ॐ
ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான்
ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் . அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன்,
நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட
அறியாமல் பேசுகின்றனர் .
வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ ,
போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் . இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) .
இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு . தெலுங்கில் జ , స , హ ... என்றும் , கன்னடத்தில் ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் .ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில் જ , સ , હા , ક્ષ , என்றும் , பெங்காலியில் জ , স , হা , ক্ষ ... என்றும்
ஹிந்தியில் ज , स , ह , श , क्ष ,.. என்றும் , ..... இவ்வெழுத்துக்கள்
உள்ளன . எனவே , நீங்கள் விரும்பினாலும்
விரும்பா விட்டாலும் ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ ஆகியவை தமிழ் எழுத்துக்களே . (வேண்டுமானால்
மலையாள எழுத்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள் . அவ்வாறு சொன்னால் , க , ங என்ற பல
எழுத்துக்களை மலையாள எழுத்துக்கள் என்று சொல்ல வேண்டி வரும் . உங்கள் இஷ்டம் .)
மொழி என்பது மற்றவருடன் பேசப் பயன்படும் ஶப்தங்கள் என்றால் எழுத்துக்கள் ஒரு
மொழியை எழுதப் பயன்படும் சின்னங்கள் தான் .
இதற்கு மேல் இவற்றிற்கு அர்தம் இல்லை . இப்பொழுது , துளுவிற்கு எழுத்து
இல்லை . எழுத்துக்கள் தோற்றுவிக்கும் போது அந்த ப்ரதேஶ மொழியான கன்னட எழுத்துக்கள்
சிலவற்றையேனும் எடுத்துக் கொள்வார்கள் என்பது நிஶ்சயம் .
இந்த எழுத்துக்களை வித்யாலயங்களில் சொல்லிக் கொடுக்கிறார்கள் . ஆனால் , கூடவே ‘இவை
வடமொழி எழுத்துக்கள் , நம்முடையவை அல்ல’ என்ற ஒரு விஷ விதையையும் விதைக்கிறார்கள் . இதனால்
அபத்தமான பல விளைவுகள் .... நான் அநுபவித்த
சிலவற்றை சொல்கிறேன்....
கோயம்பத்தூரில் காந்தி நகரில் ஒரு ஷேர் ஆடோவின் மேல் ‘ஹேர் ஆடோ’ என்று எழுதி
இருந்தது . அந்த ஆடோவை நிறுத்தி , ‘நீ எழுதி இருப்பதன் அர்தம் உனக்குத் தெரியுமா ?’
என்று கேட்டேன் . ‘ஹேர் ஆடோ அதாவது மயிறு ஆடோ என்று எழுதி இருக்கிறாய் ’ என்றேன் .
தமிழகத்தில்
பழ ஸாரக் கடைகளில் எல்லாம் ‘ஜீஸ் கிடைக்கும்’ என்று எழுதி இருக்கும். (ஹிந்து
அமைப்புக்களின் ‘ஜீ’ க்கள் கிடைக்கும் இடம் என்று அர்தம் கொள்ளலாம்.) அவன் சொல்ல
விரும்புவது இங்கு 'ஜூஸ்' கிடைக்கும் என்பதே . எவனோ ஒரு அரைகுறை , விஷ விதையுடன்
சொல்லிக் கொடுக்கப் பட்டதால் , இவ்வெழுத்துக்கள் என்னுடையவை அல்ல என்ற அஶ்ரத்தையுடன் ,
ஸரியாகக் கற்றுக் கொள்ளாத ஒரு பெய்ண்டர் எழுதிக் கொடுத்ததை மாட்டி இருக்கிறான் .
இவனும் ஒரு அரைகுறை என்பதால் அதைத் திருத்துவது இருக்கட்டும் , கவனிக்கவே இல்லை .
