ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 33 कर्मण्यकर्म यः पश्येद् अकर्मणि च कर्म यः स बुद्धिमान् मनुष्यः | (अध्याय ४ - श्लोक १८) கர்மண்யகர்ம யஹ் பஶ்யேத் அகர்மணி ச கர்ம யஹ் ஸ புத்திமான் மனுஷ்யஹ் ...(அத்யாயம் 4 - ஶ்லோகம் 18) Karmanyakarma Yah Pashyed Akarmani cha Karma yah Sa Buddhimaan Manushyah ... (Chapter 4 - Shlokam 18) அர்தம் : கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பவனே புத்திஶாலி.. கர்மம், அகர்மம் பற்றி இதற்கு முந்தைய குறிப்பில் சிந்தனை செய்திருக்கிறோம் அல்லவா.. எனவே, இந்த சொற்றொடரில் வேறெதையேனும் காண முயல்வோம் வாருங்கள்.. அப்பால் நோக்கிடச் சொல்கிறது கீதையின் இந்தச் சொற்றொடர். அப்பால் நோக்குதலின் மஹத்வத்தினைச் சொல்கிறது. ஐம்புலன்களால் அறியக்கூடியதற்கு அப்பால்.. நம் புத்தியினால் க்ரஹிக்கக் கூடியதற்கு அப்பால்... தத் க்ஷணத்திற்கு அப்பால்.. நமக்குப் பழகிய நமது குறுகிய சிந்தனை ஓட்டத்திற்கு அப்பால்.. அப்பால் நோக்குதல் ஒரு சிறப்பான பழக்கம் அல்லது தன்மை. (பயிற்சியினால் உருவாவது பழக்கம். ஜன்மத்தின் போது நம்முடன்...
राम गोपाल रत्नम्