ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 21
युद्ध्यस्व विगत ज्वरः । (अध्याय ३ - श्लोक ३०)
யுத்யஸ்வ விகத ஜ்வரஹ . (அத்யாயம் 3 - ஶ்லோகம் 30)
Yuddhyasva Vigata Jwarah.. (Chapter 3 - Shlokam 30)
அர்தம் : ஜ்வரத்தில் இருந்து விடுபட்டு யுத்தத்தில் ஈடுபடு.
ஜ்வரத்தினால் தேஹத்தில் உஷ்ணம் அதிகம் ஆகும் . அங்கங்கள் பலஹீனம் ஆகும். மனம் ஒருங்கிணைப்பு கடினம் ஆகும். சிந்தனை ஆற்றல் நின்று போகும். ஜ்வரம் இருந்திடும் போது யுத்தம் செய்வது இயலாத கார்யம். யுத்த களத்தில் கீதை பேசப் படுவதால், ஜ்வரத்தில் இருந்து விடுபட்டு யுத்தம் புரிந்திடு என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன். ஸ்ரீ ராமன் இவ்விஷயத்தில் ஜ்வலித்திடும் ஒரு உதாஹரணம். அவர் புன்னகை மாறாமல், மனஸில் வெறுப்பும் பழி வாங்கும் எண்ணமும் இல்லாமல் ராவணனுடன் போர் புரிந்தார். ஸமீப காலத்து அரஸியல்வாதிகளில் ஸ்ரீ வாஜ்பேயி இவ்விஷயத்திற்கு ஒரு சிறந்த உதாஹரணம். தான் பாதிக்கப் பட்டும் ஆட்சியாளருக்கு எதிராக தம் மனஸில் க்ரோதம் இல்லாமல் அரஸியல் நடத்தியவர். ஜ்வரம் இருக்கும் போது யுத்தம் மட்டும் இல்லை, வாழ்க்கையின் எந்த செயலும் செய்ய இயலாது என்பதே உண்மை. எனவே, ஜ்வரத்தில் இருந்து விடுபடு. பின்னர் செயல் படு...
ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு குறிப்பிடுவது உடலுக்கான ஜ்வரத்தை அல்ல. மனஸினைப் பிடித்திடும் ஜ்வரத்தை. காமம், மற்றும் க்ரோதம் இவை ரெண்டும் மனஸினைப் பீடித்திடும் ப்ரதானமான ஜ்வரங்கள். மனஸில் தோன்றும் இந்த ஜ்வரங்கள் உடல், மனம் மற்றும் புத்தி ஆகிய மூன்றையும் பாதிக்கும் ஆற்றல் கொண்டவை. உடல் பலஹீனம் அடையும். அங்கங்கள் செயல் இழக்கும். ஷரீரம் அன்றாடம் செய்ய வேண்டிய செயல்கள் மந்தம் ஆகும் அல்லது நின்று போகும். மனஸின் மேல் இந்த ஜ்வரங்களின் பிடி உறுதியானது. வாழ்க்கையின் அழகான, மதுரமான, ஆனந்தம் மற்றும் உத்ஸாஹம் அளிக்கக் கூடிய விஷயங்களை அநுபவிக்கும் ஆற்றலை மனம் இழந்து விடும். புத்தி ஸ்தம்பித்து விடும். சிந்தனை செய்வது இயலாமல் போகும்.
உடலின் ஜ்வரம் அவ்வுடலில் விஷமான ரஸாயனங்கள் ஸுரக்கப் படுவதற்குக் காரணம் ஆகலாம். இவற்றை எளிதாக நீக்கவும் முடியும். ஆனால், மனஸினைப் பீடித்திடும் காமம் மற்றும் க்ரோதம் என்ற ஜ்வரங்கள் உடலில் விஷமான ரஸாயனங்கள் ஸுரக்கப் படுவதற்குக் காரணமாக இருக்கின்றன. மேலும், மனஸிளும் விஷமான பாவனைகள் துளிர்ப்பதற்கும் காரணமாகின்றன. இந்த விஷங்கள் நாசம் ஏற்படுத்த வல்லவை. நீக்குவதற்கு மிகக் கடினமானவை.
மனஸ் ஜ்வரத்தினால் பீடிக்கப் பட்ட நிலையில் செய்யப் படும் கர்மங்கள் மிச்சமிருக்கும் வாழ்க்கையை பஶ்சாதாபத்தில் தொலைத்து விடுவதற்கும் காரணம் ஆகின்றன. உலகத்தில் நிகழ்ந்திடும் பெரும்பாலான குற்றச் செயல்கள் 'மனஸ் ஜ்வரத்தில் பீடிக்கப் பட்ட நிலையில் செய்யப் பட்டவையே. ஜெயில்களில் வாடும் பெரும்பாலான கைதிகள், குறிப்பாக ஆயுள் கைதிகள், தம் மனம் காமம் அல்லது க்ரோதம் என்ற ஜ்வரத்தால் பீடிக்கப் பட்ட நிலையில் செயல்பட்டவர்களே. எனவே தான் ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்கிறார்,... "யுத்யஸ்வ விகத ஜ்வரஹ" ... ஜ்வரத்தில் இருந்து விடுபட்டு யுத்தம் புரிந்திடு."

Comments
Post a Comment