ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 007
मा ते सोङ्गोSस्तु अकर्मणि (अध्याय २ - श्लोक ४७)
மா தே ஸங்கோஸ்து அகர்மணி (அத்யாயம் 2 - ஶ்லோகம் 47)
Maa te sangostu akarmani (Chapter 2 - Shloka 47)
செயல் ஸ்வயத்தின் வெளிப்பாடு. செயல் ஸ்வபாவத்தின் உருவகம். 'நானே செயல்'. வெற்றியோ தோல்வியோ, அச்செயலின் விளைந்திடும் ஃபலன் எதுவாகவும் இருக்கட்டும்.
வெற்றி என்பது எல்லா நபருக்கும், எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் பொருந்தக் கூடிய ஒரு விஷயம் இல்லை. வெற்றி என்பது பிறர் நமக்கு அளித்திடும் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் மாத்ரமே. ஆனால் செயல் நம் ஸ்வ தன்மை. பிறரின் ஒப்புதலைப் பொருத்ததில்லை. மற்றவர் அங்கீகாரம் அல்லது ஒப்புதல் இருந்தாலும் இல்லா விட்டாலும் 'நான் நானே'.
எடுத்த ஒரு செயலை முடித்திடும் போது தோன்றிடும் ஆனந்தம் நிறைவானது. நாடிய ஃபலன் கிடைத்திடும் போது ஏற்படும் மகிழ்ச்சியுடன் ஒப்பிடும் போது பூர்ணமானது. 'செயலை முடித்திடும் போது' என்றேன் நான். ஆம். செயலைச் செய்திடும் போது அச்செயலையோ அதில் விளைந்திடும் ஆனந்தத்தையோ அநுபவித்திட முடியாது. எதையும் அநுபவித்திட, நாம் அதிலிருந்து விலகி நிற்க வேண்டும். செயலில் மூழ்கி விடுதல், செயலுடன் முழுமையாக ஒன்றி விடுதல், நிகழ்ந்தால் மட்டுமே, செய்பவனும் செயலும் வெவ்வேறாக இருந்திடாமல் செய்யப்படும்போது மாத்ரம்தான், செயல் ஸ்வயத்தின் வெளிப்பாடு. இத்தகைய செயல் ஆனந்தம் அளித்திடும். செயல் நிறைவடைந்திடும் போது அவ்வானந்தத்தை அநுபவிக்கலாம். உறங்கிக் கொண்டிருக்கும் போது உறக்கத்தின் ஆனந்தத்தை அநுபவித்திட முடியாது. அநுபவித்திடும் விருப்பம் பிறந்தாலே உறக்கம் கெட்டு விடும். ஆழமான தூக்கத்தின் ஸுகத்தினை உறக்கம் முடிந்து எழுந்தவுடன் அநுபவித்திடலாம். அதே போல தான் செயலின் ஆனந்தமும். இத்தகைய செயலே உண்மையில் செயலாகும். அச்செயலின் ஃபலன் மீது தோன்றிடும் விருப்பம் செயலையே அழித்து விடும்.
அர்தம் : செயல் இன்மை மீது பற்று வைக்காதே.
