ॐ
ஆகஸ்ட் 14 ....
ஒவ்வொரு வர்ஷமும் ஆகஸ்ட் 14 வந்தால்....
நான் பாகிஸ்தானை நினைக்கிறேன். முஸ்லிம்
லீகை நினைக்கிறேன். ஔரங்கஜெப் மற்றும் பிற
முகல் ராஜாக்கள் என் நினைவிற்கு வருகின்றனர். கஷ்மீர், சென்ற வர்ஷங்களில் நிகழ்ந்த குண்டு
வெடிப்புக்கள் மற்றும் கலவரங்கள், பாரத நாடு பிளக்கப்பட்ட ஸமயத்தில் நடந்த கொடூர
வன்செயல்கள் என் நினைவிற்கு வருகின்றன. காந்தி
நினைவிற்கு வருகிறார். மறு புறத்தில் ஸுப்ரஹ்மண்ய
பாரதியும் நினைவிற்கு வருகிறார். அவரது
பாடல் ‘சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் அதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா. என்ற பாடலும் நினைவிற்கு வருகிறது. ஸ்ரீ ஸாவர்கர், அந்தமான் சிறை, அவருடைய பாடல்
ஜயோஸ்துதே, ஜயோஸ்துதே, ஸ்வதந்த்ரதே பகவதி நினைவுப் படலத்தில் வருகின்றன. நம்முடைய ஸ்ரீ ராம கோபாலன் எழுதிய “என்று
காண்போம் எங்கள் ஸிந்துவை என்று உள்ளம் ஏங்குது... தெய்வ நதியில் மூழ்கி எழவே தாபம் நெஞ்ஜில் தோன்றுது”.என்ற பாடல்
நினைவிற்கு வருகிறது.
ஸமீபத்தில் என்
சென்னை – நாக்பூர் ப்ரயாணத்தில் என்னுடைய பெட்டியில் ஒரு முஸ்லிம் குடும்பமும் ப்ரயாணித்தது. தாய் தந்தை, மகள், மகன், மருமகள், பிறந்து சில
நாட்களே ஆன பேரக்குழந்தை. பரஸ்பரம் பேசும் ஆர்வம் இல்லை. அடுத்த நாள் காலையில் நாக்பூர் இரண்டு மணி நேர
தூரத்தில் இருந்த போது, நான் அக்குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பர்தாவில் இருந்த இளம் தாய் பெருமித உணர்வு
கொள்வதை என்னால் உணர முடிந்தது.
எங்களுக்குள் பேச்சு துவங்கியது.
அவள் பெற்றோர் ஆந்த்ர ப்ரதேச கூடூரில் இருக்கின்றனர். புகுந்த வீடு நாக்பூர். அவள் முன் நான் வைத்த ஒரு கேள்வியுடன் எங்கள்
பேச்சு முடிவிற்கு வந்தது. “இக்குழந்தை
உன்னுள் பெருமித உணர்வை ஊட்டுகிறது. இதன்
மேல் நீ வாத்ஸல்ய உணர்வு கொள்கிறாய்.
நெஞ்ஜுடன் அணைத்துக் கொள்கிறாய்.
வளர்ந்து இவன் ஒரு பயங்கரவாதி ஆக மாட்டான் என்பது என்ன நிஸ்சயம்? ஸ்வயமாகவோ அல்லது வலுக்கட்டாயமாகவோ, நம்
மண்ணிலோ அல்லது எல்லைக் கடந்தோ, IS, அல்லது LET அல்லது SIMI அல்லது காயதே ...
