உபவாஸம் என்பது வெறும் பட்டினி கிடப்பது இல்லை. வாஸம் என்றால் வஸிப்பது. உப என்றால் அருகில். ஆக, உபவாஸம் என்றால் இறைவனுக்கு அருகில் வாஸம் செய்வது. இறைவனின் சிந்தையில் லயித்திருப்பது. அவ்வாறு லயித்திருக்கையில் உணவும் உறக்கமும் மறந்து போகும் அல்லவா? உண்ணாமல் இருப்பதும் உறங்காமல் இருப்பதும் உபவாஸத்தின், இறை சிந்தனையில் லயித்து விடுவதின் விளைவு மட்டுமே. உணவில்லாமல் இருப்பதே உபவாஸம் ஆகி விடாது.
அதே போல, சில கட்டுப்பாடுகளின் தளைகளால் தன்னைத் தானே பந்தப் படுத்திக் கொள்வதே விரதம் அல்லது விரத பந்தனம். இத்தகைய விரதங்களில் ஒன்றே சாதுர்மாஸ்ய வ்ரதம். நான்கு மாஸங்கள், அதாவது, ஆஷாட த்வாதசி அன்று தொடங்கி கார்த்திகை ஏகாதசி வரை, உள்ள காலம் சாதுர்மாஸ்யம் எனப்படுகிறது. (சாந்த்ரமான அல்லது பூமியை சந்திரன் சுற்றி வரும் காலக்கணக்கினை அடிப்படையாகக் கொண்ட வர்ஷத்தின் மாசங்களின் பெயர்கள் இவை.) சிலர் ஆஷாட பௌர்ணமியில் இருந்து கார்த்திகை பௌர்ணமி வரை சாதுர்மாஸ்யம் அனுஷ்டிக்கின்றனர். இந்த வர்ஷம் ஆஷாட த்வாதசி ஜூலை 9'ம் தேதி வருகிறது. அன்று முதல் நவம்பர் 4'ம் தேதி வரை சாதுர்மாஸ்ய காலம். இன்றைய அவசர யுகத்தில் நான்கு மாசங்கள் அல்ல, நான்கு பக்ஷங்கள் மட்டுமே விரத காலமாக அனுஷ்டிக்கப் படுகின்றன.
இந்த காலம் பாரதத்தில் மழைக் காலம் ஆகும். இவ்விரத காலத்தில் ஸந்யாசிகள் ஓரிடத்தில் தங்கி பூஜைகளும் ப்ரவசனங்களும் செய்வர். ஆனால், இந்த வ்ரதம் ஸந்யாசிகளுக்கு மட்டும் இல்லை. க்ருஹஸ்தர்களுக்கும் உண்டு. க்ருஹஸ்தர்களான நாம் உணவில் சில கட்டுப்பாடுகள் வைத்துக் கொண்டு தர்ம சிந்தனையை வளர்க்கும் விதமாக தர்ம க்ரந்தங்களைப் படிக்க வேண்டும். குஜராத்தில் குடும்பங்களிலும் மாணவர் இல்லங்களிலும் இவ்ரதம் அனுஷ்டிக்கப் படுவதை நான் கண்டிருக்கிறேன். நம் நாடு முழுவதும் சாதுர்மாஸ்ய வ்ரத காலத்தில் ஆயிரக்கணக்கான இடங்களில் பாகவதம் படிக்கப் படுகிறது. பாகவத ஸப்தாஹம் நடத்தப் படுகிறது.
பொதுவாக, ஸந்யாசிகள் நடந்தே சுற்றுவார்கள், காலில் செருப்பில்லாமல் அல்லது கட்டையினால் ஆன பாதுகை அணிந்து. ஸந்யாசி என்பவர் அன்பின் உருவகம் அல்லவா? அனைத்து உயிர்களின் பால் அன்பு கொண்டவர். மழைக் காலமோ பல வகையான பூச்சிகளும் புழுக்களும் வண்டுகளும் பூமியில் இருந்து வெளிப்படும் ஒரு காலம். அக்காலத்தில் இவ்வுயிர்களில் எதுவும் ஸந்யாசிகளின் கால்களில் மிதிபட்டு செத்து விடக் கூடாது என்று கருதியே அவர்கள் தம் பயணங்களை நிறுத்தி, ஓரிடத்தில் முகாம் இட்டு தங்குகின்றனர். க்ருஹஸ்தர்களுக்கோ இது ஒரு வர ப்ரஸாதமாக அமைந்து விடுகிறது. ஸந்யாசியின் ஸந்நிதியில் நான்கு மாச கால ஸத்ஸங்கம். காஞ்சி பெரியவர் ஸ்ரீ பரமாச்சார்ய நாடு முழுவதும் பல முறை நடந்தே வலம் வந்தார் அல்லவா? பல சிறிய பெரிய ஊர்களில் சாதுர்மாஸ்ய வ்ரதத்திற்காக முகாம் இட்டிருக்கிறார். காஞ்சி மடத்தில் (மற்ற சங்கர மடங்களிலும் இருக்கலாம்.) சாதுர்மாஸ்ய காலத்தில் ஆதி சங்கரர் உபநிஷத் களுக்கு எழுதிய பாஷ்யங்கள் படிக்கப் படுகின்றன. எனக்கு அத்தகைய குழுவில் கலந்து கொள்ளும் பாக்யம் இரண்டு முறை கிடைத்திருக்கிறது.
