ॐ
கீதையின் சில சொற்றொடர்கள் - 26
जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम् (अध्याय ३ - श्लोक ४३)
ஜஹி ஶத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்... (அத்யாயம் 3 - ஶ்லோகம் 43)
Jahi Shathrum Mahaabaaho Kaamaroopam DhuraaSadham. (Chapter 3 - Shlokam 43)
அர்தம் : வெல்வதற்குக் கடினமான காமம் என்ற அந்த எதிரியைக் கொன்று விடு.
காமம் என்பது எதிரி ஏனென்றால் மனஸின் குவிப்பை, ஒருங்கிணைப்பைத் தடுமாற வைக்கிறது. காமம் ஒரு எதிரி, ஏனென்றால் அது வீழ்ச்சிக்குக் காரணமாகிறது. முயற்சி, ஸாதனை மற்றும் வாழ்க்கையில் முழுமை என்ற ஏறுமுகப் பாதையில் இருந்து சிதறிய மனம், முயற்சியில் தளர்ச்சி, மற்றும் போகத்தில் மூழ்கிய வாழ்க்கை என்ற இறங்கு முகப் பாதையில் தள்ளி விடும் வீழ்ச்சி.
இது ஒரு ஸாதாரண எதிரி இல்லை. மிகக் கடினமான எதிரி. எளிதில் வீழ்த்தப் பட முடியாத எதிரி. காமத்தை வலுக்கட்டாயமாக அடக்கி, அழுத்தியும் நீக்க முடியாது. அழுத்த அழுத்த அதன் வீர்யம் வலிமையானதாக ஆகுமே அன்றி அது அடங்காது. காமத்தை திருப்தி செய்யும் முயற்சியில் அதற்கான தீனியைக் கொடுத்தாலும் அது அடங்காது. ஒரு சில க்ஷணங்களுக்கு திருப்தி ஏற்படுவது போலத் தோன்றினாலும் உண்மையில் மேலும் மேலும் அனுபவித்திடும் அவா, இல்லை, பேரவா எழுந்திடும். காமத்தை திருப்தி செய்திடும் முயற்சி அக்னீயில் நெய் ஊற்றுவது போல. நெய் அக்னீ யை அமைதிப் படுத்தாது. மாறாக, மேலும் மேலும் உக்ரமாக்கிடும்.
காமம் அநுபவித்தல் அதிகம் ஆக ஆக, மனஸை இறுகப் பற்றிடும் போதையாக மாறிடும் வாய்ப்பு உண்டு. வரம்பை மீறும் போது வேறு எதிலும் ஈடுபட முடியாத மனம் ஆகிடும்.
விருப்பம் இன்மை, காமமற்ற மனம் தான் தீர்வு. இத்திஸையில் பலப்பல முயற்சிகள் நடந்துள்ளன. இவை ஒவ்வொன்றிலும் அடிப்படையான ஒன்று பயிற்சி... தீவ்ரமான பயிற்சி. (இடையறாத பயிற்சி என்று நான் சொல்லவில்லை... ஏனெனில் பயிற்சி என்றாலே இடையறாத, தொடர்ச்சியான முயற்சி என்பது இணைந்தே உள்ளது..)
Comments
Post a Comment