Skip to main content

வான ப்ரஸ்தம்

\
 
வானபிரஸ்தம்
 
உலக வாழ்க்கை ஒரு பயணம்இப்பயணத்தின் பாதையை நான்கு கட்டங்களாக ப் பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள்இந்நான்கு கட்டங்கள் ஆஷ்ரமங்கள் எனப் படுகின்றனப்ரஹ்மசர்யம்க்ருஹஸ்தம்வானப்ரஸ்தம் மற்றும் ஸந்யாஸம்.

முதல் கட்டம் ப்ரஹ்மசர்யம்இது படிக்கும் பர்வம்அறிந்து கொள்ளும் பர்வம். உலகத்தைப் பற்றியும்தனக்கும் உலகத்திற்கும் உள்ள பிணைப்பினைப்  பற்றியும் அறிந்து கொள்ளும் பர்வம்பண்டைய காலத்தில்அறிந்து கொள்ளுதல்  குருகுல வாஸத்தில் நிகழ்ந்ததுஇன்று பெரும்பாலோர் அறிதலுக்காக பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிக்குச் செல்கின்றனர்.

கல்வி கற்கும் பர்வத்தின் முக்ய அடையாளம் ப்ரஹ்மசர்யம் அல்லது புலன் கட்டுப்பாடுஸுகார்தினோ குதோ வித்யாவித்யார்தினோ குதோ ஸுகம்? ஸுகார்தி வா த்யஜேத் வித்யாவித்யார்தி வா த்யஜேத் ஸுகம்என்பது நம் முன்னோர் வாக்கு.

सुखार्थिनो कुतो विद्या? विद्यार्थिनो कुतो  सुखं? सुखार्थी वा त्यजेत् विद्या | विद्यार्थी वा त्यजेत सुखम |

{ஸுகம் நாடுபவனுக்கு ஏது  வித்யைவித்யை நாடுபவனுக்கு ஏது ஸுகம்? ஸுகம் நாடுபவன் வித்யையை வேண்டும் அல்லது வித்யை நாடுபவன் ஸுகத்தை விட வேண்டும்.}

புலன்கள் தத்தம் விஷய ஸுகத்திற்குப் பின்னால் திரிந்தால் மனஸும் அலையும். வித்யை  பெறுவதற்கு மனஸின் எகாக்ரதா அல்லது குவிதல் இன்றியமையாதது. அதனால் தான் நம் முன்னோர்கள் ப்ர்ஹ்மசர்ய ஆஷ்ரமத்தில் எளிமையான வாழ்க்கையை வலியுறுத்தினர்.

பாயில் படுக்கைஎளிமையான உணவுஅவசியமான உடைகள் மட்டும்உடல் உழைப்புஸேவைகடும் நியமங்களுடன் கூடிய கட்டுப்பாடான வாழ்க்கை... ப்ரஹ்மசர்ய வாழ்க்கை இதுவேகுடும்பம் மற்றும் நகரத்தில் இருந்து தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த குருகுலங்களில் இத்தகைய வாழ்க்கையை வாழ்ந்துகல்வி பயின்று திரும்பும் மாணவன் அடுத்த பர்வமான க்ருஹஸ்தாஷ்ராமத்தில் அடி எடுத்து வைக்கிறான்இன்று பள்ளிகல்லூரிகளில் படிப்பை முடித்து விட்டு வரும் மாணாக்கரும் குடும்பப் பர்வத்தில்தான் நுழைகின்றனர். (இன்று வேலை, உயர்ந்த வேலை, அதற்குத் தேவையான உயர்ப் படிப்பு, நிரந்தர வேலை என்ற சக்ரத்தில் சிக்கிக் கொண்ட பலரும் 35, 40 வயசிற்குப் பிறகே குடும்ப வாழ்க்கையில் பிரவேசிக்கின்றனர். அந்தோ பரிதாபம்.!!)

க்ருஹஸ்தாஷ்ரமத்தின் ப்ரதான அடையாளம் '' (அல்லது நிலைத்திருத்தல்; க்ருஹத்தில்ஒரு இடத்தில் நிலைத்திருத்தல். (இதற்கு மாறாக ஸந்யாஸீ ஒரு இடத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது.) ஒரு க்ருஹஸ்தன் பொருள் ஈட்டுவது தனக்காகவோ தன் குடும்பத்திற்காகவோ மட்டும்  இல்லை. மற்ற மூன்று பர்வத்தில் உள்ளவர்களையும் போஷிப்பவன் க்ருஹஸ்தனே. நாட்டின் பொருளாதாரம் மட்டும் இல்லை, கலைகள், இலக்கியம், ஸங்கீதம், நாட்யம்கோவில்கள்பண்டிகைகள்பண்பாடுபாரம்பர்யம்போன்ற அனைத்தும் காக்கப்படுவதும் வளர்க்கப் படுவதும் க்ருஹஸ்தனாலேதான்.