மநுஷ்யனுடைய ஸஹஜமான இயல்பு போல தோற்றம் அளிக்கும் ஒரு தன்மையைப் பற்றி இங்கு எச்சரிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன். "உனக்கு எவ்வகை ஃபலனும் கிடைக்கப் போவதில்லை என்றால், முயற்சியே ஏன் செய்ய வேண்டும்?" "'தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லை என்று அறிந்த பிறகு உன் பணம், நேரம் மற்றும் உழைப்பைச் செலவழித்து தீவ்ர ப்ரசாரம் ஏன் செய்ய வேண்டும்?" "நீ அவ்வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இல்லை என்னும் போது நுழைவுப் பரீக்ஷை ஏன் எழுதுகிறாய்?" "நமக்கு ஆதரவாக திரை உலகின் ஒரு பெரும் புள்ளி இருந்தால் மட்டுமே இங்கு வெற்றி அடைய முடியும். அதுதான் இந்நாள் வரை நிலவரம். நீ இங்கு முயற்சி செய்வது வீண். வேறு ஏதாவது முயற்சி செய்." இத்தகைய சொற்கள் நாம் கேட்காதவை அல்ல. (முயற்சி செய்திடும் செயலுக்குப் ஃபலன் கிடைத்திடாது என்று ஸ்ரீ க்ருஷ்ணன் கூறவில்லை. ஃபலன் மீது நாட்டம் கொள்ளாதே என்றுதான் கூறி உள்ளார்.) நம் சிந்தனையும் நம்மைச் சுற்றி உள்ளோரின் யோஜனைகளும் இதே ரீதியில் உள்ளன. "நம் செயலின் விளைவாக அநுகூல ஃபலன் கிடைத்திடும் வாய்ப்பு குறைவாக இருந்தால் செயலை முயற்சி செய்வதே வீண்" என்பதே பெரும்பாலோர் வழங்கிடும் யோஜனை. அதே போல, 'ஃபலனின் மீது வைத்திடும் விருப்பமே செயலுக்குத் தூண்டுகோல். அது இல்லை என்றால் செயலும் நிகழ்ந்திட முடியாது' என்பதே பெரும்பாலோரின் உறுதியான நம்பிக்கை. அதனால் தான் 'ஃபலன் மீது விருப்பமும் வைத்திடாதே. செயலையும் தவிர்த்திடாதே' என்ற ஸ்ரீ க்ருஷ்ணனின் கருத்து நம்மில் பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. ஆனால், திரை உலகிலும், அரசியலிலும் விஜ்ஞானம், கலை மற்றும் விளையாட்டு அரங்குகளிலும் நாம் காணும் காட்சி இதற்கு மாறான உண்மையை அறிவிக்கிறது. இத்துறைகளிலும் மற்ற எந்த துறையிலும் பெரும் வெற்றியைக் குவித்தோர் அனைவரும் செயல்பட்டிருக்கின்றனர் ...

வெறும் செயலில் (முயற்சியில்) மட்டும் --
இடையறாத செயலில் --
எல்லா வகை எதிர்மறை சூழ்நிலைகளைத் தாண்டிய செயலில் --
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெற்றியின், அநுகூல ஃபலனின் எவ்வித அறிகுறியும் இல்லாத நிலையிலும் இடையறாத செயலில் --
நம்பிக்கையைக் குலைக்கவல்ல கடுமையான சூழலிலும் உத்ஸாஹம் குறைந்திடாத செயலில் --
ஈடுபட்டுள்ளனர் என்பதையே நாம் காண்கிறோம். வெற்றி, அநுகூல ஃபலன் என்பவற்றிற்கு அவர்கள் உள்ளங்களில் துளி இடமும் இல்லை. வெற்றியே அவர்களைத் தேடி வந்து பெருமிதத்துடன் அவர்களை ஒட்டிக் கொண்டது என்று கூறினால் மிகை ஆகாது .
செயல் ஸ்வயத்தின் வெளிப்பாடு. செயல் ஸ்வபாவத்தின் உருவகம். 'நானே செயல்'. வெற்றியோ தோல்வியோ, அச்செயலின் விளைந்திடும் ஃபலன் எதுவாகவும் இருக்கட்டும்.
வெற்றி என்பது எல்லா நபருக்கும், எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் பொருந்தக் கூடிய ஒரு விஷயம் இல்லை. வெற்றி என்பது பிறர் நமக்கு அளித்திடும் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் மாத்ரமே. ஆனால் செயல் நம் ஸ்வ தன்மை. பிறரின் ஒப்புதலைப் பொருத்ததில்லை. மற்றவர் அங்கீகாரம் அல்லது ஒப்புதல் இருந்தாலும் இல்லா விட்டாலும் 'நான் நானே'.
