ॐ
கீதையின் சில சொற்றொடர்கள் - 15
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசன்த்யாத்மகாரணாத். (அத்யாயம் 3 - ஶ்லோகம் 13)
Bhunjate te Twagham Paapaa ye Pachantyaatmakaaranaat. (Chapter 3 - Shloka 13)
அர்தம் : தனக்காக மட்டும் ஸமைத்துக் கொள்கிறவர்கள் பாபிகள். அந்த பாபிகள் பாபத்தையே உண்ணுகின்றனர்....
தனக்காக மட்டும் ஸமைத்துக் கொள்கிறவர்கள் பாபிகள். இவர்கள் பாபத்தையே உண்ணுகின்றனர்....மீண்டும் ஒரு முறை ஸ்ரீ க்ருஷ்ணனின் கடுமையான வார்த்தைகள். ஸ்ரீ க்ருஷ்ணனின் இந்த வார்தைகளைப் படித்தார்களோ இல்லையோ, நம் ஹிந்து ஸமுதாயத்தில் அவனுடைய இவ்வார்தைகள் கடாக்ஷமாக கடைப்பிடிக்கப் படுகின்றன என்பது மாத்ரம் ஸத்யம். உணவைப் பகிர்ந்து கொள்ளுதல் என்ற பழக்கம் இங்கு மிக ஆழமாகப் பதிந்து உள்ளது. கிழக்குக் கோடியில் அஸம் முதல் மேற்கில் குஜராத் வரை, வடக்கில் காஷ்மீர் முதல் தெற்கில் ஸ்ரீ லங்கை வரை அனைத்துப் பகுதிகளிலும் வாழும் அனைத்து ஸமுதாயத்தினரும் இப்பழக்கத்தில் ஊறி உள்ளனர். உலகத்தின் மற்ற நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் உணவைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் கிடையாது. ஆனால் நம் நாட்டிலும், ஹிந்து ராஷ்ட்ரத்தின் பகுதிகளாக இருந்த பாகிஸ்தான் மற்று பங்க்ளாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடமும் ஆதித்யம் அல்லது உணவைப் பகிர்ந்து கொள்ளும் இந்த உயர்ந்த வழக்கத்தைக் காணலாம். அவர்களும் ஹிந்துக்கள்தானே!! காலையில் காக்கைக்கு சோற்றுருண்டை வைப்பதும், பசுவிற்கு நீர்த் தொட்டி அமைப்பதும், இரவில் நாய்க்கு உணவு வழங்குவதும், பயணிகளுக்கு உணவு அளிப்பதும், நீர் மற்றும் மோர்ப் பந்தல் அமைப்பதும், அன்ன சத்ரம் அமைப்பதும், நம் பாரத நாட்டில் மட்டுமே காணப்படும் வழக்கங்கள். ஹிந்துக்களின் இவ்வழக்கம் அரஸாங்கம் மீதும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. இலவச உணவு வழங்குவதும், குறைந்த விலை தான்யங்கள் அல்லது உணவு வழங்குவதும், பள்ளி மாணவர்களுக்கு மத்யாஹ்ன உணவு வழங்குவதும் இந்நாட்டு அரஸாங்கங்கள் கூட பின்பற்றிடும் நடவடிக்கைகள். ஹிந்து அமைப்புகளான ஸ்ரீ ஸாய் ஸமிதி மற்றும் ஸ்ரீ க்ருஷ்ண பக்தி இயக்கம் ஆஃப்ரிகாவில் சில லக்ஷ ஏழை கருப்பு மாணவர்களுக்கு உணவு வழங்குகின்றன.
