ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 45 एकं सांख्यं च योगं च .. (अध्याय ५ - श्लोक ५ ) ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ... (அத்யாயம் 5 - ) Ekam Saankhyam Cha Yogam Caha .. (Chapter 5 - Shlokam 5) அர்தம் : ஸாங்க்யமும் யோகமும் ஒன்றே .. ஒரு உண்மையான ஹிந்து மனஸின் வாணி இது . இந்த எண்ணம் ஹிந்துக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து உள்ளது . நம் நாட்டு ஸமுதாய வாழ்க்கையில் பல விதங்களில் இந்தக் கருத்து ப்ரதிபலிப்பதைக் காணலாம் . ஒரு தமிழன் வடக்குக் கோடியில் உள்ள தெஹ்ராடூனுக்கு அல்லது ஒரு மார்வாடி தெற்குக் கோடியில் மதுரைக்கு இடம் பெயர்ந்து சென்றால் புதிய ஊரில் தனக்குப் பழக்கம் இல்லாத சூழ்நிலையில் ஸஹஜமாக வாழ முடிகிறது . ஸௌராஷ்ட்ரம் குஜராத்தில் இருந்தும் மஹாராஷ்டிராவில் இருந்தும் கர்நாடகத்தில் இருந்தும் ஆந்த்ராவில் இருந்தும் ஸ்வந்த ஊர்களில் கிறிஸ்தவ இஸ்லாமிய வன்முறையில் அவதிப்பட்ட ஜனங்கள் ஆயிரங்களில், லக்ஷங்களில் தமிழகத்தில் குடியேறினர் . இங்கு பல நூற்றாண்டுகளாக ஸஹஜமாக வாழ்ந்து வருகின்றனர் . தம் மொழி, பழக...
राम गोपाल रत्नम्