ॐ
மே 11 , போக்ஹரன் வெடிப்பு - க்ஷாத்ர ஶக்தியின் வெளிப்பாடு.
மே 11 , போக்ஹரன் வெடிப்பு - க்ஷாத்ர ஶக்தியின் வெளிப்பாடு.
மே 11. இன்று ஒரு மஹத்வ பூர்ணமான நாள். மே 11, 1998. ஆஃப்ரிக கண்டத்தின் நாடுகளின் அதிபர்கள் அனைவரும் ஒரு மாநாட்டிற்காக கூடி இருந்தனர். போக்ஹரனின் அதிர்வலைகள் அங்கும் வந்தன. மாநாட்டின் விஷயத்தை விட்டு விட்டு, ஒரு உலக வரைப்படத்தை வரவழைத்து அதைச்சுற்றி நின்று கொண்டு பாரதம் எங்கே இருக்கிறது என்று ஆஃப்ரிக நாடுகளின் அதிபர்கள் தேடத் தொடங்கினர். அந்த நாள் பாரதத்தைப் பற்றிய பேச்சில் கழிந்தது. ஸ்வதந்த்ரம் அடைந்து 5௦ வர்ஷங்கள் கழித்து உலகம் பாரதத்தை கவனிக்கத் தொடங்கியது என்பதற்கு ஒரு சான்று.
மே 11. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பாரதத்தில் க்ஷாத்ர ஶக்தி ப்ரஹ்ம ஶக்தியுடன் இணைந்த நாள். பாரதம் என்றுமே ப்ரஹ்ம சக்தியாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. ஸ்வாமி விவேகானந்தரும் மஹேஶ் யோகியும் ராமானந்த தீர்தரும் ஸ்ரீ ரமணரும் ஹரே க்ருஷ்ண இயக்கத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ப்ரபு பாதரும் உலகத்தின் கவனத்தை பாரதத்தை நோக்கி திருப்பி இருந்தனர் என்பது உண்மை. பாரதம் தன் உறக்கத்தில் இருந்து விழித்து மீண்டும் ஒரு ப்ரஹ்ம ஶக்தியாக மிளிர்கிறது என்பதற்கு இவர்கள் அனைவரும் சான்று. ஆனால், அது போதாது. உலகத்தில் நல்லவனாக, தூயவனாக, மென்மையானவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும். வலிமை வேண்டும். க்ஷாத்ர ஶக்தி வேண்டும். க்ஷாத்ரம் இல்லாத ப்ரஹ்மம் தர்ம ஸ்தாபனம் என்ற கார்யத்தை முழுமையாக செய்ய முடியாது. பரித்ராணாய ஸாதூனாம் ... மற்றும் விநாஷாய துஷ்க்ருதாம் ... ஸாதுக்களின் ரக்ஷணம் மற்றும் துஷ்டர்களின் அழிவு இவை க்ஷத்ர ஶக்தி இல்லாமல் நடந்திடாது.
ப்ரஹ்மம் இல்லாத க்ஷாத்ரம் ராக்ஷஸ வலிமையாகி விடும். அழிக்கும் வலிமை ஆகி விடும். க்ஷாத்ரம் இல்லாத ப்ரஹ்மம் நபும்ஸகமாகி விடும். இரண்டும் இணைந்தால் மட்டுமே தர்ம ஸ்தாபனம் ஆகிடும். அந்த திஶையில் இந்த நாள், மே 11, போக்ரன் அணு வெடிப்பு நடத்தப் பட்ட நாள், பாரதத்திற்கும் உலகத்திற்கும் மிக மஹத்வமான நாள் .
Comments
Post a Comment