ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 21 युद्ध्यस्व विगत ज्वरः । (अध्याय ३ - श्लोक ३०) யுத்யஸ்வ விகத ஜ்வரஹ . (அத்யாயம் 3 - ஶ்லோகம் 30) Yuddhyasva Vigata Jwarah.. (Chapter 3 - Shlokam 30) அர்தம் : ஜ்வரத்தில் இருந்து விடுபட்டு யுத்தத்தில் ஈடுபடு. ஜ்வரத்தினால் தேஹத்தில் உஷ்ணம் அதிகம் ஆகும் . அங்கங்கள் பலஹீனம் ஆகும். மனம் ஒருங்கிணைப்பு கடினம் ஆகும். சிந்தனை ஆற்றல் நின்று போகும். ஜ்வரம் இருந்திடும் போது யுத்தம் செய்வது இயலாத கார்யம். யுத்த களத்தில் கீதை பேசப் படுவதால், ஜ்வரத்தில் இருந்து விடுபட்டு யுத்தம் புரிந்திடு என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன். ஸ்ரீ ராமன் இவ்விஷயத்தில் ஜ்வலித்திடும் ஒரு உதாஹரணம். அவர் புன்னகை மாறாமல், மனஸில் வெறுப்பும் பழி வாங்கும் எண்ணமும் இல்லாமல் ராவணனுடன் போர் புரிந்தார். ஸமீப காலத்து அரஸியல்வாதிகளில் ஸ்ரீ வாஜ்பேயி இவ்விஷயத்திற்கு ஒரு சிறந்த உதாஹரணம். தான் பாதிக்கப் பட்டும் ஆட்சி...
राम गोपाल रत्नम्