Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் 010



கீதையில் சில சொற்றொடர்கள் 010

स्थितप्रज्ञस्तदोच्यते,  स्थितधीर्मुनिरुच्यते, तस्य प्रज्ञा प्रतिष्ठिता,  (अध्याय २ - श्लोक ५५, ५६, ५७, ५८, ६१, ६८,)
ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே, ஸ்திததீர்முனிருச்யதே, தஸ்ய ப்ரஜ்ஞாப்ரதிஷ்டிதா, (அத்யாயம் 2 - ஶ்லோகம் 55, 56, 57, 58, 61, 68.)
Sthitapragyasthadochyate, Sthitadheermuniruchyate, Tasya Pragyaa Pratishthitaa.. (Chapter 2 - Shlokam 55, 56, 57, 58,61, 68)

அர்தம் :  அவன் ஸ்தித ப்ரஜ்ஞன் என்றழைக்கப் படுகிறான். முனி அவனை ஸ்தித பரஜ்ஞன் என்று அழைக்கின்றனர். அவனுடைய ப்ரஜ்ஞா ஸ்திரமானது.

இந்த சொற்றொடரில் ஸ்தித / ப்ரதிஷ்டிதா என்ற சொல் ப்ரதானமானது. நிலைத்த, உறுதியான வேருடன், என்று அர்தம். நிலைத்தன்மை உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது. நிலையான குழந்தைப் பர்வம் எதிர்க்காலத்தில் ஸமநிலை தடுமாறாத ஆளுமைக்கு வழி வகுக்கிறது. நிலையான குழந்தைப் பர்வத்தை அநுபவித்தவனை பெரும் பாக்யஶாலி என்றே சொல்ல வேண்டும். உணவு, கல்வி, பாதுகாப்பு ஆகியவை இடர்கள் இல்லாது, கவலைகள் இல்லாமல் கிடைப்பது ஒரு குழந்தையின் அடிப்படை உரிமை. நிலையான நண்பர்களும் குழந்தைப் பர்வத்தின் ஒரு மஹத்வமான அம்ஶம். தந்தையின் பணியிடம் மாறுவதால் ஊர் விட்டு ஊர், பள்ளி விட்டு பள்ளி, புதிய சூழ்நிலை, புதிய சுற்றம் என்று அடிக்கடி இடம் பெயர்பவர்கள் பெரும்பாலும் எதிர்க்காலத்தில் நண்பர்கள் இல்லாமல் தனிமையான வாழ்க்கையை அநுபவிக்கின்றனர். இயற்கைச் சீற்றம், கலவரம், போர், வளர்ச்சித் திட்டங்கள், குலைய வைத்த மற்ற ஸம்பவங்கள் ஆகியவற்றால் இடம் பெயர்பவர்கள் கதி என்ன என்பதை கற்பனை செய்து பார்த்தாலே நடுங்கும். நீண்ட கால அரவணைப்பும் ஆதரவும் அளித்தால் மட்டுமே இத்தகைய சிறுவர்கள் ஸஹஜ நிலைக்குத் திரும்புவார்கள்.

"A rolling stone gathers no moss" "உருளும் கல்லில் அதாவது ஒரு இடத்தில் நிலையாக இல்லாத கல்லில் அழுக்கு சேராது" என்று ஆங்க்லத்தில் ஒரு பழமொழி உண்டு. அது ஸந்யாஸீக்கு மட்டுமே பொருந்தும். க்ருஹஸ்தனுக்கல்ல. க்ருஹஸ்தன் நிலையாக ஒரே வீட்டில் இருந்தால் அழுக்கு, பயனற்ற கண்டா முண்டா ஸாமான்கள் நிறையவே சேரும் என்பது உண்மைதான். அந்த ப்ரஶ்னையை சற்று விழிப்புணர்வு மற்றும் சற்று நிர்வாஹத் திறன் இவற்றால் தீர்த்துக் கொள்ளலாம். க்ருஹஸ்தனுக்கு நிலைத்தன்மை வேண்டும் என்பதில் மாத்ரம் சிறிதளவும் ஸந்தேஹம் இல்லை.

