ॐ
கீதாவில் சில சொற்றொடர்கள் - 29
परित्राणाय साधूनाम . . (अध्याय ४ - श्लोक ८)
பரித்ராணாய ஸாதூனாம் ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 8)
Parithraanaaya Saadhoonaam .... (Chapter 4 - Shlokam 8)
அர்தம் : ஸாதுக்களைப் பாதுகாத்திட ..
ஸாது என்ற ஒரே வார்த்தை நம் நாட்டு அனைத்து மொழிகளில் மொழிகளிலும் பயன் படுத்தப் படுகிறது. அனைவராலும் புரிந்து கொள்ளவும் படுகிறது. அன்ய நாட்டு மொழிகளில், குறிப்பாக, ஐரோப்பிய மொழிகளில் ஸாது என்ற பதத்தினைக் குறித்திடும் ஒரு வார்த்தை கிடையாது. மொழி என்பது ஒரு மக்கள் சமூஹத்தின் வாழ்க்கை முறை மற்றும் கண்ணோட்டத்தினை வெளிப்படுத்திடும் ஒரு கண்ணாடி அல்லவா? ஸமுதாயத்தில், மக்கள் வாழ்க்கையிலும் கண்ணோட்டத்திலும் இருந்தால் அல்லவா மொழியில் இருந்திடும் !!
ஸாது என்பவர் ஸந்ந்யாஸீ இல்லை. நம்மில் எவரும் ஸாதுவாக இருக்க முடியும். ஸமுதாயத்தில் அனைத்து வர்கத்திலும், க்ராமத்திலும் நகரத்திலும், ஏன், ஒரு சிறைச்சாலையிலும் கூட ஸாது ஒருவர் இருக்க முடியும். ஸாது பாவத்தைத் தம்முள் அணிந்திருப்பவரே ஸாது. ஸ்ரீ கிருஷ்ணன், ஸாதுக்களைக் காத்திட என்று சொல்லும் போது, அவர் 'ஸாது பாவத்தையே குறிப்பிடுகிறார். ஸாது பாவமே காக்கப் பட வேண்டும். போற்றப் பட வேண்டும். போஷிக்கப் பட வேண்டும். தயை, அன்பு, கருணை, நன்மை, இவற்றின் தொகுப்பே ஸாது பாவம். 'இது செய்யப்பட வேண்டியது' என்ற எண்ணம் மாத்ரமே ஸாதுவைச் செயலில் தூண்டுவது. அவர் தன் வாழ்க்கையிலும் செயல்களிலும் பற்றின்மை என்பதை மாத்ரம் வெளிப்படுத்துபவர். வேறெந்த எதிர்ப்பார்ப்பும், விருப்பமும் அவருக்குக் கிடையாது.
விருப்பம் மற்றும் எதிர்ப்பார்ப்பு ஏதும் இல்லாத நிலையில், துஷ்கர்மம், திட்டம் தீட்டுதல், பழி வாங்குதல், ஒப்பிடுதல்,வெறுப்பு, போட்டி, பொறாமை, திமிர், ஏமாற்றம், மனச்சோர்வு, ஶோகம், போன்றவற்றிற்கு அவரிடம் இடம் இல்லை. வாய்ப்பும் இல்லை. எனவேதான், ஒரு ஸாது, அவர் குடும்பத்தில் இருந்தாலும், க்ராமத்தில் இருந்தாலும், ஏன், சிறைச்சாலையிலும் கூட, ஊக்கம் அளிப்பவராக, உத்ஸாஹம் அளிப்பவராக, ஆனந்தம் அளிப்பவராக, மன அமைதி அளிப்பவராக, சிந்தனைத் தெளிவு அளிப்பவராக, விளங்குகிறார். உன்னத வாழ்க்கைக்கு நம்மைத் தூண்டுபவராக விளங்குகிறார்.
ஸாது பாவம் என்பது முயற்சியினாலோ, பயிற்சியிநாளோ அடைந்து விடக் கூடியதல்ல. ஜனனத்துடன் வருவது ஸாது பாவம். ஆனால், இன்று முயற்சியைத் தொடங்கினால், இடைவிடாது, தீவ்ரமாக பயிற்சி செய்தால், எதிர்க்காலத்தில், எதிர் வரும் ஜன்மங்களில் ஸாதுபாவத்தைப் பெற்று விடலாம்.
ஸ்ரீ கிருஷ்ணன் இங்கே இத்தகைய ஸாது பாவம் போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டும் என்கிறார். உலகத்தில் ஸாதுக்கள் தழைக்க வேண்டும். அவர்கள் மூலம் ஸாது பாவம் தழைத்து நிலைக்க வேண்டும் என்கிறார். ஸாதுக்களை, ஸாது பாவத்தைக் காத்திட நான் யுகம் தோறும் அவதாரம் எடுத்து வருவேன் என்று ஆஶ்வாஸம் அளிக்கிறார்.

Comments
Post a Comment