தனக்காக ஸமைப்பதைப் பாபம் என்றே ஹிந்து தாய்மார்கள் கருதுகிறார்கள் என்பதை ஊர்ஜிதப் படுத்திடும் ஒரு ருசிகரமான நிகழ்வு. தென் ஆஃப்ரிகாவில் நான் பெண்களின் (நடுத்தர வயஸு மற்றும் வயஸில் முதிய பெண்கள்) ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி ஒன்றில் ஒரு வாரம் உரை நிகழ்த்தினேன். அங்கு ஒரு நாள் அவர்களிடம், "ஸமைப்பதில் ஆழ்ந்த ஆர்வம் உள்ளவர்கள் கையைத் தூக்குங்கள்" என்றேன். சுமார் நூறு நபர்கள் இருந்த கூட்டத்தில் ஐந்து கைகள் உயர்ந்தன. "என் கேள்வி புரியவில்லையா? ஸமையலில் ஆழ்ந்த ஆர்வம் இருப்பவர்கள், பலவித பண்டங்கள் செய்து பார்த்து மகிழ்பவர்கள் யார் யார், சற்று கைகளை உயர்த்துங்கள்" என்று மீண்டும் ஒரு முறை கேட்டேன். ஐந்தாறு கைகளே உயர்ந்தான். நம் நாட்டுத் தாய்மார்களைக் கண்டிருந்த எனக்கு அதிர்ச்சியும் வியப்பும். அமைதியாக இருந்தேன். "ஓ ! We hate cooking." என்றாள் ஒரு பெண் அனைவரின் ஸார்பாக. "நான் ஸமையல் அறையையே வெறுக்கிறேன்", என்றால் மற்றொருத்தி. மற்றவர்களும் இவர்கள் கூற்றினை ஆமோதித்தனர். "மனஸில் அன்பு இருந்தால் மட்டுமே ஸமைப்பதில் ஆர்வம் இருந்திடும். ஸமைப்பதில் ஆர்வம் இல்லை என்றால் அன்பு இல்லை என்றே அர்த்தம்". என்னை அறியாமல் என் வாயில் உதித்தன இவ்வார்தைகள். (கீதையோ மற்ற எந்த ஶாஸ்த்ரமோ இந்த வார்தைக்குக் காரணமில்லை. Infact, நான் தென் ஆஃப்ரிகாவில் இருந்து திரும்பிய பின்னரே கீதை படித்தேன்.) நம் நாட்டிற்குத் திரும்பிய பின்னர் இவ்வார்தை உண்மைதானா என்று ஶோதிக்க விரும்பினேன். ஸுமார் நூற்று ஐம்பது தாய்மார்களிடம் (அனைத்து வயஸினரும், அனைத்துப் பொருளாதார நிலைகளில் இருப்பவரும்) ஒரு கேள்வி கேட்டேன். "தங்கள் க்ருஹத்தில் பலர் உள்ளனர். நீங்கள் அனைவருக்காகவும் ஸமைக்கிறீர்கள், அல்லது ஸமையற்காரரை ஸமைக்கச் சொல்கிறீர்கள். ஒரு நாள், வீட்டில் உள்ள மற்ற அனைவரும் தத்தம் கார்யமாக வெளியூர் சென்று விட்டனர் என்றால், நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள் என்றால், அன்று என்ன ஸமைத்துக் கொள்வீர்கள்? உங்களுக்குப் பிடித்த பண்டங்களை ஸமைத்துக் கொள்வீர்களா?" இதுதான் என் கேள்வி. "நான் மட்டும் இருந்தாலா? ஏதோ ஒன்றைச் செய்து வயிற்றை நிரப்பிக் கொள்வேன். பிறர் இருந்தால் தான், atleast, வேலைக்காரியாவது சாப்பிட இருந்தால் தான் ஸமையல்." நூற்றைம்பதுக்கு நூற்றைம்பது பேரும் சொன்ன ஒரே பதில் இது. ஆம். மனஸில் மற்றவருக்காக அன்பு இருந்தால் மட்டுமே ஸமையலில் நாட்டம் இருந்திடும். உள்ளத்தில் அன்பு இருக்கிறதா என்பதற்கு ஈடுபாட்டுடனும் ஆனந்தமாகவும் ஸமைக்கிறாள் என்பதே litmus டெஸ்ட்.
பரிமாறுதலும் அவ்வாறே. உலகின் மற்ற நாடுகளில் "Self-Service". "Help Yourself" தான். நம் நாட்டில்தான் பரிமாறுதல் என்ற ஒரு பழக்கமே இருக்கிறது.
இந்த சொற்றொடரில் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸமைப்பது என்ற ஒரு செயலுக்காக மட்டும் இதைக் கூறவில்லை. "எந்த செயலையுமே தனக்காக மட்டும் செய்பவன் பாபம் புரிகிறான்" என்பதே அவன் கூற்று.
Comments
Post a Comment