ஊரைக் கூட்டி பார்ட்டி என்ற பெயரில் கூத்தடிப்பது அருவருக்கத் தக்க அளவுகளுக்கு வளர்ந்து வருகிறது. தனிப்பட்ட அல்லது குடும்ப அளவில் நிகழ்த்தப் பட வேண்டிய நிகழ்வுகளும் பகட்டு மற்றும் ஆடம்பரப் பொது விழாக்களாகி வருகின்றன.
ஸஷ்டி அப்த பூர்த்தி, சதாபிஷேகம் அல்லது வர்ஷந்தோறும் வரும் பிறந்த நாள் போன்ற தருணங்கள் அகத்தேடலுக்காகவும் வாழ்க்கை ஓட்டத்தை பரிசீலனை செய்வதற்காகவும் பயன்பட வேண்டிய தருணங்கள். பிறந்த நாள் வாழ்க்கைப் பயணத்தில் கடந்து வந்த பாதை, நம் செயல்கள், சொற்கள் மற்றும் அனுபவங்களைக் கணக்குப் பார்த்து, செய்ய வேண்டியவை தவிர்க்க வேண்டியவை, இவற்றை நிர்ணயம் செய்து வாழ்வின் திசையை சரி செய்வதற்கு ஏற்ற தருணம். ஸஷ்டி அப்த பூர்த்தி (6௦ வயசு பூர்த்தி) குடும்ப எல்லைக்குள் முடங்கி இருந்த வாழ்க்கையின் எல்லையை விரிப்பதற்கானதொரு தருணம். க்ரிஹஸ்த ஆஷ்ரமத்தை விட்டு விலகி வான-ப்ரஸ்த ஆஷ்ரமத்தினுள் நுழைவதற்கான தருணம். உபநயனம் ஞான உலகத்தினுள் அடி எடுத்து வைப்பதற்கான நுழைவாயில் என்றால், திருமணம் க்ரிஹஸ்தாஷ்ராமத்திற்கான நுழைவாயில் என்றால், குடும்பப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கானதொரு தருணம் என்றால், ஸஷ்டி அப்த பூர்த்தி குடும்பப் பற்றினைக் குறைத்துக் கொள்வதற்கானதொரு தருணம். ஸஹஸ்ர சந்த்ர தர்ஷனம் (ஆயிரம் பிறை கண்ட வயசு) அல்லது சதாபிஷேகம் உலகப் பற்றினை விலக்கும் முயற்சியைத் தொடங்க வேண்டிய தருணம், ஸன்யாஸ தீக்ஷைப் பெற வேண்டிய தருணம், அமைதியான மரணம் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டிய தருணம். இத்தருணங்களில் நடத்தப் படும் சடங்குகளும் ஓதப் படும் வேத மந்த்ரங்களும் இந்நோக்கத்தினை நினவு படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
ஆனால், நீண்டதொரு பெருமூச்சுடன் சொல்கிறேன் ஆனால்.. இத்தருணங்கள் அனைத்தையும் நாம் வெறும் பகட்டிற்காகவும் வறட்டு கௌரவத்தைக் காட்டிக் கொள்ளவும் தற்புகழ்ச்சிக்காகவும் ஏற்ற தருணங்களாக மாற்றி வருகிறோம். போட்டோக்கள், வீடியோக்கள், அலங்கார உடைகள், பார்லர், செயற்கையான புன்னகை, பரிசுகள், பூங்கொத்துக்கள், அதிக அதிக விலை மதிப்புள்ள வரவேற்பு அட்டைகள், பெரிய மண்டபங்கள், அதிக அதிக எண்ணிக்கையில் வகை வகையான தீனிகள், அக்கறை இல்லாத கூட்டம், வெற்று அரட்டைகள், இவற்றுடன் முகந்தெரியாத எவருடனோ ஒரு பைத்தியக்காரப் போட்டியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துகிறோம். 'சுற்றிலும் அன்றாட அடிப்படை உணவிற்காகப் போராடும் மக்கள் இருக்கையில் நம் பணத்திமிரைக் காட்டும் வகையில் பகட்டுடன், ஆடம்பர உணவைத் தின்பதையே பாபம் என்கின்றன நம் சாஸ்த்ரங்கள். எளிமையான உணவை அமைதியாக உட்கொள்ளச் சொல்கின்றன. புத்த மதத்தில் ஊறியுள்ள ஜப்பானில் இப்பழக்கம் மிக ஆழமாக பதிந்துள்ளதாம்.