க்ருஹஸ்தன்  நிலைத்திடும் க்ருஹத்தில் பொருளும் (अर्थநிலைத்திடும்.  ஒரு இடத்தில் நிலைத்திருந்தால் மட்டுமே பொருள் சேர்ந்திடும்ஒரு துறையில் நிலைத்திருந்தால் மட்டுமே அனுபவம் சேர்ந்துடும்பொருளும் அனுபவமும் சேர சேரத்தான் ஸமுதாயத்தில் வளர்ச்சி ஏற்படும்பொருளும் அனுபவமும் அடுத்த தலைமுறைக்கு தொடர்ச்சியாக ஒப்படைக்கப் படும் போது, நாடு முன்னேற்றப் பாதையில் ஓங்கிடும்.  பொருளோடு காமமும் ( काम ) க்ருஹத்தில் நிலைத்திடும். (இன்று பொருட்களின் கிடங்காகவும் காமத்தின் கூடாரமாகவும் க்ருஹங்கள்  கி வருகின்றன. அந்தோ பரிதாபம்!!!)

இவ்வுலக வாழ்க்கை நிலையானதில்லை அல்லவாஇங்கிருந்து விலக வேண்டியது நிஸ்சயம்எதுவும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப் படும் போது, அது கசப்பாகிவெறுக்கத் தக்கதாகி விடுகிறதுஅதையே நாம் ஸ்வயமாக ஏற்றுக் கொண்டு விட்டால்??  விலகுதலுக்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ளும் பர்வமே மூன்றாவது பர்வமான வானப்ரஸ்தம்.

இது ப்ரஹ்மசர்யம் மற்றும் க்ருஹஸ்தம்இரண்டும் இணைந்த ஒரு ஆஷ்ரமம். இங்கு படித்தல் உண்டு. உலகத்தைப் பற்றி அல்லாமல்தன்னைப் பற்றி. இங்கு  நியமங்களும் புலன் கட்டுதலும் உண்டுவெளியிலிருந்து விதிக்கப் படாமல் ஸ்வயமாக ஏற்றுக் கொண்டவையாகஇங்கு பொருள் ஈட்டுதலும் பொருள் சேர்த்தலும் கிடையாதுஆயின் க்ருஹம் உண்டுமனைவியும் உடன் இருப்பாள். ஆனால் காமம் இல்லையக்ஞ சாலையாக  மாறி விட்ட க்ருஹம். (க்ருஹம் இல்லா நிலை, குடும்பத்தில் இருந்து வெளியேறி விடும் நிலை நான்காம் பர்வமான ஸந்யாஸம்.) 

க்ருஹத்தில் இருந்து வெளியேறுதல் அவசியம் இல்லைகுடும்பத்தைப் பற்றிய கவலையைகுடும்பத்துடனான பற்றுதலை, 'என்னுடையவர்என்னு டையது,' என்ற பிடிப்பினை விட வேண்டியது அவசியம்வெளிப்படையான தோற்றத்தில் அல்லாமல் மனஸில் மாற்றம் அவசியம்ஆனால்பற்றுதல் ஸுலபம்விடுதல் கடினம் அல்லவாகோடு ஒன்றை அழிக்காமல் சிறிதாக்க வேண்டுமாஅதன் அருகில் பெரிய  கோடு ஒன்றை வரைந்து விடுங்கள்குடும்பம் என்ற சிறிய வட்டத்தில் புழங்கிய மனஸை விஸ்தரித்து ஊர்கோவில்அடுத்த தலைமுறைஊர்ப் பள்ளிக்கூடம், தர்மம், போன்ற ஏதோ ஒன்றில் லயிக்கச் செய்யலாம். (Expanded or Enlightened selfishness.) பற்றுதல் இருக்கட்டும்பரவலான ஒன்றைப் பற்றிக் கொள்வோம்.

இன்றைய காலத்தில் வானப்ரஸ்தம் எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம்? சில யோசனைகள்...

Ø பொருள் சம்பாதிக்க உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். 50க்குப் பிறகு நீங்கள் முடிவு செய்த வயஸில் உங்கள் க்ராமத்திற்குத் திரும்பி  வாருங்கள்.