போன்ற ஏதோ ஒரு அமைப்பின் முகாமில் கலந்து கொள்ள மாட்டான் என்பது என்ன நிஸ்சயம்? அல்லது குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் ஏந்தி
உங்கள் பகுதிகளில் ஸ்வதந்த்ரமாய் திரியும், மசூதிகளில் ஒளியும் உங்கள் ஆட்களின்
குண்டுகளுக்கு பலி ஆக மாட்டான் என்பது என்ன நிஸ்சயம்?” நான் அவள் முன் வைத்த கேள்வி இதுவே. அதிர்ச்சியுடன் கூடிய மௌனத்தில் ஆழ்ந்தாள் அந்த
இளந்தாய். எங்கள் பெட்டியிலேயே 2௦ இளைஞர்கள்,
15 முதல் 2௦ வயதினர் விஷாகபட்டணத்தில் இருந்து பிகானீர் சென்று
கொண்டிருந்தனர். பத்தாவது அல்லது அதற்கும்
கீழ் வகுப்பு படித்திருக்க முடியும். ஹிந்தியின்
அல்ப அறிமுகம். ஏதோ ஒரு project’ல் வேலை செய்யப் போகும் தொழிலாளர்கள் இல்லை. பெரிய படிப்பு முடித்து MNC யில் அல்லது IT கம்பனியில் பணி
புரியப் போகும் இளைஞர்கள் இல்லை. நாடு
விட்டு நாடு அழைத்துச் செல்லப்படும் கூலித்தொழிலாளர்களும் இல்லை. அப்படிப்பட்டோருக்கு பிகானீர் ஒரு இலாக்கும்
கிடையாது. இவர்கள் அனைவரும் மூளைச் சலவை
செய்யப் பட்டு, எல்லைக் கடந்த பாகிஸ்தான பகுதிக்கு, ஏதோ ஒரு பயங்கரவாத அமைப்பு
நடத்திடும் பயிற்சி முகாமிற்குச் செல்பவர்கள்.
ஏற்கனவே ஸ்வந்த ஊரில் ஓரிரண்டு முகாம்களில் கலந்து கொண்டவர்கள். “இவர்களும் குழந்தைகளாக இருந்தனர் அல்லவா? இவர்கள் தாய்மார்களும் இவர்கள் மீது பெருமிதமும்,
வாத்ஸல்யமும் கொண்டிருப்பர் அல்லவா?
தத்தம் தாயின் நெஞ்ஜணைப்பின் ஆனந்தத்தை அனுபவித்தவர்கள் தானே இவர்களும்?" இளந்தாயை நான் கேட்டேன்.
ஆகஸ்ட் 14, இரவு, 1979 ’ம் வர்ஷம்
என்று நினைக்கிறேன். நான் என் கல்லூரி
மாணவர் விடுதியில் தேசப்பிரிவினைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். ஸுமார் 3௦ மாணவர்கள் முழு கவனத்துடன் கேட்டுக்
கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு மாணவன் என்
காதருகில் வந்து முணுமுணுத்தான். “இப்பொழுது
கடைஸியாக வந்தமர்ந்த மாணவன் ஒரு முஸ்லிம்.”
அவன் இரண்டாம் வர்ஷ மாணவன்.
எங்களில் பெரும்பாலோர் மூன்றாம் அல்லது நான்காம் வர்ஷ மாணவர்கள், அதாவது
அவனுக்கு ஸீனியர்கள். என் நண்பன் கொடுத்த
இந்த எச்சரிக்கை எனக்கு எரிச்சல் மூட்டியது.
என்ன சொல்ல வருகிறான் இவன்? தேசப்பிரிவினை,
அப்பொழுது நடந்த ஸம்பவங்கள், இவை எல்லாம் ஹிந்து – முஸ்லிம் விஷயங்களா? இவை தேசீய விஷயங்கள் அல்லவா?” அல்லது ஹிந்துக்கள் ஹ்ருதயங்களில் ஒரு ஸாதாரண முஸ்லிமைப்
பற்றியும் ஆழப்பதிந்திருக்கும் பயத்தை இவன் வெளிப்படுத்துகிறானா? முஸ்லிம் என்ற வளையத்தில் எனக்குக் கிடைத்த
முதல் அனுபவம் இது.
வேறு சில
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பள்ளிகளுக்குச்
செல்வதும், மாணவர்களுடன் பேசுவதும், சிலருடன் நட்பு வளர்த்துக் கொள்வதும்,
அவர்களது வீடுகளுக்குச் செல்வதும், அவர்களுக்கு பாரதீய, தேசீய சிந்தனையை
அறிமுகப்படுத்துவதும்...இவை என் கார்யத்தில் ப்ரதான அம்சமாக
இருந்திருக்கின்றன. இவை மட்டும்தான்
செய்தேன் என்ற சொன்னாலும் மிகை ஆகாது.