ஆனால், இங்கு பேசப்படுவது புத்தியின் ஸ்திரத்தன்மையைப் பற்றி. ராவணனால் மிகத் தீவ்ர வைராக்யத்துடன், தடுமாற்றம் இல்லாத மனஸுடன் தவத்தில் ஈடுபட முடிந்தது. பாறையையே உருக்கி விடும் ஸங்கீதத்தைத் தன் வீணையில் இருந்து எழுப்ப முடிந்தது. ஆனால், ஸூர்பநகை (ஸூர்ப என்றால் முறம். முறம் போன்ற நகம் கொண்டவள் அவள்.) ஸீதையின் அழகை விவரித்ததைக் கேட்டதில் காமவஶமாகி, அவன் புத்தி தடுமாறியது. ஸீதையைத் தூக்கி வந்தான். லங்கையில் சிறை வைத்தான். அவன் அழிவிற்கே விதையானது அவனது இந்த புத்தி தடுமாற்றம்.

கம்ஸன் தன் ஜனங்களுக்கு நல்ல ராஜாவாகவே இருந்தான். தன் ஸஹோதரி தேவகியின் மேல் அன்பு வைத்திருந்த ஒரு நல்ல ஸஹோதரனாக இருந்தான்.  அவளை வஸுதேவனுக்குத் திருமணம் செய்து வைத்து, புது மணத் தம்பதியைத் தேரில் வைத்து அத்தேரை தன் கையால் இழுத்தான். அந்த ஸமயத்தில் வானத்தில் உதித்த அஶரீரியின் ஶப்தம் , "இந்த தேவகியின் மகனே உனது மரணத்திற்குக் காரணமாவான்" என்ற செய்தியைச் சொன்னது. பயவஶமாகிய அவனது புத்தி பிசகியது. அன்பு நிறைந்த ஒரு ஸஹோதரன் தன் ஸஹோதரியின் கொடுமையாளன் ஆனான். அவளை சிறை வைத்தான். அவளுடைய ஆறு குழந்தைகளுக்கு யமன் ஆனான்.

பரீக்ஷித் என்ற ராஜா தர்மம் அறிந்தவன். நீதி தவறாமல் ராஜ்யத்தை ஆண்டு வந்தவன். ப்ரஜையை தன் மக்களாகவே பாவித்தவன். அவன் ஒரு ஸமயம், வனத்தில் பாதை மறந்தான். தாஹத்தில் தவித்த அவன் தண்ணீரைத் தேடி அலைந்தான். ஒரு ஆஶ்ரமத்தையும் அதில் கண் மூடி, தவத்தில் மூழ்கி இருந்த ஒரு ர்ஷியையும் கண்டான். குரல் கொடுத்து அவரை அழைத்தான். அவர் கண் திறக்கவில்லை. ஒரு க்ஷண நேரம் க்ரோதவஶமாகிய அவன் புத்தி தடுமாறியது. அருகில் கிடந்த ஒரு செத்த பாம்பினை அவர் கழுத்தில் மாலையாக ஏற்றி விட்டு அரண்மனை திரும்பினான். இந்த க்ஷண நேர புத்தி தடுமாற்றத்திற்கு மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருந்தது பரீக்ஷித்திற்கு.

