ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 17
यद्यदाचरति श्रेष्टः तत्तदेवेतरो जनः ... (अध्याय ३ - श्लोक २१)
யத்யதாசரதி ஸ்ரேஷ்டஹ தத்ததேவேதரோ ஜனஹ ... (அத்யாயம் 3 - ஶ்லோகம் 21)
Yadyadaacharathi Sreshtaha Tattad Eva Itaraha Janaha ... (Chapter 3 - Shlokam 21).
அர்தம் : பெரியோர், மேன்மையானோர், ஆன்றோர் எவ்வாறு நடந்து கொள்கிறாரோ, இதர ஜனம் அவரைப் பின்பற்றி அவ்வாறே நடந்து கொள்வர்.
பெரியோர்களின் ஒழுக்கம் எவ்வாறு இருக்கிறதோ, அவர்கள் எத்தகைய உதாஹரணங்களை ஏற்படுத்துகின்றனரோ, அவர்கள் எத்தகைய ஆதர்ஶங்களை நிறுவுகிறார்களோ, ... எந்த ஒரு ஸமுதாயத்திலும் இவை மஹத்வபூர்ணமானவை. ஸமுதாயம் பின் தொடர்கிறது. ஸமுதாயம் அநுவர்தனம் மாத்ரமே செய்கிறது. ஆன்றோர் நிறுவிய ஆதர்ஶங்களையே ஸமுதாயம் தன் ஆதர்ஶமாக ஏற்கிறது.
நம் மனஸில் ஒரு கேள்வி எழுவது இயற்கை. யார் ஶ்ரேஷ்டன் ? பெரியோர் என்பவர் யார்? இக்கேள்விக்கு ஸ்பஷ்டமானதொரு விளக்கம் கிடையாது. ஶ்ரேயஹ அல்லது ஶ்ரேயஸ் என்றால் நல்லவை, ஸரியானவை, உயர்த்துபவை, தர்மத்திற்கு உட்பட்டவை என்றெல்லாம் பொருள். என்னை உயர்த்திக் கொள்ள உதவிடும் எதுவும் எனக்கு ஷ்ரேயஸ் ஆகும். எனில், எவருடைய நடத்தை ஶ்ரேயஸ் விளைவிக்கிறதோ, ஸரியாக, நலன் விளைவிப்பதாக, தர்மத்திற்கு உட்பட்டதாக இருக்கிறதோ, அவரே ஶ்ரேஷ்டன் அல்லது ஆன்றோர் அல்லது பெரியோர். ஶாஸ்த்ரங்களின் கூற்றுப்படி வேதமே ப்ரமாணம். ஆனால் வேதம் புரிந்திடாத போது, ஆன்றோரின் ஆசாரமே, நடத்தையே ப்ரமாணம் ஆகும்.
ஶ்ரேஷ்ட புருஷனைத் தேடுவதும் அவரைப் பின் பற்றுவதும் மநுஷ்யனின் இயல்பு. குழந்தை தாய் தந்தையரைப் பின்பற்றுகிறது. வித்யாலயத்தில் சேர்ந்த பிறகு ஆசிரியனே குழந்தைக்கு ஆதர்ஶ புருஷன். வயஸில் வளர வளர, அவனுக்கு விளையாட்டிலோ ஸாஹஸ முயற்சியிலோ ஸாதனை படைத்தவனே ஆதர்ஶமாக மாறுகிறான்.
ஆதர்ஶம் யார்? ஒரு காலத்தில் பிராஹ்மணன் ஸமுதாயத்தால் ஆதர்ஶமாகக் கருதப் பட்டான். பேராற்றல் மிகுந்த க்ஷத்ரிய அரசன் ஆதர்ஶமாகக் கருதப் பட்டான். ஸாது-ஸந்தர்கள் ஆதர்ஶமாகக் கருதப் பட்டனர். ஸ்வதந்த்ரத்திற்கு முற்பட்ட காலத்தில் தேசீய அரசியல் தலைவர்கள் ஸமுதாயத்தின் பார்வையில் ஆதர்ஶமாயினர். இன்று பெரும்பான்மை மக்களுக்கு ஸினிமா நடிக நர்த்தகிகள் ஆதர்ஶமாகி விட்டனர். மக்களைக் கவர்ந்திழுத்து அவர்களால் பின்பற்றப் படும் மையங்கள் ஆகி விட்டனர் ஸினிமா நடிக நடிகையர். நம்மில் பெரும்பாலோர் இத்தகைய குழந்தைத் தனத்தில் வாழ்க்கை முழுவதையும் கழித்து விடுகின்றனர். மிகச் சிலரே தன்னை அறிந்திட, வாழ்க்கையைப் புரிந்து கொண்டிட ஆர்வம் கொள்கின்றனர். அதற்கேற்ற உதாஹரணங்களைத் தேடுகின்றனர்.