ஸ்ரீ என்றால் ‘புகழ் , வைபவம் , ஒழுக்கம் , தைர்யம் , போன்ற விபூதிகள் . எவனிடம் இந்த
சிறந்த வைபவங்கள் நிவாஸம் செய்கின்றனவோ , வஸிக்கின்றனவோ அவன் ஸ்ரீநிவாஸன் . சீ என்றால் குப்பை . Shit . நீங்களே முடிவு செய்து
கொள்ளுங்கள் . ஸ்ரீநிவாஸன் என்று எழுத வேண்டுமா சீநிவாஸன் என்று எழுத வேண்டுமா
என்பதை ...
ஹரி என்றால் அபஹரித்துக் கொள்பவன் , மனஸைக் கொள்ளைக் கொள்பவன் என்று அர்தம் .
அரி என்றால் கொன்றவன் , வதம் செய்தவன் என்று அர்தம் . நீங்களே முடிவு செய்து
கொள்ளுங்கள் .
சென்னையில் ஒரு ரயில்
நிலையம். த்ரிஶூலம் . ஶூலம் என்றால் முள் . த்ரி என்றால் மூன்று. த்ரிஶூலம் என்றால்
ஈஶ்வரன் ஏந்தி இருக்கும் ஆயுதம் . அந்நிலையத்தில் ஹிந்தியில் ஸரியாக பெயரை எழுதி
இருக்கிறான் . ஆங்க்லத்தில் ஸரியாக எழுதி
இருக்கிறான் . தமிழில் மட்டும் திரிசூலம் (ThiriChoolam) என்று எழுதி இருக்கிறான் . அபத்தம் ...
ஸ்வ என்றால் ஸ்வந்த . ஸ்வதேஶீ என்றால் என்னுடைய தேஶத்தின் ... ஸ்வதேஶீ ஜாகரண மஞ்ச் என்ற அமைப்பின் நிகழ்ச்சிக்குப்
போனால் வாஸலிலும் மேடையின் பின்னணி பேனரிலும் ஹிந்தியில் ஸரியாக எழுதி
இருக்கிறான் . ஆங்க்லத்தில் (Swadeshi
Jaagarana Manch) என்று ஸரியாக எழுதி இருக்கிறான் . தமிழில் மட்டும் சுதேசீ என்று
எழுதி இருக்கிறான் . என்ன அர்தம் ? அபத்தம் .
(ஸ்வதேஶம் என்றால் என்னுடைய தேசம் . ஸுதேஶம் என்றால் நல்ல தேஶம் . உலகத்தின் எந்த
தேஶமும் நல்ல தேஶமாக இருக்க முடியும் . ஆனால் , ஒரே ஒரு ஸ்வதேஶம் தான் இருக்க
முடியும் . சுதேசம் ‘Chu’Dhecham என்பதற்கு அர்த்தமே இல்லை .)
ஹிந்து என்றால் ‘ஹிம்ஸையை
தூஷிப்பவன்’ என்றும் ‘ஹிம் (பனி ப்ரதேஶம்) இந்து ஸாகரம் இவற்றிற்கு இடையில் உள்ள
ப்ரதேஶம் , அதில் வாழ்ந்திடும் மக்கள் என்றும் அர்தம் . ஆங்க்லத்தில் The Hindu
என்று பெயர் வைத்திருக்கும் அமைப்பு அதன் தமிழ் ப்ரதியை இந்து என்று பெயர்
இட்டிருப்பதற்கு த்வேஶம் , வெறுப்பு அல்லாமல் வேறு காரணம் இருக்க முடியும் ? இந்து முன்னணி என்றால் ‘இந்து’ அதாவது கடல் வாழ் உயிரினங்களுக்காக
முன்னணியா ? இந்து என்றால் சந்த்ரன் என்றும் அர்தம் . அதாவது தேய்ந்து போகும் உயிரற்ற பாறை .. நான் ஒரு ஹிந்து .. நான் இந்து இல்லை .. அந்த வார்தைகளை உபயோகப் படுத்தலாமாம் . ஆனால் , அந்த எழுத்துக்கள்
வேண்டாமாம் . இவ்வாறு உச்சரிப்பைக் கொச்சைப் படுத்தி எழுதுவதற்கு மற்றொரு அர்தமும் உண்டு .. இது நம்மை அபமானப் படுத்துதல் என்று நான் கருதுகிறேன் .. "இந்த உச்சரிப்பு உனக்கு வராது .. உன்னால் கொச்சையாக உச்சரிப்பதுதான் இயலும் .. அதனால் ஸுலபமாக்கித் தருகிறேன் .. கொச்சைப் படுத்தித் தருகிறேன்" என்று நம்மைப் பார்த்து ஏளனத்துடன் கூறுகிறார் , இவ்வாறு எழுதுபவர் ..
