ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 16
परस्परं भावयन्तः ... (अध्याय ३ - श्लोक ११)
பரஸ்பரம் பாவயந்தஹ ... (அத்யாயம் 3 - ஶ்லோகம் 11)
Parasparam Bhaavayantaha ... (Chapter 3 - Shlokam 11)
அர்தம் : பரஸ்பரம் அன்பு செலுத்துதல், பரஸ்பர அக்கறை மற்றும் ஆதரவு, பரஸ்பர உதவி, ..
முதலில் நான் தென்னாஃப்ரிக்காவின் ஸ்ரீமதி ஸரீஷா ரமேஶ்லால் கோமலுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். FaceBook'ல் அவள் ஷேர் செய்த ஒரு வீடியோ மூலம் எனக்கு கீதையின் இந்த அழகான சொற்றொடரை ஞாபகப் படுத்தியதற்காக. ((https://www.facebook.com/UCBerkeley/videos/10153311993674661/). என்ற அந்த வீடியோவில் அமெரிக்காவில் பர்க்லி பல்கலைக் கழகத்தின் பட்டம் அளிப்பு விழாவில் முதல் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் பெற்ற 'ராதிகா கண்ணன்' என்ற பெண்ணின் மிக அழகான பேச்சு பதிவு ஆகி உள்ளது. அப்பேச்சில் அந்தப் பெண் அறிந்தோ அறியாமலோ ஸ்ரீ க்ருஷ்ணனின் இந்த வசனத்தையே பேசி இருக்கிறாள். என் கவனத்தில் இருந்து இந்த சொற்றொடர் தப்பி விட்டது. அடுத்த ஶ்லோகத்திற்குச் சென்று விட்டேன். நினைவூட்டிய ஸ்ரீமதி ஸரீஷா ரமேஶ்லால் கோமலுக்கும் செல்வி ராதிகா கண்ணனுக்கும் மனஸார்ந்த நன்றிகள்.
பரஸ்பரம் என்பதுதான் இங்கு முக்ய வார்த்தை. பரஸ்பர அன்பு, பரஸ்பர அக்கறை மற்றும் ஆதரவு, பரஸ்பர உதவி, பரஸ்பர ஒத்துழைப்பு, ஒருவரை மற்றவர் உயர்த்திட பரஸ்பர முயற்சிகள்... இது இயற்கையில் அமைந்த ஒரு தத்வம். இயற்கையின் படைப்பே இந்த தத்வத்தின் ஆதாரத்தில் தான். இயற்கையில் ஒவ்வொன்றும் பிறருக்காகவே செயல் புரிகின்றன. நாம் அனைவரும் பரஸ்பரம் பிணைக்கப் பட்டிருக்கிறோம்.
மரம் பறவைகளுக்கு இடம் அளித்து அவை பாதுகாப்பாக உறங்கிடவும், கொஞ்சிக் குலவிப் பல்கிப் பெருகிடவும் ஆனந்தமாக வாழ்ந்திடவும் உதவி செய்கிறது, (ஒரு மரம் எத்தனை ஆயிரம் பறவைகளுக்கு இடம் அளித்திட முடியும் என்பதைக் கண்டுணர்ந்திட விடியற்காலை அல்லது அஸ்தமன நேரத்தில் திருப்பூரில் உள்ள விவேகானந்த வித்யாலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள்.) பதிலுக்குப் பறவைகளும் அம்மரத்தின் பழங்களை உண்டு கொட்டைகளை பல இடங்களிலும் போட்டு அம்மரம் ஸந்ததி ஸந்ததியாகத் தொடர்ந்து வாழ உதவுகின்றன. பாரதத்தில் வேப்பமரம், அரஸ மரம் மற்றும் ஆல மரம் மிகப் பெரிய எண்ணிக்கையில் உள்ளன. மனிதக் கைகளால் அவை நடப் படவில்லை. இவ்விஷயத்தில் ஸாதனையாளர்கள் பறவைகள்தாம்.

பூமி மரத்தைத் தாங்குகிறது. மரம் வளர்வதற்கேற்ற போஷாக்குகளை வழங்குகிறது. பதிலுக்கு மரம் தன் வேர்கள் மூலம் மண் அரிப்பைத் தடுக்கிறது. தன் இலைகள் மூலம் மண்ணின் வளத்தை அதிகரிக்கிறது. மேகங்களை ஆகர்ஷித்து மழைக்குக் காரணம் ஆகி மண்ணிற்கு உயிர் ஊட்டுகிறது. மரம் கொடியைத் தாங்குகிறது.
நாள் முழுதும் மண்ணில் மேலும் கீழும் ஓடும் மண்புழு மண்ணில் த்வாரங்கள் ஏற்படுத்தி ஆக்ஸிஜென் அளவை அதிகரிக்கிறது. மலர்களில் அமர்ந்து தேன் உறிஞ்ஜிடும் தேனீ பரோபகாரச் செயலாக தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணமாகிறது. கண்ணிற்குத் தெரியாத பந்தம் மூலம், கோள்கள் ஒன்றை ஒன்றுத் தாங்கி உள்ளன. மனிதன் இதைக் கண்டறிந்து அதற்கு புவி ஈர்ப்பு ஆற்றல் என்றொரு பெயரைக் கொடுத்தான்.