இத்தருணங்களில் வைதீக சடங்குகளும் வேத மந்த்ரங்களும் இடம் பெறுகின்றன, ஆனால் செய்பவரிடமோ, செய்து வைப்பவரிடமோ கூடியுள்ள கூட்டத்தினரிடமோ துளியும் ஸ்ரத்தை இல்லாமல். புரோஹிதர் வேத மந்த்ரங்களை உச்ச ஸ்தாயியில் சொல்கிறார் என்றாலும் சுற்றியுள்ள கூட்டம் ஹிரண்யகசிபு வம்சத்தில் பிறந்தவர்களோ என்று ஸந்தேஹம் தோன்றும் வகையில், வேத மந்த்ரங்கள் எவர் காதிலும் விழுந்து விட அனுமதிக்க மாட்டேன் என்று சபதம் ஏற்றவர்களைப் போல உரத்த குரலில் அற்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பர். அங்குள்ள சூழ்நிலையில் மனதார வாழ்த்தவும் தோன்றாது. மனஸில் தோன்றும் அருவருப்பு காரணமாக, நான் கடந்த பல வர்ஷங்களாக இத்தகைய நிகழ்வுகளைத் தவிர்த்து வருகிறேன். வேறு வழி தெரியவில்லை. மற்றொரு நாளில் அக்குடும்பத்தைக் காணச் செல்வேன்.
இத்தகைய ஆடம்பரமான, காட்டிக் கொள்ளும் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்ள, மேலும் பல தருணங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. பிறந்த நாள், திருமண நாள், நம் வாழ்வின் அற்ப நிகழ்வுகளின் வெள்ளி விழா, பொன்விழா போன்ற பல விழாக்கள். ஐந்திலக்கு, ஆறிலக்கு சம்பளம் காரணமாக தடையில்லாத பண வரவு, வாழ்க்கையில் வெறுமை மற்றும் இலக்கின்மை, தாழ்வு மனப்பான்மை, 'நானும் ஒருவன்' என்று யாருக்கோ காட்டிக் கொண்டு பொய்யான அந்தஸ்தைப் பெற்றிடும் ஏக்கம், அரசியல்வாதிகள், சினிமா பிரமுகர்கள், மற்ற செல்வந்தர்களின் தவறான முன்னுதாஹரணம், ஸமுதாயத்தில் 'நலன் விழைந்து நல் வார்த்தைகளைத் தெளிவாக எடுத்துக் கூறவல்ல' முதியோர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி, எல்லா துறைகளிலும் பணம் மையமான சிந்தனையின் ஆக்கிரமிப்பு... இத்தகைய வக்ரத்திற்கான பிரதான காரணங்கள் இவை. அமைதியில் ஆனந்தம் காணப் பயில்வோம். எளிமையில் ஆனந்தம் காணப் பயில்வோம். தற்புகழ்ச்சியில் இருந்தும், சுய விளம்பரத்தில் இருந்தும் விலகப் பயில்வோம். நம்முள் ஆராய்ந்து நமது உண்மையான மதிப்பைக் கண்டெடுத்து, ஒளிர்வோம். பாராட்டு, கைதட்டல்,
பரிசுகள் மற்றும் பூங்கொத்துக்கள் பெற்றிடும் ஆசை, சமுதாயத்தின் ஏற்பு என்ற கானல் நீருக்குப் பின் ஓட்டம், இவை நம்மை பலஹீனப் படுத்தும் கைத்தாங்கல்கள். இவற்றை விட்டெறிவோம்.

Comments
Post a Comment