ॐ
கீதையின் சில சொற்றொடர்கள் - 23
अथ केन प्रयुक्तोऽयं पापं चरति (अनिच्छान्नापि ) ... (अध्याय ३ - श्लोक ३६ )...
அத கேன ப்ரயுக்தோயம் பாபம் சரதி (அநிச்சான்னபி ) (அத்யாயம் 3 - ஶ்லோகம் 36.)
Atha Kena Prayuktoyam Paapam Charati (Anicchaannapi) ..( Chapter 3 .. Shloka 36)
அர்தம் : ஸ்வய விருப்பம் இல்லாவிடினும் மனுஷ்யன் ஏன் பாபத்திற்குத் தூண்டப் படுகிறான்?
அர்ஜுனன் கேட்ட அத்புதமான கேள்வி இது. கீதை முழுவதிலும் அர்ஜுனனின் இத்தகைய கேள்விகளையும் ஸ்ரீ க்ருஷ்ணனின் ஆழமான பதில்களையும் நிறைந்திருப்பதைக் காணலாம். பொதுவாக, கேள்வியே சிந்தனையைத் தூண்டி விடும். மாணவனின் கூர்மையான கேள்வி ஆசார்யனிடம் இருந்து மிகச் சிறந்த பதிலைப் பிறப்பிக்கும். நேர்மை மற்றும் அறிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே கேள்வியைத் தூண்ட வேண்டும். திமிர் அல்லது ஆசார்யனை வீழ்த்த வேண்டும் என்ற உந்துதல் கேள்விக்குக் காரணமாகக் கூடாது.
இது மிக அதிகமான முறை கேட்கப் பட்டக் கேள்வியாகும். "இறைவன் கெட்டவர்களை ஏன் படைக்க வேண்டும்?" "நல்லவர்களை மட்டும் படைத்து விட்டு அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாமே?" கீதை ப்ரவசன அரங்கில் பலரும் பல முறை இக்கேள்வியைக் கேட்பர். இக்கேள்வியை கேட்பவர் அனைவரும் தன்னை "நல்லவராக" கருதி, கெட்டவர்களிடம் தாம் பெற்ற கசப்பான அநுபவங்களை மனஸில் வைத்துக் கொண்டு கேட்பவர்கள். ஆனால், அர்ஜுனனின் கேள்வி சற்று வித்யாஸமானது. அவன் தன்னைத் தானே விலக்கிக் கொள்ளவில்லை. In fact, இப்போரில் கலந்து கொண்டு, எதிரியின் ஸேனையில் உள்ள பலரைக் கொல்வதன் மூலம் தான் மிகப் பெரிய பாபம் செய்யப் போவதாகக் கருதுகிறான்.
மநுஷ்யன் ஏன் பாபம் செய்கிறான்? அவனை பாபத்திற்குத் தூண்டுவது எது? பொதுவாக எவரும் பாபம் செய்ய விரும்புவதில்லை. ஆனால், பாபத்திலிருந்து விலகியும் இருப்பதில்லை. இதை அறிந்து உள்ளதால் அர்ஜுனன், "எது மநுஷ்யனை பாபத்திற்கு தூண்டுகிறது?" என்று கேட்கிறான்.
ஸ்ரீ க்ருஷ்ணன் பதிலாகக் கூறுவது யாது? அடுத்த இதழில் காண்போம்.

Comments
Post a Comment