Skip to main content

கீதாவில் சில சொற்றொடர்கள் - 29


கீதாவில் சில சொற்றொடர்கள் - 29

परित्राणाय साधूनाम  . .  (अध्याय ४ - श्लोक ८)
பரித்ராணாய ஸாதூனாம் ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 8)
Parithraanaaya Saadhoonaam ....  (Chapter 4 - Shlokam 8)

அர்தம் :  ஸாதுக்களைப் பாதுகாத்திட ..

ஸாது என்ற ஒரே வார்த்தை நம் நாட்டு அனைத்து மொழிகளில் மொழிகளிலும் பயன் படுத்தப் படுகிறது.  அனைவராலும் புரிந்து கொள்ளவும் படுகிறது.  அன்ய நாட்டு மொழிகளில், குறிப்பாக, ஐரோப்பிய மொழிகளில் ஸாது என்ற பதத்தினைக் குறித்திடும் ஒரு வார்த்தை கிடையாது.  மொழி என்பது ஒரு மக்கள் சமூஹத்தின் வாழ்க்கை முறை மற்றும் கண்ணோட்டத்தினை வெளிப்படுத்திடும் ஒரு கண்ணாடி அல்லவா?  ஸமுதாயத்தில், மக்கள் வாழ்க்கையிலும் கண்ணோட்டத்திலும் இருந்தால் அல்லவா மொழியில் இருந்திடும் !!

ஸாது என்பவர் ஸந்ந்யாஸீ இல்லை.  நம்மில் எவரும் ஸாதுவாக இருக்க முடியும்.  ஸமுதாயத்தில் அனைத்து வர்கத்திலும், க்ராமத்திலும் நகரத்திலும், ஏன், ஒரு சிறைச்சாலையிலும் கூட ஸாது ஒருவர் இருக்க முடியும்.  ஸாது பாவத்தைத் தம்முள் அணிந்திருப்பவரே ஸாது.  ஸ்ரீ கிருஷ்ணன், ஸாதுக்களைக் காத்திட என்று சொல்லும் போது, அவர் 'ஸாது பாவத்தையே குறிப்பிடுகிறார்.  ஸாது பாவமே காக்கப் பட வேண்டும்.  போற்றப் பட வேண்டும்.  போஷிக்கப் பட வேண்டும்.  தயை, அன்பு, கருணை, நன்மை, இவற்றின் தொகுப்பே ஸாது பாவம்.  'இது செய்யப்பட வேண்டியது' என்ற எண்ணம் மாத்ரமே ஸாதுவைச் செயலில் தூண்டுவது.  அவர் தன் வாழ்க்கையிலும் செயல்களிலும் பற்றின்மை என்பதை மாத்ரம் வெளிப்படுத்துபவர்.  வேறெந்த எதிர்ப்பார்ப்பும், விருப்பமும் அவருக்குக் கிடையாது.

விருப்பம் மற்றும் எதிர்ப்பார்ப்பு ஏதும் இல்லாத நிலையில், துஷ்கர்மம், திட்டம் தீட்டுதல், பழி வாங்குதல்,  ஒப்பிடுதல்,வெறுப்பு, போட்டி, பொறாமை, திமிர், ஏமாற்றம், மனச்சோர்வு, ஶோகம், போன்றவற்றிற்கு அவரிடம் இடம் இல்லை.  வாய்ப்பும் இல்லை.  எனவேதான், ஒரு ஸாது, அவர் குடும்பத்தில் இருந்தாலும், க்ராமத்தில் இருந்தாலும், ஏன், சிறைச்சாலையிலும் கூட, ஊக்கம் அளிப்பவராக, உத்ஸாஹம் அளிப்பவராக, ஆனந்தம் அளிப்பவராக, மன அமைதி அளிப்பவராக, சிந்தனைத் தெளிவு அளிப்பவராக, விளங்குகிறார்.  உன்னத வாழ்க்கைக்கு நம்மைத் தூண்டுபவராக விளங்குகிறார்.

ஸாது பாவம் என்பது முயற்சியினாலோ, பயிற்சியிநாளோ அடைந்து விடக் கூடியதல்ல.  ஜனனத்துடன் வருவது ஸாது பாவம்.  ஆனால், இன்று முயற்சியைத் தொடங்கினால், இடைவிடாது, தீவ்ரமாக பயிற்சி செய்தால், எதிர்க்காலத்தில், எதிர் வரும் ஜன்மங்களில் ஸாதுபாவத்தைப் பெற்று விடலாம்.

ஸ்ரீ கிருஷ்ணன் இங்கே இத்தகைய ஸாது பாவம் போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டும் என்கிறார்.  உலகத்தில் ஸாதுக்கள் தழைக்க வேண்டும்.  அவர்கள் மூலம் ஸாது பாவம் தழைத்து நிலைக்க வேண்டும் என்கிறார்.  ஸாதுக்களை, ஸாது பாவத்தைக் காத்திட நான் யுகம் தோறும் அவதாரம் எடுத்து வருவேன் என்று ஆஶ்வாஸம் அளிக்கிறார்.

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...