ॐ
கீதையின் சில சொற்றொடர்கள் - 19
अहङ्कार विमूढात्मा कर्ताहं इति मन्यते .... (अध्याय ३ - श्लोक २७)
அஹங்கார விமூடாத்மா கர்தாஹம் இதி மன்யதே ... (அத்யாயம் 3 - ஶ்லோகம் 27)
Ahankaara Vimoodhaatmaa Kartaaham Iti Manyate ... (Chapter 3 - Shloka 27)
அர்தம் : அஹங்காரம் நிறைந்த மூடன், 'செய்பவன் நானே' என்று கருதுகிறான்.
ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். இந்தக் கட்டுரை எனக்காக மட்டும், ஸ்வந்த அனுபவங்களின் ஆதாரத்திலும் ஸ்வந்த ஶ்ரத்தையின் ஆதாரத்தில் எழுதுகிறேன். 'நானே கர்த்தர்' அல்லது 'நானே செய்கிறேன்' அல்லது 'என் வாழ்க்கை என் கையில்' என்று நம்புபவர்கள் தம் நம்பிக்கையைத் தொடரட்டும். இங்கு வெளிப்படும் கருத்துக்களை ஜீர்ணம் செய்வது அவருக்குக் கஷ்டமாக இருக்கலாம்.
என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கையில் 'எல்லாம் நிகழ்ந்தன' என்றுதான் தோன்றுகிறது. சூழ்நிலைகள் உருவாயின. உகந்த நபர்கள் வருகின்றனர். செயல்கள் நடந்தன. நான் அலைகளோடு இழுத்துச் செல்லப் பட்டேன். நாட்கள் செல்லச் செல்ல, வர்ஷங்கள் உருண்டோட ஓட, 'கர்தா' அல்லது செயல் புரிபவன் நான் இல்லை' என்ற ஶ்ரத்தை என்னுள் மேலும் மேலும் ஆழமாகவும் உறுதியாகவும் வேரூன்றியது. கைகளைத் தூக்கி விட்டு நம்மை அடித்துச் செல்ல அலைகளை அனுமதித்து விடல் தான் நம்மிடம் இருக்கும் ஒரே வாய்ப்பு.
நம் எண்ணங்கள் மற்றும் செயல்கள் பல்வேறு விஷயங்களின் தாக்கத்திற்கு உட்பட்டவை. இவை எல்லாம் ப்ரக்ருதியின் கார்யம். மூன்று குணங்கள் ஏற்படுத்தும் விளைவுகள். முக்குணங்களின் கலவையே நம் ஸ்வபாவம். நம் ஸ்வபாவத்தை உருவாக்கிடும் மூன்று குணங்களின் கலவை நம் கடந்த காலத்தில், பல ஜன்மங்களில் நாம் அனுபவித்த அனுபவங்களின் விளைவு. இந்த நம் ஸ்வபாவத்தின் விளைவாக நாம் 'இவ்வாறு தான் சிந்திப்போம்'. 'இவ்வாறுதான் செயல் புரிவோம்'. நம்மைச் சுற்றி உள்ள அனைவருக்கும் இது பொருந்தும். (இவர் ஏன் இவ்வாறு சிந்திக்கிறார் அல்லது செயல் படுகிறார் என்று நீங்கள் உங்கள் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்வது அறியாமை. அவ்வாறு நீங்கள் செய்தால் அது உங்கள் ப்ரஶ்னை . ஆனால், நீங்கள் அவ்வளவுதான் மண்டையை உடைத்துக் கொண்டாலும் அவர் சிந்தனையிலோ செயலிலோ உங்களால் மாற்றம் ஏற்படுத்த முடியாது என்பது உறுதியான உண்மை.)
இந்த உண்மைக்கு எதிராக நம்முள் நடந்திடும் போராட்டம் அல்லது இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத நம் நிலைக்கு, நம்முள் எழும் காமமே, விருப்பங்களே காரணம். செயல்கள், நாம் செய்திடும் செயல்கள் அல்லது நம் மூலம் நடந்திடும் செயல்கள், இரு வகை. விருப்பத்தின் உந்துதலில் செய்யப்படும் செயல்கள் மற்றும் ஸ்வபாவத்தின் விளைவாக நடந்திடும் செயல்கள்.. விருப்பத்தின் உந்துதலில் செய்யப்படும் செயல்கள் 'நான் தான் செய்பவன்' என்ற எண்ணத்தை வளர்த்திடும். செயல்களின் ஃபலன்கள் நமக்கு அநுகூலமாக , நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைந்து விட்டால், இந்த எண்ணம் மேலும் வலிமை பெற்றிடும் . ஃபலன்கள் ப்ரதிகூலமாக, நம் விருப்பத்திற்கு மாறாக அமைந்து விட்டால், இந்த கருத்து ஆட்டம் கண்டு விடும்.
தவறான, முறை கேடான செயல்கள்? அவையும் நாம் செய்பவை இல்லையா? ஆம். அவையும் நம் ஸ்வபாவத்தின் உந்துதலில் நடப்பவையே. மூன்று குணங்களின் கை வரிசையே. அவ்வாறெனில் தவறான செயலைப் புரிந்து விட்டு, 'செய்தவன் நான் இல்லை' என்று விலகி விடலாமா? ஓர் எச்சரிக்கை. ஒவ்வொரு செயலுக்கும் நிஶ்சயம் ஃபலன் உண்டு. தவறான செயலும் ஒரு ஃபலனை விளைவித்திடும். 'செய்பவன் நான் இல்லை, ப்ரக்ருதியே' என்ற ஶ்ரத்தை உண்மையாக இருந்தால் , ஃபலன்களில் இருந்து விலகி விடுவது தான் நாம் செய்யக் கூடியது. அநுகூலமான ஃபலன் விளைந்தால் துள்ளிக் குதிப்பதும் எதிர்மாறான ஃபலன் விளைந்தால் வேதனைப் படுவதும் 'செய்பவன் நான்தான்' என்ற பாவனையைதான் வெளிப்படுத்தும்.
இந்தக் கட்டுரை எழுதப் படுவதும் இதைப் போன்ற வேறு பல அநுபவங்களும் மீண்டும் மீண்டும் இந்த ஶ்ரத்தையை என்னுள் வலுப்படுத்தியுள்ளன. சென்ற ஒரு மாஸத்தில் பல முறை, நான் இந்தச் சொற்றொடர் பற்றி எழுத உட்கார்ந்தேன். ஒவ்வொரு முறையும் கம்ப்யூடரைத் திறந்து ப்ளாக்ஸ்பாட்டின் வெள்ளைத் திரையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். கட்டுரை விளையவில்லை. இன்று ஸம்பந்தம் இல்லாத வேறு வேலையில் இருந்த போது, ப்ளாக்ஸ்பாட் நோக்கி இழுக்கப் பட்டு, சில நிமிஷங்களில் இந்தக் கட்டுரை விளைந்தது .
இந்த ஶ்ரத்தை அறிவு ரீதியான அலசலுக்கான விஷயம் இல்லை. வாக்கு வாதம் மூலம் பிறரை ஒப்புக் கொள்ளச் செய்ய முடியாது. இது நம் தனிப்பட்ட ஶ்ரத்தை மாத்ரமே .

Comments
Post a Comment