ஶ்ரேஷ்ட புருஷனைத் தேடுவதும் அவரைப் பின் பற்றுவதும் மநுஷ்யனின் இயல்பு. குழந்தை தாய் தந்தையரைப் பின்பற்றுகிறது. வித்யாலயத்தில் சேர்ந்த பிறகு ஆசிரியனே குழந்தைக்கு ஆதர்ஶ புருஷன். வயஸில் வளர வளர, அவனுக்கு விளையாட்டிலோ ஸாஹஸ முயற்சியிலோ ஸாதனை படைத்தவனே ஆதர்ஶமாக மாறுகிறான்.
ஆதர்ஶம் யார்? ஒரு காலத்தில் பிராஹ்மணன் ஸமுதாயத்தால் ஆதர்ஶமாகக் கருதப் பட்டான். பேராற்றல் மிகுந்த க்ஷத்ரிய அரசன் ஆதர்ஶமாகக் கருதப் பட்டான். ஸாது-ஸந்தர்கள் ஆதர்ஶமாகக் கருதப் பட்டனர். ஸ்வதந்த்ரத்திற்கு முற்பட்ட காலத்தில் தேசீய அரசியல் தலைவர்கள் ஸமுதாயத்தின் பார்வையில் ஆதர்ஶமாயினர். இன்று பெரும்பான்மை மக்களுக்கு ஸினிமா நடிக நர்த்தகிகள் ஆதர்ஶமாகி விட்டனர். மக்களைக் கவர்ந்திழுத்து அவர்களால் பின்பற்றப் படும் மையங்கள் ஆகி விட்டனர் ஸினிமா நடிக நடிகையர். நம்மில் பெரும்பாலோர் இத்தகைய குழந்தைத் தனத்தில் வாழ்க்கை முழுவதையும் கழித்து விடுகின்றனர். மிகச் சிலரே தன்னை அறிந்திட, வாழ்க்கையைப் புரிந்து கொண்டிட ஆர்வம் கொள்கின்றனர். அதற்கேற்ற உதாஹரணங்களைத் தேடுகின்றனர்.
மநுஷ்யனுக்கு மற்றவரை நோக்கிடும் அவசியம் என்ன? மநுஷ்யன் தன்னை முழுமை அற்றவனாகக் காண்கிறான். பூரணத்வம் அல்லது முழுமையை எய்திட விரும்புகிறான். மநுஷ்யன் தன்னைத்தானே ஞானமற்றவனாக, அறியாதவனாக உணர்கிறான். ஞானத்தைப் பெற்றிடும் தாஹம் அவனுள் இயல்பாக எழுந்திடும் ஒன்று. பலரில் இவ்விருப்பம் வெளிப்படாமல் ஸூக்ஷ்மமாக, உள்ளத்து ஆழத்தில் புதைந்து இருந்திடும். ஆனால், அனைவர் உள்ளும் இவ்விருப்பம் உண்டு. பிறரை நோக்கிட அவனைத் தூண்டுவது இந்த விருப்பமே. பிறரை உரைத்துப் பார்த்திட அவனை உந்துவதும் அவனுள் இருக்கும் இவ்விருப்பமே. பின்பற்றத் தக்க ஆதர்ஶத்தை அவன் தேர்ந்தெடுப்பதும் இவ்விருப்பத்தின் காரணமாகவே. ஒருவன் எவரை பூர்ணமானவாக, அறிந்தவனாகக் கருதுகிறானோ அவரே அவனுக்குப் பின்பற்றத் தக்க ஆதர்ஶமாகிறார். எனவே ஆதர்ஶ புருஷன் என்பதற்கு எண்ணிக்கை-வரம்பு கிடையாது. எண்ணற்றோர், நம்மில் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்கு ஆதர்ஶ புருஷனாக முடியும். பிரேரணை அளித்திடும் ஆற்றல் கொண்டவராக முடியும்.
ஆன்மீகத்தின் பார்வையில் இதை இவ்வாறு விளக்கலாம். பரமாத்மன் ஸத்-சித்-ஆனந்த ஸ்வரூபன். அவன் முழுமையானவன். அவன் ஸத், அதாவது அவனே இருக்கிறான், என்றும் எங்கும் இருப்பவன் அவன். அவன் ஞான மயமானவன். அவன் ஸர்வஞன், எல்லாம் அறிந்தவன். அவன் ஆனந்த மயமானவன். நித்ய ஆனந்தம், எல்லையற்ற ஆனந்தம். நம்முள் நிலைத்திருக்கும் ஆத்மன் இந்த பரமாத்மனின் ஒரு சிறு அம்ஶமே. சிறு துளியே. பரமாத்மனுடன் ஒன்றுவதே ஆத்மனின் இயற்கையான நாட்டம். ஒரு ஆதர்ஷ புருஷனைத் தேடி அவனைப் பின்பற்றிடும் முயற்சிக்குப் பின்னணியில் இருப்பது ஆத்மாவின் இந்த ஸூக்ஷ்ம நாட்டமே. எனது முயற்சி பிறர் கண்களில் திசை தவறியதாகப் படலாம். நான் தேர்ந்தெடுத்துள்ள ஆதர்ஶ புருஷன் பிறருக்கு அற்பமாகத் தோன்றலாம். ஆனால் என் முயற்சியின் நோக்கம் என் ஸ்வய முன்னேற்றமே. ஞானத்தைப் பெற்றிடும் என் தாஹமே. பூர்ணத்தை அடைந்திடும் என் விருப்பமே. என் பார்வை தெளிவடைந்திடும் போது {லக்ஷ்ய தெளிவு} என்னுள் பக்வம் வளர்ந்திடும் போது (ஸ்வய அநுபவங்களை அலசி அவற்றில் இருந்து கற்றுக் கொண்டிடும் பக்வம்) என் முயற்சிகளின் திஶையும் ஸரியானதாக மாறி விடும். அன் ஆதர்ஶமும் அற்பத்தில் இருந்து மஹத்வமாக மாறி விடும். இதைப் பற்றிக் கவலைப் படவேண்டிய தேவை பிறருக்கு இல்லை.
