வறுக்கப் படுதல் .. பசி தாஹத்தில் துடித்தல் ..
|
7
|
அஸிபத்ர வனம்
|
வேதத்திற்கு த்ரோஹம் , ப்ரசாரத்திற்கு மயங்கி மதம் மாறுதல் ..
|
கஸையடி .. வலி பொறுக்காமல் முட்புதருக்குள் ஓடி , முட்களால் கீறப்பட்டு வேதனையில் மயக்கம் அடைதல் ..
|
8
|
ஸூகரமுகம்
|
குற்றமற்றவனுக்கு தண்டனை அளித்தல் ..
|
ராக்ஷஸ சக்ரங்களுக்கு இடையில் அரைக்கப் படுதல் ..
|
9
|
அந்த கூபம்
|
ஈ , கொசு , சிறு பூச்சிகளைக் கொல்லுதல் ..
|
கொசுக்களும் ஈக்களும் நிறைந்த இருண்ட மூலையில் ஏறியப் படுதல்
|
10
|
க்ருமி போஜனம்
|
பகிராமல் உண்ணுதல் ..
|
வறண்ட கிணற்றில் புழுக்களை உண்டு , புழுக்களுக்கு உணவாகி இருத்தல் ..
|
11
|
ஸந்தர்ஷம்
|
திருடுதல் , பணம் பறித்தல் ..
|
சிவக்கக் காய்ச்சப்பட்ட ஊஸிகளால் துளைக்கப் படுதல் ..
|
12
|
தப்தஸூர்மி
|
பிறன் மனை நாடுதல் ..
|
பழுக்கக் காய்ச்சிய இரும்பு மூர்தியைத் தழுவி வேதனை.
|
13
|
வஜ்ர கண்டக ஶால்மலீ
|
ப்ராணிகளுடன் குலவுதல் ..
|
மிகக் கொடுமையான முள் படுக்கை மேல் கிடத்தப்பட்டு , தர தர வென்று இழுக்கப் படுதல் ..
|
14
|
வைதரணீ
|
நீதி அற்ற , ஸ்வயநலம் மிகுந்த ஆட்சி புரிதல் ..
|
வைதரணீ அனைத்து நரகங்களின் இடையே ஓடும் ஒரு நதி .. சிறுநீர் , மலம் , மயிர் , மநுஷ்ய மாம்ஸம் , சீழ் , எலும்பு நிறைந்த நதி .. கொடுமையான மிருகங்கள் வாழும் நதி .. மிருகங்களால் தீண்டப்பட்டு அந்நதியில் கிடந்து இருத்தல் ..
|
15
|
பூயோதம்
|
தன் மனைவியை தள்ளி வைத்து மற்ற பெண்கள் பலருடன் ஸம்பந்தம் வைத்தல் ..
|
அருவருப்பான துர்நாற்றம் கொண்ட பூயோதம் என்னும் கடலில் எறியப் படுதல் ..
|
16
|
ப்ராணரோதம்
|
நாய் / கழுதை வளர்க்கும் ப்ராஹ்மணன் .. வேட்டை ஆடும் ப்ராஹ்மணன் ..
|
யம தூதர்களின் அம்புகளுக்கு இரையாகி , அம்புப் படுக்கையில் வீழ்ந்து வேதனை அநுபவித்தல் ..
|
17
|
விஸாஸனம்
|
ஆடம்பரத்திற்காக , டம்பத்திற்காக யக்ஞம் நடத்துதல் ..
|
யமதூதர்களால் வெட்டப்பட்டு துண்டு துண்டாக்கப் படுதல் ..
|
18
|
லாலாபம்
|
காம வஶப்பட்டு , ஸ்வ - கோத்ரத்தில் விவாஹம் செய்து கொள்ளுதல் ..
|
ஆண் விந்து நிறைந்த லாலாபம் என்னும் கிணற்றில் எறியப் படுதல் ..
|
19
|
ஸாரமேயதனம்
|
தீ வைத்தல் , விஷம் கலத்தல் , கடுமையான வரி விதித்தல் போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல் ..
|
720 பயங்கர நாய்களால் துரத்தப் பட்டு , ஶரீரத்தின் அங்கங்கள் கவ்வப்பட்டு , அங்க அங்கமாகக் கிழிக்கப் படுதல் ..