மரம் ஹிதம் தரும் தன் நிழலையோ ருசியான தன் பழங்களையோ அனுபவிப்பதைக் கண்டிருக்கிறோமா? மேகம் அம்ருதத்திற்கு ஒப்பான நீரைத் தனக்காக கொஞ்ஜம் வைத்துக் கொள்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறோமா? தன் அழகுத் தோகையை விரித்தாடும் மயில் 'selfie'யில் அதைப் படம் பிடித்து, பார்த்து ரஸிக்கிறதா? குயில் ஸ்வய ஊக்கத்திற்காகவும் ஸ்வய பாராட்டுக்காகவும் கூவுகிறதா? சந்த்ரன் ஊரார் போற்றும் தன் அழகை, கண்ணாடியிலோ கடல் நீரிலோ கண்டு மகிழ்கிறதா? ஸூர்யன் நமக்காக ஒளிர்கிறது. நதிகள் நமக்காக ஓடுகின்றன. காற்று நமக்காக வீசுகிறது. மரங்களும் செடிகளும் புஷ்பங்களையும் பழங்களையும் படைப்பதும் நமக்காக. ( நமக்காக என்னும் போது பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்காக என்று அர்தம். வெறும் மநுஷ்யனுக்காக அல்ல. வெறும் பணம், அறிவு அல்லது ஆற்றல் படைத்த விஶேஷ மநுஷ்யனுக்காக அல்ல.) இயற்கையில் இத்தகைய எந்தச் செயலின் பின்னணியிலும் சிந்தனை எதுவும் கிடையாது. தான் செய்திடும் நன்மையைப் பற்றிய ஸாத்வீக அஹங்காரம் கிடையாது. பெருமிதம் அல்லது ஆணவம் கிடையாது. 'நான் பிறருக்கு உதவியாக இருக்கிறேன்' என்ற ஸூக்ஷ்ம சிந்தனை கூட கிடையாது. அனைத்தும் பிறரை வாழ வைப்பதற்காகவே, பிறரை வளர்ப்பதற்காகவே, பிறருக்கு ஆனந்தம் அளிப்பதற்காகவே, பிறருக்கு உயர்வு அல்லது மேன்மை அளிப்பதற்காகவே செயல் புரிந்திடும் ஒரே நோக்கத்தில் படைக்கப் பட்டிருக்கின்றன. இது ஸத்யம்.
மநுஷ்யர்களான நாமும் இயற்கையின் படைப்பில் ஒரே பகுதியே. ஆனால், ஒரு வித்யாஸத்துடன். நமக்கு குறிப்பு உணர்த்த வேண்டி உள்ளது. நமக்கு பயிற்சி தேவைப்படுகிறது. பிறருக்காக வாழ்ந்திட, பிறருக்காக கர்மங்கள் செய்திட, நமக்கு வழிகாட்டுதலும் ப்ரேரணையும் தேவைப் படுகின்றன. மற்ற உயிர் இனங்களுக்கு இது இயற்கை. ஆனால் மநுஷ்யர்களான நாம் நம் உண்மையான இயல்பை, நம் உண்மையான 'ஸ்வ' தன்மையை உணர வேண்டி இருக்கிறது. ஒரு நிகழ்வு, ஒரு நபர், ஒரு உரையாடல், ஒரு க்ஷண நேர ஆழ்ந்த சிந்தனை, என்று எதுவுமே இந்த உணருதலுக்குத் துணை புரிந்திடும்.
நாம் ஒருவருக்கொருவர், படைப்பு முழுவதுடனும் பிணைக்கப் பட்டிருக்கிறோம். 'யாரை நம்பி நான் பொறந்தேன்?'; 'எனக்கு எவனுடைய தயவும் வேண்டாம்'; 'நான் என்னைப் பார்த்துக் கொள்கிறேன்'; 'என்னைத் தனியாக வாழ விடுங்கள்'; என்பவை எல்லாம் மேலோட்டமான வார்தைகள். அறியாமையில் பேசப்படும் வார்த்தைகள் இவை. இயற்கையின் உண்மையான தன்மையை அறிந்து விட்டால் அர்தமற்ற வார்தைகள் இவை. ஸ்வயநலம் அறியாமையிலும் உண்மை ஸ்வரூபத்தை உணராததாலும் மட்டுமே தழைக்கிறது. நாம் ஏற்கெனவே பரஸ்பரம் பந்தப் பட்டிருக்கிறோம். 'பரஸ்பரம் பாவயந்தஹ' .... அழகான வார்தைகள்.
Comments
Post a Comment