Ø நீங்கள் சம்பாதித்த அனுபவத்தை வைத்தே வானப்ரஸ்த வாழ்க்கையைத் தொடங்குங்கள்இந்நாள் வரைவயிற்றுக்காகவும் குடும்பத்திற்காகவும் பொருள் ஈட்டுவதற்காகப் பயன்பட்டதை வானப்ரஸ்தத்தில் ஊர் நன்மைக்காகஉலக நன்மை க்காகப் பயன் படுத்தத் தொடங்குங்கள்.

Ø உடலை ஆரோக்யமாக வைத்திட யோகாஸனம்ப்ராணாயாமம் பழகுங்கள்.

Ø மனஸை அமைதியாக வைத்திட மௌனம், வ்ரதம், ஜபம், த்யானம் போன்ற நியமங்களை வகுத்துக் கொள்ளுங்கள்.  

Ø ஆன்மீக ரீதியில் தன்னை வளர்த்துக் கொள்ளதகுந்த முயற்சியில் இறங்குங்கள். அதற்கேற்ற புஸ்தகங்கள் படியுங்கள்.
 
Ø உள்ளே இருப்பதைத்தான் நம்மால் கொடுக்க முடியும். உள்ளே ஆனந்தம் இருந்தால் ஆனந்தத்தைக் கொடுக்க முடியும். சோகம் இருந்தால் சோகத்தை மட்டுமே கொடுக்க இயலும்எனவேஉங்களுள் ஆனந்தத்தை நிரப்பிக்  கொள்ளுங்கள். உத்ஸாஹத்தை நிரப்பிக் கொள்ளுங்கள். ஸ்வயநலம் இன்மையை நிரப்பிக் கொள்ளுங்கள். அமைதியை நிரப்பிக் கொள்ளுங்கள். த்ருப்தியை நிரப்பிக் கொள்ளுங்கள்.
 
இறுதியாக ஒரு விஷயம். 'நான் கொடுக்கிறேன்' என்ற பாவனை 'கர்தா பாவனை'. இது அஹங்காரத்திற்கான விதை. ரோஜா மலர் வாஸனை கொடுக்கிறதா? இல்லை. அதன் தன்மை, அதனுள் நிறைந்திருக்கும் அதன் ஸ்வ பாவம் வெளிப் படுகிறது. அதன் அணு அணுவிலும் நிறைந்திருக்கும் வாஸனை  வெளியே வழிந்தோடுகிறது. ரோஜாவினுள் 'நான் ஊருக்கு சேவை செய்கிறேன்' என்ற பாவனை எதுவும் கிடையாது. நீங்கள் அதன் வாசனையை நுகர்கிறீர்களா, பாராட்டுகிறீர்களா, அம்மலரைக் கண்டு கொள்கிறீர்களா, என்ற எந்த பாவனையும் அதனுள் கிடையாது. காட்டில், யாரும் இல்லாத இடத்திலும் அதே வீர்யததுடன் அதன் வாஸனை வெளிப்படும்.
 
நம் ஸ்வபாவத்தை மலரச் செய்திடும் முயற்சியில் முழு மூச்சுடன் இறங்க அனுகூலமான பர்வம் வானப்ரஸ்தம்.
 
நம் வாழ்க்கை முழுமை அடையாமல் அடுத்த பிறவியில் தொடர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஏன்  ஆளாக வேண்டும்? நம் வாழ்க்கை பூர்ணம் அடைந்திடத்  துணை புரிந்திடும் பர்வம் வானப்ரஸ்தம்.
 
'விரிதலே வாழ்க்கை' என்கிறார் ஸ்வாமி விவேகானந்தர். நம் விரிதலுக்கு, உடல் நிலையில் இருந்தும், நான் - என் குடும்பம் என்ற சிறு வட்டங்களில் இருந்தும் விரிந்து நம் நிஜ ஸ்வரூபமான பரமாத்மாவுடன் இணைய வழி வகுக்கும் பர்வமே வானப்ரஸ்தம்.
 
கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணன் ஒரு வாக்குறுதி அருள்கிறார். "ஸ்வயநலம் இல்லாமல், உயர்ந்த நோக்குடன் முயற்சியில் இறங்குபவனுக்கு என்றும் துர்கதி கிடையாது. (அத்தியாயம் 6 - ஸ்லோகம் 40.)
 
நோக்கம் தான் முக்யமே அன்றி முயற்சியின் வெற்றியும் தோல்வியும் இல்லை.
 
 
 
 
 
 
 

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...