Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 45

ॐ

கீதையில் சில சொற்றொடர்கள் - 45

एकं सांख्यं च योगं च ..  (अध्याय ५ - श्लोक ५)
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ... (அத்யாயம் 5 - )
Ekam Saankhyam Cha Yogam Caha .. (Chapter 5 - Shlokam 5)

அர்தம் :  ஸாங்க்யமும் யோகமும் ஒன்றே ..

ஒரு உண்மையான ஹிந்து மனஸின் வாணி இது .  இந்த எண்ணம் ஹிந்துக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து உள்ளது .  நம் நாட்டு ஸமுதாய வாழ்க்கையில் பல விதங்களில் இந்தக் கருத்து ப்ரதிபலிப்பதைக் காணலாம் .  ஒரு தமிழன் வடக்குக் கோடியில் உள்ள தெஹ்ராடூனுக்கு அல்லது ஒரு மார்வாடி தெற்குக் கோடியில் மதுரைக்கு இடம் பெயர்ந்து சென்றால் புதிய ஊரில் தனக்குப் பழக்கம் இல்லாத சூழ்நிலையில் ஸஹஜமாக வாழ முடிகிறது .  ஸௌராஷ்ட்ரம் குஜராத்தில் இருந்தும் மஹாராஷ்டிராவில் இருந்தும் கர்நாடகத்தில் இருந்தும் ஆந்த்ராவில் இருந்தும் ஸ்வந்த ஊர்களில் கிறிஸ்தவ இஸ்லாமிய வன்முறையில் அவதிப்பட்ட ஜனங்கள் ஆயிரங்களில், லக்ஷங்களில் தமிழகத்தில் குடியேறினர் .  இங்கு பல நூற்றாண்டுகளாக ஸஹஜமாக வாழ்ந்து வருகின்றனர் .  தம் மொழி, பழக்க வழக்கங்கள், ஸமய ஸம்ப்ரதாயங்கள், இவற்றை இழக்காமல் வாழ்கின்றனர் .  இவற்றை மாற்றிக் கொள்ளும் படி இந்த நெடும் காலத்தில் இவர்கள் ராஜாவாலோ மக்களாலோ பலவந்தப் படுத்தப் படவில்லை .  த்ராவிடக் கருத்து பேசிய கட்சிகள் தமிழகத்தை ஆண்ட போதும் இவர்கள் மீது கொடுமைகள் அவிழ்த்து விடப் படவில்லை .

நம்மவரை மாத்ரம் அல்லாது வெளி நாடுகளில் இருந்து அகதிகளாக இந்நாட்டை ஶரணடைந்து வந்த அகதிகளையும் அன்புடன் வரவேற்று ஶரண் அளித்திடும் பிரேரணை கொடுத்ததும் இந்தக் கருத்தே .  இஸ்ரேலில் இருந்து அடித்து விரட்டப் பட்ட யூதர்களும் பர்ஷியாவில் இருந்து அடித்து விரட்டப்பட்ட பார்ஸீகளும் அகதிகளாக நம் நாட்டுக் கரையில் வந்திறங்கினர் .  இங்கு ஆயிரத்து ஐந்நூறு வர்ஷங்களுக்கும் மேல் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர் .  ஸ்வத்தன்மையை இழக்காமல் தன் மதம், வழிபாட்டு ஸ்தலம், நடை-உடை-வழக்கங்கள் எதையும் இழக்காமல் வாழ்ந்தனர் .  யூதர்கள் உலகத்தின் எண்பதுக்கும் மேற்பட்ட தேஶங்களில் அகதிகளாக குடியேறினர் .  அத்தேஶங்களில் தாம் பெற்ற அனுபவங்களைத் தொகுத்து எழுதிய யூதர்கள் உள்ளூர் ராஜாவாலும் மக்களாலும் தம் மீது ஒரு கொடுமையும் இழைக்கப் படாத ஒரே தேஶம் பாரத தேஶம்தான் என்று எழுதி உள்ளனர் .  அதே போல பார்ஸீகள் தனித் தொகுதிகளும் சிறுபான்மை உரிமைகளும் அளிக்கப் பட்ட போது, "நாங்கள் ஹிந்துக்களுடன் ஒன்றாக வாழ்கிறோம்" என்று உறுதியாக உரைத்து சிறப்பு உரிமைகளை மறுத்து விட்டனர் .  ஆயிரத்து முன்னூறு வர்ஷங்களுக்கும் மேலாக ஹிந்துக்கள் தம்மை மதிப்பும் மர்யாதையும் ஸ்வாதந்தர்யமும் அளித்து வாழ விட்டதற்கு நாம் செய்யும் பதில் மர்யாதை இது என்றனர் பார்ஸீகள் .

