பண்டித் தீனதயாள உபாத்யாய பல தலைமுறைகளில் ஒரு முறை தோன்றிடும் அபூர்வ மனிதர்களில் ஒருவர். உயர்ந்த மனிதர்களின் படம் வைத்துக் கொள்வதும், சிலை வைப்பதும், மாலை அணிவித்து பிறந்த நாள் கொண்டாடுவதும், தவறில்லை. ஆனால், நம் வாழ்க்கைக்கு நேரடியாகவோ நம்மைச் சுற்றி உள்ள ஸமுதாயத்திற்கோ பயன் படும் வகையில் அவர் வாழ்க்கையில் இருந்து ஏதேனும் தேடிப் பெற்றிடும் முயற்சியே சிறப்பு. வரும் செப்டெம்பர் 25 அன்று அன்னாருடைய நூற்றாண்டு வைபவம் வருகிறது. அதை முன்னிட்டு "ஏகாத்ம மானவ தர்ஷனம்" பற்றி சிந்தனை செய்திட "சிந்தனையாளர் ஸபா" {Parliament of Thinkers } ஒரே ஒரு நாள் நடத்தலாம் என்று ஓர் யோஜனை. அதில் ஏற்படும் கருத்தை ஒட்டி வர்ஷம் முழுவதும் ஒரு திட்டம் செயல் படுத்த முயலலாம். செப் 25 (வெள்ளி) , செப் 26 (சனி) அல்லது செப் 27 (ஞாயிறு ) [ பிற வசதிகளைப் பொருத்து ] கலந்து கொள்ள நினைப்பவர்கள் தங்கள் கருத்தினைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். 18 செப் க்கு முன் சிறிய வடிவத்தில் அவரைப் பற்றியோ, ஏகாத்ம மானவ தர்ஷனத்தைப் பற்றியோ , இன்று நிலவும் அரஸியல், ஸமூஹ , பொருளாதார, உலகச் சூழ்நிலையில் இக்கருத்தின் relevance, போன்ற ஒரு விஷயத்தில் தங்கள் கருத்தை எழுதி அனுப்பினால் அந்த ஒரு நாள் நிகழ்ச்சியைத் திட்டமிட வசதியாக இருந்திடும்.
முன் கூட்டியே தெரிவித்த எவரும் கலந்து கொள்ளலாம். இவர்கள் எல்லாம் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். ஸர்வ ஸ்ரீ KN கோவிந்தாசார்ய, கேஷவ விநாயகம், விஜய பாரதம் சடகோபன், சென்னை C கோபால், கும்பகோணம் கண்ணன், விவேகானந்த கேந்த்ரம் க்ருஷ்ணமூர்தி, சென்னை (ABVP) ஆதித்யன், மதுரை Adv,. இருளப்பன், ஈரோட் ஆடிடர் கார்திகேயன், வடபழனி நித்யானந்தம், திருப்பூர் கதிரவன், கோயம்பத்தூர் தீபக் நம்பியார், திருப்பூர் ஜனா, பாண்டி லக்ஷ்மிநாராயணன், த ர ஸ ஸ்ரீனிவாசன் ரவிசந்த்ரன் , அர்விந்த நீலகண்டன், ப ஸு மணிகண்டன், பங்களூரு ஜடாயூ, பஸு ராகவன் , பொள்ளாச்சி ஸுந்தர் , நுங்கம்பாக்கம் ராமகிருஷ்ணன் மஹாதேவன், திருப்பூர் செந்தில்வேல், சென்னை கௌதமன், திருவள்ளூர் ( முன்னாள் மாம்பலம்) கார்திகேயன், கலாரஸிகன் கரிகாலன், மேட்டுப்பாளையம் சரவணன், மாம்பலம் சரவண குமார், மற்ற பல பெயர்கள் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. மன்னிக்கவும். எனக்கு தெரிந்த பெயர்களில் நினைவிற்கு வந்த சிலர் பெயர் எழுதி உள்ளேன். நீங்கள் வேறு பெயர்களை suggest செய்யலாம். FB யில் நன்றாக எழுதுகிறவர்கள் இருக்கின்றனர். அவர்களைத் தேடி நான் அழைப்பு அனுப்புகிறேன். நீங்களும் suggest செய்யங்கள்.
ஸங்கத்திற்கு வெளியே தீனதயாள்ஜியும் தெரியாது, அவரது ஏகாத்ம மானவ தர்ஷனமும் தெரியாது (தமிழ் நாட்டில் ) ஆனால், இதே கருத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் இருக்கலாம். தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கலாம்.
உங்கள் யோஜனைகளுடன் நேரடியாக எனக்கு எழுதலாம். (மொபைல் : 8903470104. தற்போது பழுதாகி உள்ளது. வீட்டு போன் : 431 2230104, ஈ மெயில் : akhila1961@gmail.com) FB யில் இந்த போஸ்ட் கம்மென்ட் மூலம் யோஜனைகளை தெரிவிக்கலாம்.
உங்கள் யோஜனைகளை எதிர்ப்பார்க்கிறேன். பங்காற்றுதலையும் ...
உங்கள் யோஜனைகளை எதிர்ப்பார்க்கிறேன். பங்காற்றுதலையும் ...
Comments
Post a Comment