நம்மில் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரால் ஆதர்ஶமாகப் பார்க்கப் படுகிறோம். வழிகாட்டுதல் நாடும் யாரோ ஒருவரால் நம் ஒவ்வொருவரின் நடத்தையும் உரஸிப் பார்க்கப் படுகிறது. நம்மில் ஒவ்வொருவரும் எவரோ ஒருவரால் அவருக்கு ப்ரேரணை அளிக்கவல்ல ஆசானாக, அவரால் பின்பற்றவல்ல உதாஹரணமாகக் கருதப் படுகிறோம். எனவே, நம் நடத்தை, வெளிப்படையான நடத்தை மற்றும் ஸுப்தமான ஒழுக்கம் மிக மஹத்வம் வாய்ந்ததாக ஆகிறது. நம் சிந்தனை, சொல் மற்றும் செயல் முக்யத்வம் வாய்ந்தவை ஆகி விடுகின்றன.
இறுதியில் ஒரு எச்சரிக்கை. நம் நடத்தை உயர வேண்டும். நம் சிந்தனை, சொல் மற்றும் செயல் சீராக வேண்டும். யாரோ ஒருவர் நம்மை கவனிக்கிறார் என்பதற்காக அல்ல, யாரும் கவனிக்கவில்லை என்றால் மனஸின் போக்கில் நடந்து கொள்ளலாமா? இது நம் ஸ்வபாவமாகி விட வேண்டும். என் நடத்தை என் அடையாளம் ஆகும். என் ஒழுக்கம் என் முத்ரை ஆகும். பிறரின் நோக்குதல், உரைத்துப் பார்த்தல், பாராட்டுதல் இவற்றை ஸார்ந்ததல்ல என் அடையாளம். என்னடைய ஆசாரம் பிறருக்கு ப்ரேரணை அளிப்பதற்காகவோ, பிறருக்கு வழிகாட்டுவதற்காகவோ, பிறரால் பின்பற்றப் படுவதற்காகவோ மாத்ரம் இயற்றப் படும் நடிப்பல்ல. என் ஆசாரம், என் நடத்தை 'நான்' இன் வெளிப்பாடு. என் சிந்தனை, சொல் மற்றும் செயல் என் 'உருவகங்கள்'. நான் மக்கள் ஸமூஹத்தில் இருக்கிறேனா, தனியாக ஏகாந்தத்தில் இருக்கிறேனா, நான் மக்களின் பார்வை க்ஷேத்ரத்தில் இருக்கிறேனா, காணப்பட முடியாத இருளில் இருக்கிறேனா, நான் மக்களுடன் நித்யத் தொடர்பு உள்ள வாழ்க்கை வாழ்கிறேனா, என் வீட்டின் நான்கு சுவர்களுக்கு மத்தியில் தனிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறேனா என்பவை எல்லாம் என் நடத்தைக்குப் பொருட்டல்ல.
மற்றும் ஒரு விஷயமும் நம் நினைவில் இருந்திடல் வேண்டும். "உனக்கு உலகத்தின் ஸர்வ-ஶ்ரேஷ்ட ஆதர்ஶ புருஷன் கிடைத்திருந்தாலும், மிக உத்தமனான ஒருவன் உனக்கு குருவாக வாய்த்திருந்தாலும் உன்னுடைய உயர்வு, உன்னுடைய வளர்ச்சி உன் ஒருவனின் தளராத முயற்சிகளை மட்டுமே ஸார்ந்துள்ளது. முயல வேண்டியது நீ. உழைக்க வேண்டியது நீ மட்டும். உனக்கேற்ற பாதையைத் தேர்வு செய்ய வேண்டியவன் நீ மாத்ரமே. பிறரின் பங்கு, அவர் எவ்வளவு ஶ்ரேஷ்டனாக, உயர்ந்தவராக இருந்தாலும், மிக ஸ்வல்பமானதே .
Comments
Post a Comment