ॐ
கீதையின் சில சொற்றொடர்கள் - 20
कृत्स्नविन्न विचालयेत् | (अध्याय ३ - श्लोक २९)
க்ருத்ஸ்னவின்ன விசாலயேத் (அத்யாயம் 3 - ஶ்லோகம் 29)
Krutsnavinna Vichaalayet (Chapter 3 - Shloka 29).
அர்தம் : படித்தவர், அறிந்தவர் அறியாதவரின் மனஸில் குழப்பத்தை ஏற்படுத்தி அவரின் ஶ்ரத்தையை, உத்ஸாஹத்தைக் குலைக்கக் கூடாது.
இது தான் நம்மில் பெரும்பாலோர் செய்திடும், அதிகமாகச் செய்திடும் கார்யம், அனைத்து இடங்களிலும் அனைத்துத் துறைகளிலும்.. நாம் அனைவரும், கல்வியில் நம் முன்னோர்களை விட உயர்ந்திருந்தாலும், எவ்விதச் சிந்தனையும் இல்லாமல் நம்மை விட எளியோரைத் தாழ்த்துவது, கண்டிப்பது, ஏளனம் செய்வது, குழப்புவது, உத்ஸாஹத்தையும் ஆர்வத்தையும் தகர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறோம் .
'அ' என்ற ஒருவர் 'ஆ' என்பவர் மீது மதிப்பும், மர்யாதையும் வைத்திருக்கிறார். தன் மனஸில் உள்ள மதிப்பை, மர்யாதையை அவர் இ என்பவரிடம் வெளிப்படுத்துகிறார். 'ஆ' வை 'இ' அறிந்திருக்கிறாரா என்பதெல்லாம் ஒரு விஷயம் இல்லை. தன் மனஸில் 'ஆ' வைப் பற்றி வைத்திருக்கும் மதிப்பிற்கும் மர்யாதைக்கும் அவர் தகுதியானவர் இல்லை 'அ' விற்குப் புரிய வைத்திடும் முயற்சியில் இ இறங்குவார் என்பதற்கே ஸாத்யக்கூறு அதிகம். என் கல்லூரி நாட்களில், அமைப்பில் இணைந்த புதுஸில், ஸ்ரீ அடல் பிஹாரி வாஜபேயீ பற்றி என் மனஸில் இருந்த மதிப்பு, மர்யாதையை வெளிப்படுத்தினேன். உடனே, அமைப்பில் உள்ள ஒரு மூத்த அதிகாரி, "ராத்ரீ 08.30 மணிக்குப் பிறகு அவரைஸ் ஸந்திக்க முடியாது என்பது உனக்குத் தெரியுமா?' என்று என் காதுகளில் முணுமுணுத்தார். அவரது வார்தைகளின் முழு அர்தம் எனக்கு அந்த வயஸில் விளங்கவில்லை. என்றாலும் அவ்வார்தைகள் என் மனஸில் அழியா ஸந்தேஹச் சுவட்டினை விட்டுச் சென்றது என்பது உண்மை. அவர் ஸ்ரீ அடல்ஜியை நன்கு அறிந்திருக்கலாம். அவர் கூறியது உண்மையாகவும் இருந்திருக்கலாம். எனினும், என் மனஸில் ஸ்ரீ அடல்ஜி யைப் பற்றி இருந்த மதிப்பும் மர்யாதையும் மங்கவில்லை. மாறாக, இந்த நபர் மீது இருந்த மதிப்பு என்றென்றைக்கும் சிதைந்து விட்டது. (ஸ்ரீ அடல்ஜியின் குடிப்பழக்கம் பற்றி அவர் பேசி இருக்கக் கூடும். அதற்கும் நான் வைத்திருந்த மதிப்பிற்கான காரணத்திற்கும் ஸம்பந்தம் இல்லை என்பது என் கருத்து. )
நாம் குடும்பங்களைக் காணச் செல்கிறோம். அங்கு வாஸல் அறையில் அக்குடும்பத்தினர் இணைந்திருக்கும் அமைப்பு அல்லது நபர்கள் பற்றிய படங்கள் மாட்டப் பட்டிருக்கும். உடனுக்குடன் அந்த அமைப்பைப் பற்றி அல்லது அந்த நபரைப் பற்றிய குறை, கண்டனம், விமர்ஸனம் என்று எதையாவது சொல்லி விடும் 'அரிப்பு' நம்முள் ஏற்பட்டு விடுகிறது. நாம் சொல்லியும் விடுகிறோம். அவ்வீட்டு யஜமான் 'இங்கிதம்' கருதி, விருந்தினரைப் பற்றிய மதிப்பை கருத்தில் கொண்டு, பதில் பேசாமல் மௌனமாக இருந்து விடலாம். ஆனால், விருந்தினரின் இவ்வார்தைகள் அக்குடும்பத்தினர் உள்ளங்களில் ஒரு ஸந்தேஹ விதையை, ஒரு குழப்ப விதையை விதைத்து விடும் .. அவர்கள் மனஸில் வந்திருக்கும் விருந்தினர் பற்றிய மரியாதை உயர்வாக இருந்தால்.!!! அல்லது சூடான, கசப்பான வாக்கு வாதம் ஏற்பட்டு, உறவு துண்டித்து விடும் அளவிற்குப் போகும்... அவர் சார்ந்திருக்கும் நபர் அல்லது அமைப்பின் மீது அதிக மதிப்பு இருந்தால்.!!!