இன்று வரை இப்பணிகளைத் தொடர்கிறேன்.
சென்னையில் பல பள்ளிகளில் தேச பக்தி வகுப்பு என்ற பெயரில் வார வகுப்பு நடத்தி வந்தேன். 18 முஸ்லிம் மாணவர்கள் தத்தம் பள்ளிகளில் இவ்வகுப்புகள் மூலம் என் தொடர்பில் இருந்தனர். அவ்வப்போது அவர்கள் வீடுகளுக்கும் சென்று வருவேன். ஒரு தீபாவளிக்கு முன்தினம் ஒரு முஸ்லிம் குடும்பத்தைக் காணச் சென்றேன். “இனிப்பு” வேண்டினேன். “எதற்கு?” என்று வினவினாள் அத்தாய். “நாளை தீபாவளி அல்லவா?” “தீபாவளியா? எங்களுக்கு இல்லை?” “எங்களுக்கு என்றால்? நீங்கள் யார்?” “நாங்கள் முஸ்லிம்கள் அல்லவா?” அதற்குப் பிறகு ஒரு நல்ல விவாதம் அங்கு நடந்தது. ஒரு டஜன் நபர்கள் இருந்த அந்தக் குடும்பம் முழுவதும் கலந்து கொண்டது. முடிவில் எனக்கு இனிப்பும் கிடைத்தது. “நீங்கள் உங்களையே தனிமைப் படுத்திக் கொள்கிறீர்கள். ஜன்னல் வழியாகத் தெருவை எட்டிப் பாருங்கள். தீபங்கள் ஓவ்வொரு வீட்டுக் கூரை மற்றும் வெளிச்சுவற்றை அலங்கரிக்கின்றன பாருங்கள். உங்கள் வீட்டைத் தவிர. அத்தனைக் குழந்தைகளும் தெருவில் உள்ளனர், முகத்தில் புன்னகையுடன், உள்ளத்தில் ஆனந்தம் மற்றும் உத்ஸாஹத்துடன், உங்கள் வீட்டுக் குழந்தைகள் மட்டும் இங்கு உள்ளே இருக்கின்றனர். உங்கள் தீபம்-இல்லாத, பட்டாஸு இல்லாத வீடு உங்களைக் காட்டிக் கொடுக்கிறது. தனிமைப் படுத்துகிறது. எங்களுடன் சேர்ந்து இருங்கள். உங்கள் அண்டை அயலாருடன் சேர்ந்து இருங்கள். தீபாவளியைக் கொண்டாடுங்கள்.” என்றேன். “நீங்கள் எங்களுடன் ரம்ஜானில் கலந்து கொள்வீர்களா?” ஒரு பெரியவர் கேட்டார். “நான் உங்களை எங்கள் ஏகாதசி வ்ரதத்திலோ வரலக்ஷ்மி வ்ரதத்திலோ ஸத்ய நாராயண பூஜையிலோ கலந்து கொள்ளச் சொல்லவில்லையே. அவை எங்கள் மதச் சடங்குகள். ஆனால், தீபாவளி அவ்வாறல்ல. அது ஒரு ஸமுதாயப் பண்டிகை. ஏதோ ஒரு கதையை, தீபாவளிக் கொண்டாட்டத்திற்குக் காரணமாகக் கூறிக் கொள்ளுங்கள். ஆனால், எங்களுடன் சேர்ந்து இருங்கள்.” “இதில் தான் உங்கள் நலன் உள்ளது. நம் தேசத்தின் நலனும் உள்ளது.” என்றேன். அவர்களுக்கு ஸம்மதம், atleast, குறுகிய காலத்திற்கு, ஸம்மதம் ஏற்பட்டால் போல் தோன்றியது. எனக்கு அவ்வீட்டில் இனிப்பு, தீபாவளி இனிப்பு கிடைத்தது.