தமக்கு ப்ரியமான பாரத தேஶத்தை விட்டு உலகத்து அந்ய தேஶங்களில் குடி பெயர்ந்த ஹிந்துக்கள் அந்நந்நாடுகளில் ஸௌஜன்யத்துடன் வாழ்ந்திட, மண்ணையே புனிதமாகக் கருதி, அங்கு ஓடும் நதியையே கங்கையாகக் கருதி, அத்தேஶ மக்களுடன் இணைந்து வாழ்வதற்கான ப்ரேரணை அளிப்பதும் இக்கருத்தே .  தென் ஆஃப்ரிகா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தேஶங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பல்லாயிர அடிமைக் கூலிகள் இன்று அத்தேஶங்களையே தம்முடையதாகக் கருதி ஸ்நேஹத்துடன் வாழ்கின்றனர் .

'அனைத்தும் ஒன்றுதான் ';  'வேறுபாடுகள் புறத்தளவே .  அகத்தில் தத்வம் ஒன்றுதான் .';  ஹிந்து தர்மத்தின் ஆதாரத்தை ப்ரகடனம் செய்திடும் ஒரு வார்தை ..இதுவும் ..  இதுவும் ஸத்யம்தான் .  இதுவும் ஒரு மார்கம்தான் .  இதுவும் ஒரு புனித க்ரந்தமே .  இவரும் ஒரு தேவதூதனே .  ஹிந்து தர்மம் அரவணைக்கக் கூடியது .  இணைக்கக் கூடியது .  அந்ய மதங்களின் கருத்தை ப்ரகடனப் படுத்தும் ஒரு வார்தை இது மாத்ரமே .  இது மாத்ரமே ஸத்யம் .  இது ஒன்றுதான் மார்கம் .  இது மாத்ரமே புனிதப் புஸ்தகம் .  இவர் மாத்ரமே தேவ தூதன் .  அதனால்தான் இம்மதத்தினர் வாழ்ந்திடும் ப்ரதேஶங்கள் வாதங்கள், வன்முறை, ரக்தக் களரி மற்றும் யுத்தங்களுக்கான விளைநிலங்களாக விளங்குகின்றன .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

PHRASES IN THE GITA - 173

ॐ PHRASES IN THE GITA - 173 जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषानुदर्शनम् ।।  (अध्याय १३ - श्लोक ८) ஜன்ம ம்ருத்யு ஜரா வியாதி து:க தோஷாநுதர்ஶனம் .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 8) Janma Mrutyu Jaraa Vyaadhi Duhkha DoshaanuDarshanam ..  (Chapter 13 - Shloka 8) Meaning :  To think of misery and defects in birth , death , old age and disease again and again .. To think of misery and defects in Birth , Death , Old age and disease .. Birth is miserable ..  The months in mother's womb .. hanging inverted , immersed in water , surrounded by suffocating smell ..  Miserable to the mother too ..  Extreme pain and risk of death to the mother while delivering the child ..  Death is miserable too ..  Apart from the body pain while dying , pain of leaving all those collected so passionately , wife and children , house , bank balance , assets , vehicle , posts and positions , reputation , public influence , etc .. Jara or old age is ...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...