ஜ , ஸ , ஹ , என்ற இந்த எழுத்துக்களைப் பார்த்தவுடன் BP எகிறி விடுகிறது . அலர்ஜி
ஏற்பட்டு உடல் எல்லாம் அரிப்பு ஏற்பட்டு விடுகிறது . சீறி எழுந்து போர் தொடுக்கக் கிளம்பி
விடுகிறோம் . ஸமீபத்தில் கல்யாண invitation அடிக்க ஒரு ப்ரிண்டரிடம் அமர்ந்திருந்தேன் .
ஸ்ரீ என்று நான் எழுதும் இடங்களில் ‘ஏன்? திரு என்று எழுதக் கூடாதா?’ என்பார் .
அச்சடித்துக் கொடுக்கும் உன் வேலையை மட்டும் செய் . தேவையற்ற விஷயங்களில்
தலையிடாதே .’ என்று கூற விரும்பினாலும் பல நாட்கள் பழகிய நபர் என்பதால் அடக்கிக்
கொண்டேன் .
வெறுப்பு நல்லதில்லை . எவர் மேல் அல்லது எந்த விஷயத்தின் மேல் வைக்கப்
படுகிறதோ , ஏவப்படுகிறதோ அந்த நபருக்கும் அந்த விஷயத்திற்கும் வெறுப்பினால் நஷ்டம்
இல்லை . ஆனால் , வைத்திருப்பவனை வெறுப்பு அழித்து விடும் . ஜாக்ரதை . மேலும் , வெறுப்பு
தாழ்வு மனப்பான்மையின் ஒரு அடையாளம் .
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteமலையாளத்தில் நிறைய சமற்கிருதச் சொற்கள் உள்ளன என்பது நாமறிந்தே.ஆனால் கூட இன்னமும் விண்மீன்களின் பெயர்களை தமிழில் இல்லாத சமற்கிருத ஒலி எழுத்துக்கள்(ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ) இன்றியே எழுதுகிறார்கள்(எ.கா. அனிழம்,அத்தம்).ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் அனுஷம்,ஹஸ்தம் என்றே எழுதி விடுகிறோம்.மாதப் பெயர்களிலும் மலையாளத்தில் ஜ,ஷ,ஹ,க்ஷ போன்ற எழுத்துக்கள் கிடையாது(எ.கா.மேடம்,இடவம்(எடவம் என மருவிவிட்டது).மலையாளிகள் நிறைய பேருக்கு ஏன் அப்படி எழுதுகிறோம் என்று தெரியாது.நாம் தமிழைத் தமிழ் எழுத்துக்களால் எழுதும் போதாவது ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ{ போன்ற எழுத்துக்களை முடிந்தவரை தவிர்க்கலாமே.மனிதர்களின் பெயர்களை வேண்டுமானால் மாற்ற வேண்டாம்.இதை ஒரு சமய எதிர்ப்பு அல்லது சமற்கிருத எதிர்ப்பு என்று நினைக்க வேண்டாம்.
ReplyDeleteதமிழ் எழுத்துக்கள் உயிரிழந்தது 12
ReplyDeleteமெய்யெழுத்து 18
உயிர்மெயெழுத்து 216
ஆய்த எழுத்து 1
ஆக மொத்தம் 247.
இதில் நீங்கள் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்கள் எங்கே வருகிறது?
ஜ,ஷ,ஹ,ஸ்ரீ போன்றவை கிரந்தங்கள். இவை தமிழ் எழுத்துக்களாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இவையெல்லாம் தமிழ் எழுத்துக்களாக இருந்திருந்தால் திருவரங்கம் என்று குறிப்பிடுவதற்கு பதில் ஸ்ரீரங்கம் என்றே குறிப்பிட்டு இருப்பார்கள்.