அமைப்பு அல்லது நபர்கள் மட்டும் இல்லை, ஒரு பழக்க-வழக்கம், ஒரு ஸம்ப்ரதாயம், ஒரு நம்பிக்கை, ஒரு தின் பண்டம், என்று எந்த விஷயத்திலும் இந்த தன்மையை நாம் காண்கிறோம். இதற்கு அடிப்படையான காரணம் என்ன? 'ஆணவம்' அல்லது அஹங்காரம் தான் ப்ரதானக் காரணம் எனலாம். என் மருமகன் ஸ்ரீ அக்ஷய ஜ்யோதிராம் ஐயர் வட பாரதத்தில் பிறந்து, வளர்ந்து படித்தவன். அவனுக்கு ஸுமார் எட்டு பத்து வயஸு இருக்கும் போது என்னுடன் தமிழில் பேச முயற்சித்தான். இலக்கணத்திலோ உச்சரிப்பிலோ தவறிழைத்தான். நான் சட்டென்று ஒரு கம்மெண்ட் செய்தேன். அவன் இழைத்த தவறும் நான் செய்த கம்மெண்டும் இன்று என் நினைவில் இல்லை. ஆனால், அவன் கண்களின் ஓரத்தில் எட்டிப்பார்த்த கண்ணீர்த் துளிகள் இன்றும் என் மனஸில் தடுமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அவனிடம் பல முறை மன்னிப்பு கேட்டிருக்கிறேன், நேரில் அல்ல, என் மனஸினுள். அஹங்காரம். ஸூக்ஷ்ம அஹங்காரம். கமெண்ட் அடித்ததிலும் அஹங்காரம். மன்னிப்பு கேட்க முடியாததிலும் அஹங்காரம். எனினும், அந்த கண்ணீர்த் துளிகள் என்னை ஓரளவேனும் திருத்திக் கொள்ள உதவின என்பதும் ஸத்யம் .
'மட்டும்தான்' என்ற குறுகிய சிந்தனை மற்றொரு காரணம். "'என் கருத்து மட்டும் தான் உண்மை'; 'என் வழக்கம் மட்டும் தான் ஸரி'; 'என் நம்பிக்கை மட்டுமே ஸத்யமானவை. 'என் உணவு முறை மட்டுமே ருசியானது, ஆரோக்யமானது,'; மற்றவை அனைத்தும் தவறானவை, பொய்யானவை, தீங்கானவை,;. மேலும், இவற்றை திருத்தும் பொறுப்பு என் மேல் உள்ளது. பாதை தவறியவர்களை மீண்டும் ஸரியான பாதியில் இணைப்பது என் கடமை." என்ற எண்ணமும் ஒரு காரணம். ஸ்வாமி விவேகானந்த அடிக்கடி குறிப்பிட்ட கிணற்றுத் தவளை மனப்பான்மை என்பது இதுதான்.

நம் குறுகிய வட்டங்களைத் தாண்டி விரிவது, நம் எல்லைகளைத் தாண்டி ப்ரயாணிப்பது இக்குறையில் இருந்து விடுபடுவதற்கு மிகச் சிறந்த உபாயம். மற்ற ஸமுதாயத்தினரை ஸந்திப்பதும், மற்ற ஸமுதாயத்தின் விஶேஷ பண்டிகைகளில், ஷடங்குகளில் கலந்து கொள்வதும், மற்ற ஸமுதாயத்தினரின் குடும்பங்களுக்கு செல்வதும், நம் நட்பு வட்டத்தில் அன்ய ஸமுதாயத்தினரை இணைத்துக் கொள்வதும், மற்றவரின் மொழியைக் கற்றுக் கொள்ள முயல்வதும், நம் ப்ரதேஶத்தின் பிறப் பகுதிகளுக்கும், பாரத நாட்டின் பிற மாநிலங்களுக்கும், பணம் இருந்தால் உலகின் பிற நாடுகளுக்கு, ப்ரயாணம் செய்வதும் நம்மை இக்குறையில் இருந்து விடுவித்துக் கொள்ள உதவிடும். இயற்கை ஸ்தலங்களுக்கும் காடுகளுக்கும் கடல்-மலைகளுக்கும் ப்ரயாணம் செய்வது நல்லது தான். உயிரற்ற கட்டிடங்களையும் ஶில்பங்களையும் ஓவியங்களையும் காணச் செல்வதும் நல்லதுதான் ஆனால், அங்கங்குள்ள மக்களுடன் பழகுவதும் பேசுவதும் அதிக மஹத்வமானவை .
ஆங்க்லத்தில் ஒரு பழமொழி உண்டு. "உருண்டிடும் கல் பாஶத்தை, பாசியை தன் மேல் ஒட்ட விடுவதில்லை" என்று. ஆனால், "உருண்டிடும் யாத்ரீகன் தன் மேல் உள்ள இந்தப் பாசியை உலுக்கி எறிந்து விடுவான், என்பது நிஶ்சயம்."
Comments
Post a Comment