ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 18
न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन ... (अध्याय ३ - श्लोक २२)
ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சன ... (அத்யாயம் 3 - ஶ்லோகம் 22)
Na Me Paarthaasti Kartavyam Trishu Lokeshu Kinchana ...(Chapter 3 - Shloka 22)
அர்தம் : எனக்கென்று மூவுலகங்களிலும் கடமை எதுவும் இல்லை... எனினும்...
நாம் பணத்திற்காக வேலை செய்கிறோம். புகழுக்காக வேலை செய்கிறோம். அனுகூலமான பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் வேலைகளில் இறங்குகிறோம். என்னவர் அல்லது என்னவை என்று நாம் கருதக்கூடிய இடத்திற்காகவோ, அமைப்பிற்காகவோ அல்லது நபருக்காகவோ நாம் வேலைகளை இழுத்து விட்டுக் கொண்டால் அதில் ஆஸ்சர்யம் எதுவும் இல்லை. 'இது என் கடமை' என்று நாம் கருதிடும் செயல்களை நாம் செய்கிறோம். ஆனால், இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் குறிப்பிடும் நிலை வித்யாசமானது. வேலை செய்திடுவோம் ஆயின் கடமை என்று எதுவும் இல்லாத போதும்... வேலை செய்திடுவோம், எவரும் நம்மிடம் எதிர்ப் பார்த்திடாத போதும்... வேலைகளை ஏற்றிடுவோம், எதையும் அடைய வேண்டும் என்ற நிர்பந்தமோ ஆவலோ இல்லாத போதும்...இந்த சொற்றொடரில் ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வதும் இதுதான். "எனக்கு கடமை எதுவும் இல்லை. நான் செய்தே ஆக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லை. என்னிடம் இல்லாதது என்றோ நான் அடைந்தே ஆக வேண்டும் என்றோ எதுவும் இல்லை. மூவுலகங்களிலும் இல்லை. எனினும், நான் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். ஓய்வில்லாத வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன்", என்கிறார். ஸாதாரணமான மநுஷ்யர்களான நமக்கு இது ஸாத்யமா ?
நம்மிடையே உள்ள முதியோர்கள் பலரும், நிரந்தர அரஸு வேலைகளில் இருந்து ஒய்வு பெற்று நல்லதொரு தொகையை ஓய்வூதியமாகப் பெற்று வரும் இவர்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் கூறியது போன்ற நிலையில் உள்ளனர். மக்கள் கல்வியை முடித்து, தத்தம் வேலைகளைத் தேடிக் கொண்டு, திருமணமும் முடித்து வாழ்வில் நிலைப் பெற்று விட்ட நிலையில் இம்முதியோர்கள் கடமைகள் பூர்தி ஆகிவிட்ட நிலையில் உள்ளனர். அடைவதற்கு எதுவும் இல்லை. கடமை என்று எதுவும் இல்லை. இத்தகையோர் தம் குடும்பங்களிலோ, தாம் வஸித்திடும் வீட்டிலோ வளாகத்திலோ, ஸுற்றி வாழும் மக்கள் ஸமுதாயத்திலோ, மநுஷ்யர்கள் மத்தியில் எதுவும் செய்ய விருப்பம் இல்லை என்றால் நம்மை வாழ்க்கை முழுதும் வளமூட்டி, காத்து வரும் இயற்கையிலோ ஏதேனும் பணிகளை ஏற்று செய்திட முடியுமா?
தினந்தினம் வீட்டருகில் உள்ள குன்று ஏறி, அங்கு அமைந்துள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு படிப்பில் உதவி செய்து வரும் ஒரு பெரியவரை நான் அறிவேன். சாலையில் அமர்ந்து தெரு விளக்கில் படிப்பு சொல்லிக் கொடுத்து விட்டு இரவு, நேரம் கழித்து வீடு திரும்புவார் அவர். தம் ஊரிலும் அருகில் உள்ள க்ராமங்களிலும் உள்ள அரசு பள்ளிக்கூடங்களுக்குச் சென்று மாணவர்களுக்கு கதைகள் சொல்லியும், வினாடி வினா நடத்தியும் பள்ளியின் விஶேஷ தினங்களில் நடந்திடும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்திட உதவிகளும் செய்து வரும் ஒரு பெரியவரை நான் அறிவேன். தம் நெருங்கிய, தூர உறவுகளில் கர்ப்பம் தரித்த தாயில்லாத பெண்கள் வீட்டிற்குச் சென்று சில மாஸங்கள் தங்கி, வலியும் மனப்பதட்டமும் நிறைந்த அந்த ஒரு சில மாஸங்களை அவர்கள் அமைதியாக கழித்திட அன்புடன் உதவிடும் ஒரு தாயை நான் அறிவேன். தினந்தினம் ஐந்து கிலோ பிஸ்கிட் எடுத்துச் சென்று தான் வஸித்திடும் ஊரில் பல தெருக்களில் நடந்து வந்து, தெரு நாய்களுக்கு உணவளித்து வரும் வழக்கத்தைப் பல வர்ஷங்களாக பின்பற்றிடும் ஒரு முதியவரை நான் அறிவேன். தான் வசிக்கும் ஸ்வந்த வீட்டைச் சுற்றி அழகான தோட்டத்தை உருவாக்கி, தன் தெருவை ஶுத்தமாகவும் பசுமையாகவும் மாற்றி விட்ட ஒரு பெரியவரை நான் அறிவேன். தான் வஸித்திடும் வளாகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஆலோசனைகள் அளிப்பதற்கும், சிறு சிறு உதவிகள் செய்வதற்கும், இயலாதோருக்கு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் செல்வதற்கும் "இருபத்து நான்கு மணி நேரமும் நான் இருக்கிறேன்" என்ற ஆதரவை வார்த்தைகள் இல்லாமல் மௌனமாக வெளிப்படுத்தி வரும் ஒரு பெரியவரை நான் அறிவேன். (அவரது இந்த தன்மையினால் நான் நேரடியாக பயன் பெற்றிருக்கிறேன்.) இவர்கள் அனைவரும் வயஸு எழுபதைத் தாண்டியவர்கள். உடல் தளர்ந்தும் உள்ளம் உத்ஸாஹமாய் விளங்கிடும் நபர்கள். இவர்களில் எவரும் வாஹனம் ஓட்டும் நிலையில் இல்லாமல் நடந்தே தூரங்களைக் கடக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள். இவர்கள் எவரும் தாம் எடுத்த பணிக்காக ஒரு ட்ரஸ்ட் அல்லது அமைப்பை நடத்தவில்லை. அமைப்பில் ஒரு பதவி என்ற முத்ரை சூக்ஷ்ம அஹங்காரத்தை த்ருப்திப் படுத்துவதோடு, வேலைக்கு உந்துதலும் அளிக்கும் ஆற்றல் கொண்டது. இத்தகைய மனிதர்கள் அபூர்வமாக இருக்கலாம் ஆனால் பெரும் ப்ரேரணை அளிக்க வல்லவர்கள் என்பதில் ஸந்தேஹம் எதுவும் இல்லை .

Comments
Post a Comment