க்ருஹஸ்தர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள உணவுக் கட்டுப்பாடுகளின் பின்னால் "விஞான பூர்வ" காரணங்கள் என்னவென்ன என்பதை நான் ஆராய விரும்பவில்லை. இவை யோசனைகளே, கட்டளைகள் அல்லது 'பத்வா' (Fatwaa) இல்லை. ஹிந்து தர்மம் பத்வாக்கள் வெளியிடுவதில் நம்பிக்கை வைப்பதில்லை. (தற்செயலாக இன்றுதான் நம் நாட்டு ஸர்வோச்ச நீதி மன்றம் பத்வா விடுவதைக் கண்டித்திருக்கிறது.) ஹிந்து தர்மம் யோசனை மட்டுமே வழங்கிடும். பின்பற்றுவது தனி நபரின் ஷ்ரத்தையைப் பொருத்தது. முதல் மாசத்தில், அதாவது, ஆஷாட த்வாதசியில் இருந்து ஸ்ராவண ஏகாதசி வரை, காய்கறிகள் தவிர்க்கப் பட வேண்டும். குழம்பில் சேர்க்கப் படும் புளியும், மிளகாயும் தேங்காயும் கூட தவிர்க்க வேண்டும். தான்யங்களும் பருப்பு வகைகள் மட்டுமே உணவாக வேண்டும். இரண்டாம் மாஸத்தில், அதாவது, ஸ்ராவண த்வாதசியில் இருந்து பத்ரபாத ஏகாதசி வரை, தயிரும் மோரும் தவிர்க்கப் பட வேண்டும். பத்ரபாத த்வாதசி முதல் அஷ்வின் ஏகாதசி வரையிலான மூன்றாம் மாஸத்தில் பால் கூடாது. நெய்யும் பருப்பு வகைகளும் தவிர்க்கப் பட வேண்டியவை நான்காம் மாஸத்தில், அதாவது அஷ்வின் த்வாதசி முதல் கார்த்திகை ஏகாதசி வரை. தவிர்க்கப் பட வேண்டிய விஷயங்கள் இல்லாமல் என்னவெல்லாம் தயாரிக்கலாம் என்பது ஸமையல் செய்திடும் தாய்மார்களுக்கு ஆக்கபூர்வமான ஒரு சவால். குறிப்பாக, தமிழ் நாட்டில் புளி இல்லாமலும் தேங்காயும் மிளகாயும் சேர்க்காமலும் சமையல் செய்வதென்பது பலருக்கும் கற்பனையும் செய்ய முடியாதது. மோர் அல்லது தயிர் இல்லாமல் உணவை முடிப்பது நம்மில் பலருக்கு மிகக் கடினமான பரிக்ஷை. ஆயின், மாற்றம் எப்பொழுதும் நமக்கு ஊக்கமும் உத்ஸாஹமும் அளிக்க வல்லதுதான்.
ஸ்வாத்யாயம் அல்லது தர்ம க்ரந்தங்களைப் படித்தல் ஒரு தெய்வீகத் தன்மை என்று கீதை சொல்கிறது. அநேக க்ருஹஸ்தர்களுக்கு இன்றைய வாழ்வின் படு வேக ஓட்டத்தில் படிப்பது இயலாத கார்யம் எனத் தோன்றுகிறது. சாதுர்மாஸ்ய வ்ரதம் நமக்கெல்லாம் ஆழமான புஸ்தகங்களைப் படிக்க அருமையானதொரு வாய்ப்பினை அளிக்கிறது. குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஒரு அத்தியாயம், ஏன், ஒரு பக்கம் மட்டுமே படித்தாலும் பரஸ்பர உறவுகள் பலப்படுவதுடன் குடும்ப சூழ்நிலையும் மேம்பட்டு விடும்.
"எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாத வாழ்க்கை" என்பதே இன்றைய நவீன யுகத்தின் மந்திரமாக இருக்கிறது. மேற்கத்திய சிந்தனையின் தாக்கத்தினால் குழந்தைகள் மீதோ, பெண்கள் மீதோ, உணவு-உறக்க நேரத்திலோ, உடை, வெளியே சுற்றுதல், போன்று அன்றாட வாழ்க்கையின் வேறு எந்த விஷயங்களிலும் எவ்விதக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தப் படுகிறது. தனக்குத் தானே சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வது, வர்ஷத்தில் ஒரு சில நாட்களாவது நிர்பந்தங்களுடன் கூடிய வாழ்வினை வாழ்வது, நம் ஊக்கத்தினை வளர்த்து வாழ்வின் தரத்தினை உயர்த்திடும் என்பதில் ஸந்தேஹம் இல்லை.
நான் வர்ஷம் 2,௦௦௦ முதல், அதாவது நான் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைத்த ஆண்டு முதல் எளிய முறையில் இவ்வ்ரதத்தை அனுஷ்டிக்க முயன்று வருகிறேன். இவ்வாண்டும் காவேரிக் கரையில், திருவிசை நல்லூர் என்ற ஊரில் அனுஷ்டிக்க சங்கல்பம். ஸாயங்கால வேளைகளில் கீதையின் கருத்துக்கள் சர்ச்சை செய்யலாம் என்று விருப்பம். இயன்றவர்கள் ஓரிரண்டு நாட்களாவது கலந்து கொள்ள பணிவுடன் அழைக்கிறேன்.

Comments
Post a Comment