ஸிகந்தர் என்று
ஒரு சிறுவன். அன்பும் பாசமும்
கொண்டவன். அரஸுப் பள்ளியில்
படிப்பவன். எனக்கு மிக நெருக்கமாக
இருந்தான். எனது யோக வகுப்பிற்கு வந்து, மாம்பலத்தில்
என் அறைக்கு அவ்வப்போது வருபவனாக மாறி, RSS’ ன் ஸாயம் ஷாகாவில் வரும் ஸ்வயம்சேவகனாய்
மாறி, ஒரு ஷாகா நடத்தும் முக்யஷிக்ஷக்காக மாறிய அவனது வளர்ச்சிப் ப்ரயாணம் ஒரு
இனிய அனுபவம். அவன் 12 ‘ம் வகுப்பில் இருந்த போது அவன் வீட்டிற்குச்
சென்றிருந்தேன். பட்டுக்கோட்டையில்
இருந்து அவனது ஒரு சித்தப்பா வந்திருந்தார்.
நான் வருவதை, அளவளாவுவதை, தேநீர் பருகுவதை, அமைதியாகப் பார்த்துக்
கொண்டிருந்தார். அடுத்த நாள் காலையில்
அவன் வீட்டிற்குச் சென்ற போது வீடு பூட்டி இருந்தது. ஒரே ராத்ரியில் அக்குடும்பம் எங்கோ இடம்
பெயர்ந்து விட்டிருந்தது. அந்த
சித்தப்பாதான் இதற்குக் காரணம் என்பது தெள்ளத் தெளிவு. குழந்தைகளின் படிப்பு, குறிப்பாக ஸிகந்தரின் 12 ‘ம் வகுப்பு தடைப் படுவதைப் பற்றியும் கவலை இல்லை. ஆனால், ஒரே ஒருவன் கூட, ஒரே ஒரு குடும்பம் கூட
ஜமாத்தின் பிடியில் இருந்து வெளியேறி விட வாய்ப்பு அளித்திடக் கூடாது என்பதில்
தீவ்ரம்.
முஸ்லிம் ஸமுதாயம்
சிந்தனைச் செய்ய வேண்டும். ஆழ்ந்த ஸ்வய
பரிசோதனை செய்ய வேண்டும். ஸமூஹ விரோதச்
செயல்களை, பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று, மத
நிறுவனங்களையும், மத ஸ்தலங்களையும் பயங்கரவாதிகள் உபயோகப் படுத்துவதைத்
தடுத்திடவும் என்ன செய்யலாம் என்று ஆராய வேண்டும்.
ராவணன்
பயங்கரவாதத்தில் ஈடுபட்டான்.
அழிந்தான். ஆனால், தான் மட்டும்
தனியாக அழியவில்லை. ஆயிரக்கணக்கான,
லக்ஷக்கணக்கான, லங்கை வாஸிகம் பலி ஆயினர்.
அவர்களின் குற்றம்? ராவணனின்
பயங்கரவாதத்தைக் கண்டும் மௌனமாக இருந்தனர்.
ஒரு வகையில் அவனது பயங்கரவாதத்திற்குத் துணைப் போயினர். பயங்கரவாதச் செயலில் ஈடுபட அவனுக்கு ஷக்தி அளித்தனர்,
தம் மௌனம் மூலம்.
ஹிந்துக்களான
நாம் இவ்விஷயத்தில் என்ன செய்ய முடியும்? குறைந்த
பக்ஷம், ஒரு முஸ்லிமுடனாவது, ஒரு முஸ்லிம் குடும்பத்துடனாவது தனிப்பட்ட உறவு
வரத்துக் கொள்வோம். பொது விஷயங்கள்
பேசுவோம். மதம், உலகம் முழுவதும்
நடந்திடும் ஸம்பவங்கள், முஸ்லிம் பயங்கரவாதச் செயல்கள், மற்ற நாடுகளில் முஸ்லிம் ஸமுதாயம்
ஏற்படுத்திடும் ப்ரச்னைகள், பற்றிய நம் கருத்துக்களைப் பேசுவோம். மனம் திறந்து பேசுவோம். பயம், வெறுப்பு இல்லாமல் பேசுவோம்.
மணி 12' ஆனது. 14 ஆகஸ்ட் 1947, அன்று பாரதம்
துண்டாடப்பட்ட அதே நேரம்...
அகண்ட பாரதத்தை
நினைவில் வைப்போம்....
வந்தே மாதரம்.
Comments
Post a Comment