இவை எல்லாம் மிகக் கடுமையான உதாஹரணங்கள். ஸாதாரண மநுஷ்யர்களான நாம் அன்றாடம் அஸ்திர புத்தியை காண்கிறோம். அநுபவிக்கிறோம். அதன் காரணமாக நாம் முடிவெடுக்க முடியாமல், குழப்பம் நிறைந்து, விளைந்திடும் துயரங்களை வாழ்நாள் முழுவதும் அநுபவிக்கிறோம். தனக்குரிய தண்டனையை தானே தேர்ந்தெடுக்க அநுமதிக்கப் பட்ட அந்த கைதியைப் போல இருக்கிறது நம் நிலை. 5௦ வெங்காயங்களைக் கடித்துத் தின்ன வேண்டும், அல்லது 5௦ கசையடிகளை ஏற்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அந்த கைதிக்கு வழங்கப் பட்டது. அவனால் தெளிவாக தேர்ந்தெடுக்கவும் முடியவில்லை. தேர்ந்தெடுத்த ஒன்று தரும் கஷ்டத்தைத் தாங்கி கொள்ளவும் முடியவில்லை. இறுதியில் ரெண்டு தண்டனையையும் அநுபவிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு அவன் தள்ளப் பட்டான். நம்மில் மிகச்சிலரே அநுபவத்தில் இருந்து கற்றுக் கொள்கிறோம். ஸ்திர புத்தியைப் பெற்றிடப் பயிற்சியில் ஈடுபடுகிறோம். கீதையின் ரெண்டாவது அத்யாயத்தின் 55'ம் ஶ்லோகம் முதல் 72'ம் ஶ்லோகம் வரை ஸ்தித பிரஜ்ஞனின் லக்ஷணங்கள் விளக்கப் பட்டுள்ளன. ஆசார்ய ஸ்ரீ வினோபா பாவே எழுதிய "ஸ்தித ப்ரஜ்ஞ தர்ஶனம்" என்ற புஸ்தகத்தில் இந்த ஶ்லோகங்கள் மிக அழகாக விளக்கப் பட்டுள்ளன. (ஸர்வோதய வெளியீடு, ஹிந்தியிலும் ஆங்க்லத்திலும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் கிடைத்திடும். தமிழில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.)

அஸ்திர புத்தியைப் பற்றி, நிலையற்ற புத்தியைப் பற்றி நாம் நிறையவே பேசலாம். நமக்கு அது மிக ஸுலபமாக புரியவும் புரியும், ஏனென்றால் நாம் அநுதினமும் அநுபவித்திடும் ஒரு நிலை அது. மேலும், நம்மைச் சுற்றிலும் அஸ்திர புத்தியை வெளிப்படுத்தும் சான்றுகள் நிறையவே நம் கண்களில் படுகின்றன.  ஒரு ஸ்திர புத்தியை கண்டு உணர்தல், தனக்கும் ஒன்று வேண்டும் என்று அவா கொள்ளுதல், அதை வளர்த்துக் கொள்ள பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தல், இவை  மிகக் கடினமான முயற்சிகள். மிக துர்லபமான, அரிதான, முயற்சிகள். நமது வரலாற்றில் ஸ்திர புத்திக்கான பலப் பல உதாஹரணங்கள் உண்டு ஸ்ரீ குரு கோபிந்த ஸிஹ்மனைப் போல. சட்டென்று என் கருத்தில் வரக்கூடியது ஸமீப காலத்திய உதாஹரணமான ஸ்ரீ ரமண மகார்ஷீ. அவர் ஒரு ஸ்தித ப்ரஜ்ஞன், உறுதியாக வேரூன்றிய புத்தி. காற்றில்லாத அறையில் உள்ள தீப ஜ்யோதியைப் போல நிலையான புத்தியை வெளிப்படுத்தியவர்.

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

Chapter X (19 - 42)

\ श्री भगवानुवाच - हन्त ते कथष्यामि दिव्या ह्यात्मविभूतय : । प्राधान्यत : कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे ॥ १९ ॥ Shri Bhagawan said:   I shall speak to Thee now, Oh best of the Kurus! of My Divine attributes, according to their prominence;   there is no end to the particulars of My manifestation. (X - 19) Arjuna asks for a detailed and complete elaboration on His manifestations.   Shri Krishna replies He will be brief in description.   Why?   ‘My manifestations are infinite’, says Shri Krishna.   Shri Krishna is in human form.   The Infinite Paramaatman has bound Himself in a finite Form.   A finite can not fully describe an Infinite.   The same Shri Krishna in the next chapter says, “See My Infinite Forms.   See as much as you wish”, when Arjuna expresses his desire to see His one Form.   Brief in words and Elaborate in Form.;. The discussion in the last shlokam continues here.   The listener’...