எடுத்த ஒரு செயலை முடித்திடும் போது தோன்றிடும் ஆனந்தம் நிறைவானது. நாடிய ஃபலன் கிடைத்திடும் போது ஏற்படும் மகிழ்ச்சியுடன் ஒப்பிடும் போது பூர்ணமானது. 'செயலை முடித்திடும் போது' என்றேன் நான். ஆம். செயலைச் செய்திடும் போது அச்செயலையோ அதில் விளைந்திடும் ஆனந்தத்தையோ அநுபவித்திட முடியாது. எதையும் அநுபவித்திட, நாம் அதிலிருந்து விலகி நிற்க வேண்டும். செயலில் மூழ்கி விடுதல், செயலுடன் முழுமையாக ஒன்றி விடுதல், நிகழ்ந்தால் மட்டுமே, செய்பவனும் செயலும் வெவ்வேறாக இருந்திடாமல் செய்யப்படும்போது மாத்ரம்தான், செயல் ஸ்வயத்தின் வெளிப்பாடு. இத்தகைய செயல் ஆனந்தம் அளித்திடும். செயல் நிறைவடைந்திடும் போது அவ்வானந்தத்தை அநுபவிக்கலாம். உறங்கிக் கொண்டிருக்கும் போது உறக்கத்தின் ஆனந்தத்தை அநுபவித்திட முடியாது. அநுபவித்திடும் விருப்பம் பிறந்தாலே உறக்கம் கெட்டு விடும். ஆழமான தூக்கத்தின் ஸுகத்தினை உறக்கம் முடிந்து எழுந்தவுடன் அநுபவித்திடலாம். அதே போல தான் செயலின் ஆனந்தமும். இத்தகைய செயலே உண்மையில் செயலாகும். அச்செயலின் ஃபலன் மீது தோன்றிடும் விருப்பம் செயலையே அழித்து விடும்.
அதே ஸமயம், செயலின்மை ஸ்வயத்தையே மறுப்பதாகும். செயலின்மை இயற்கைக்குக் விரோதமானது. செயலின்மை என்பது இல்லாத ஒன்று. நாம் செயலின்மை என்று சொல்வது வெளிப்படையான, கண்களுக்குப் புலப்படும் ஸ்தூலமான செயல்களை மட்டுமே கருத்தில் கொண்டு. செயல் நிறைந்திருக்கும் மனஸ் உடலையும் செயலில் ஈடுபடத் தூண்டும்.
விருப்பமான ஃபலனுடன் கொண்டிடும் பற்று செயலைத் தூண்டினாலும் செயல்திறனைக் குறைத்து, செயலைக் கெடுத்து, அதனால் விளையும் ஃபலனையும் கெடுத்திடும். மனஸில் அமைதியின்மையும் விளைந்திடும். மனஸின் அமைதியின்மை வெளிப்படையான செயலைத் தடுத்து செயலின்மையைத் தூண்டிடும். இத்தகைய செயலின்மையே சோம்பலுக்குக் காரணமாகி விடும். சோம்பல் உலுக்கப்பட்டு மீண்டும் செயலாக மாற வேண்டும் என்றால் மனஸில் மீண்டும் அநுகூலமான ஃபலனின் விருப்பம் தோன்ற வேண்டும். ஆக, விருப்பமே செயலைத் தூண்டுகிறது. அதே விருப்பம் செயலின்மைக்கும் காரணமாகிறது.
விருப்பு இல்லா நிலை, ஃபலனைப் பற்றிய ஆர்வம் இன்மை மன அளவில் செயல் இன்மையே. மன அளவில் செயல் இன்மை இருந்தாலும் இத்தகைய ஒருவர் வெளிப்படையாக சுறுசுறுப்பான செயல்களில் ஈடுபட்டிருப்பார். இத்தகைய செயல்களே ஒருவரின் ஸ்வயத்தின் வெளிப்பாடு. ஃபலனைப் பற்றிய ஆர்வமோ விருப்போ இச்செயல்களைத் தூண்டுவதும் இல்லை பாதிப்பதும் இல்லை. (விருப்பமே இல்லாத போது எவ்வாறு தூண்டும் அல்லது பாதிக்கும்??)

Comments
Post a Comment