|
20
|
அவீசிமான்
|
கோர்ட்டில் பொய் வாக்குமூலம் ; வ்யாபாரத்தில் தில்லுமுல்லு / கலப்படம் .. வாக்கு தவறுதல் ..
|
உயரத்தில் இருந்து பாறை மேல் தூக்கி எறியப் பட்டு , உடலைச் சிதற வைத்தல் ..
|
21
|
அயஹ்பானம்
|
ஸமய தீக்ஷை எடுத்தோரும் ப்ராஹ்மணர்களும் ஸாராயம் குடித்தல் ..
|
வாயில் உருக்கப் பட்ட கண்ணாடி ஊற்றப் படுதல் .
|
22
|
க்ஷர கர்தம
|
வித்யை , க்ஞானம் மற்றும் ஒழுக்கத்தின் மதம் ..
|
தலை கீழாகத் தொங்க வைக்கப் பட்டு சித்ர வதை ..
|
23
|
ரக்ஷோ கண போஜனம்
|
கொலை , நரபலி , மநுஷ்ய மாம்ஸம் புஸித்தல் ..
|
பயங்கர ப்ராணிகளால் கிழித்துக் குதறப் பட்டு , அங்க அங்கமாய்த் தின்னப் படுதல் ..
|
24
|
ஶூலப்ரோதம்
|
மிருகங்களைக் குத்தி வேதனை அளித்து மகிழ்தல் .. பூச்சிகளை நூலால் கட்டிப் பறக்க விடுதல் / ஓட விடுதல் ..
|
கூரிய ஶூலம் மேல் அமர்த்தப் பட்டு , பறவைகளால் கொத்தப் படுதல் ..
|
25
|
தந்த ஸூகம்
|
ப்ராணிகளை பயமுறுத்தல் ..
|
சீறும் ஐந்து தலை / ஏழு தலை நாகத்தால் பயமுறுத்தப் படுதல் ..
|
26
|
அவடநிரோதம்
|
ப்ராணிகளை , பறவைகளை இருண்ட கூண்டுகளில் அடைத்துக் கொடுமைப் படுத்தல் ..
|
விஷ வாயு நிறைந்த இருண்ட கிணற்றில் மூச்சுத் திணறுதல் ..
|
27
|
பர்யவர்தனம்
|
விருந்தாளிகள் வருகையில் அலுத்துக் கொள்ளுதல் ..
|
பறவைகளின் கூரிய அலகுகளால் கிழிக்கப் படுதல் .. கண்கள் கொத்தப் படுதல் ..
|
28
|
ஸுசி முகம்
|
செல்வத்தின் மதம் ..
|
மீண்டும் மீண்டும் துண்டு துண்டாய்க் கிழிக்கப் பட்டு , கூர்மையான ஊஸிகளால் தைக்கப் படுதல் ..
|
இந்நரகங்கள் முக்யமானவை .. மேலும் ஆயிரக்கணக்கான வித நரகங்கள் உள்ளன .. எத்தனை வகையான பாபங்கள் உள்ளனவோ அத்தனை வகையான நரகங்கள் இருக்க முடியும் .. சேகரித்த பாபத்திற்கு ஏற்ப ஒரு ஜீவன் நரகத்தில் வேதனைகளை அநுபவித்து , பாபங்களைக் கழிக்கிறது .. பின்னர் பூ - லோகத்தில் பிறந்து , ஸ்ரீ பரமனை நோக்கி ப்ரயாணித்திட மீண்டும் வாய்ப்பைப் பெறுகிறது ..
22. க்ஷேம (I - 46) : – யோகம் - க்ஷேமம் இவ்விரண்டு பதங்கள் இணைந்தே வரும் .. அவஶ்யமானது கிடைத்தல் யோகம் .. இருப்பது காக்கப் படுதல் க்ஷேமம் ..
23 . ஶோக (I - 47) : - து:கம் .. துயரம் .. மனஸின் நிலை ..
23 . ஶோக (I - 47) : - து:கம் .. துயரம் .. மனஸின் நிலை ..
Comments
Post a Comment