ॐ
கீதையில் ஸில சொற்றொடர்கள் - 32
கிம் கர்ம கிம் அகர்ம ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 17)
Kim Karma Kim Akarma ... (Chapter 4 - Shlokam 17)
அர்தம் : கர்மம் எது ? அகர்மம் எது ? (செயல் எது ? செயலற்ற நிலை எது ?)
அத்புதமான கேள்விகள் இவை.. பதில் ?? "இக்கேள்விகளுக்கான பதிலை அறிவதில் தேர்ந்த ஞானிகளும் குழம்புகின்றனர்." என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன். கவயோsப்யத்ர மோஹிதாஹ் ... (कवयोsप्यत्र मोहिताः |)
இக்கேள்விகளுக்கு அனைவருக்கும் பொருந்தக் கூடிய பதில்கள் கிடையாது. தத்தம் பதிலை அவரவர் ஸ்வந்த முயற்சியில் தேட வேண்டும். பதில் கிடைத்து விட்டால் அவர் பாக்யஶாலி. கிடைத்த பதிலைத் தன் வாழ்வில் கடைப்பிடிக்க முடிந்தவன் ஜன்ம ஸாLபல்யம் அடைந்து விட்டான் என்றே சொல்ல வேண்டும்.
கர்மம் எது ? அகர்மம் எது ? ஏன் இந்தக் கேள்விகள் ? மனுஷ்ய வாழ்க்கையில் கர்மம் தவிர்க்க முடியாதது. உணவுக்கான பொருட்களை வாங்குதல், உணவு ஸமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்தல், ஸமைத்தல், பரிமாறுதல், உண்ணுதல், துணிகள் வாங்குதல், அவற்றைத் தன் ஶரீர அளவு மற்றும் தேவைக்கு ஏற்ப தைத்து, மாற்றி அமைத்தல், உடுத்துதல், துவைத்தல், ஶரீரத்தின் உள்ளும் புறமும் ஶுத்தப் படுத்தல், அவஶ்யப்படும் போது மருத்துவம் பார்த்தல்.. முதலியவை ஒருவன் தனக்காக, தன் ஶரீரத்திற்காக செய்திடும் கர்மங்களில் சில. ஒரு வேலையில் சேர்தல் அல்லது வ்யாபாரம் செய்தல் அல்லது ஸ்வந்தத் தொழிலில் ஈடுபடுதல், அதற்கேற்ற கல்வியும் பயிற்சியும் பெறுதல், போய் வர வாஹன ஏற்பாடு செய்து கொள்ளுதல், வாடகைக்கு ஒரு வஸிப்பிடம் எடுத்தல் அல்லது பணம் ஏற்பாடு செய்து, தகுதி உள்ளவர்களை அமர்த்தி ஸ்வந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ளுதல், அந்த வீட்டினை இயற்கைச் சீற்றம், திருடர்கள் மற்றும் பூச்சிகளிடம் இருந்து காத்தல், இவை குடும்பத்திற்காக ஒருவன் செய்திடும் கர்மங்களில் சில. அரஸாங்க மற்றும் ஸமுதாயக் கடமைகளைச் செய்தல், பொதுக்கார்யங்களில் பணம், உழைப்பு, மற்ற வகைகளில் பங்காற்றல், இவை ஸமூஹத்திற்காக ஒருவன் செய்திடும் கர்மங்களில் சில. அன்றாடம் செய்பவை, அவ்வப்போது செய்பவை, விஶேஷ ஸந்தர்பங்களில் செய்பவை, எப்பொழுதாவது அரிதாகச் செய்பவை, ஆபத்து விபத்து ஸமயங்களில் செய்பவை என்று எண்ணிலடங்கா கர்மங்கள் உள்ளன. இவை அனைத்தும் கர்தா பாவத்துடன் கூடியவை. அதாவது, 'செய்பவன் நான்தான்' என்ற உணர்வுடன் செய்யப்படுபவை.
இவைத் தவிர, நம்மைச் சுற்றிலும், நம் மீது, நம்முள் நடைபெறும் கர்மங்கள் பற்பல. ஆனால், 'செய்பவன் நான்' என்ற உணர்வு இல்லாமல் நிகழ்பவை. நாம் உணவு உண்கிறோம். அந்த உணவு ஜீரணம் ஆகிட, ஶரீரத்தில் ஸத்துக்கள் க்ரஹிக்கப்பட, கழிவு வெளியேற்றப்பட நம்முள் அரிய பெரிய கர்மங்கள் நடைபெறுகின்றன. மூச்சு இழுத்து விடுதல், ஹ்ருதயம் துடித்தல், ரக்தம் உருவாகுதல், ஶரீரம் முழுதும் ரக்தம் ஸஞ்சரித்தல், ரக்தம் ஶுத்தம் ஆகுதல், ஶரீர அணுக்கள் உருவாகுதல் மற்றும் அழிதல், அணுக்களில் ஆற்றலின் உத்பத்தி, போன்று பற்பல கர்மங்கள் நம் ஶரீரத்தில் நடைபெறுகின்றன. தாயின் கர்பத்தில் உயிர் விளைதல், ஶிஶுவின் தேஹம் வளருதல், போன்ற ஆஶ்சர்யகரமான கர்மங்கள் நடைபெறுகின்றன. இக்கர்மங்களில் எவற்றிலும் (அஹம் கர்தா) செய்பவன் நான் என்ற உணர்வு இருப்பதில்லை. இவை தாமாக நடப்பதாக நாம் கருதுகிறோம்.
தினம் தினம் நடந்திடும் ஸூர்ய உதயம், மற்றும் ஸூர்ய அஸ்தமனம், நதியில் நீர்ப் பெருக்கு, கடல் நீர் ஆவியாக, மேகமாக மாறுதல், மழை, வெள்ளம், பூகம்பம், ஸுனாமி, புயல், போன்ற இயற்கை பாதிப்புக்கள், பூமியின் ஸுழற்சி, மற்ற க்ரஹங்களின் ஸுழற்சி, போன்ற பலப்பல கர்மங்களை இயற்கையின் செயல்பாட்டாகவே கருதுகிறோம். நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட கர்மங்களாகக் கருதுகிறோம்.
இவை ஸ்தூலமான கர்மங்கள்.. மேலும், ஸூக்ஷ்மமான கர்மங்கள் பல உள்ளன. நம் வாக்கும், சிந்தனையும் கர்மங்களே.

அகர்மம் என்பது என்ன ? செய்யக்கூடாதது என்ன? பேசக்கூடாதது எது ? சிந்திக்கக் கூடாதது எது ? செயலின்மை இயலக்கூடியதா ? வெளிப்படையான கர்மங்களைத் தவிர்த்து விடலாம். வெளி உலகத்தில் இருந்து நம்மை விலக்கிக் கொள்ளலாம். கர்மங்களுக்கான கருவிகளை உயிரற்றுப் போகச் செய்யலாம். ஆனால், உள்ளே, மனஸினுள் நடந்திடும் கர்மங்களைத் தவிர்க்க இயலுமா ?? இது நம்முன் உள்ள மிகப் பெரும் ஸவால்.
நாம் பொதுவாக, "செய்பவன் நான்" என்ற உணர்வுடன் கூடிய செயல்களை மட்டும் நேசிக்கிறோம். அவற்றால் மட்டும் பிணைக்கப் படுகிறோம். அவை மட்டும் தான் நம்மை பாதிக்கின்றன. தாமே நிகழ்வதாக நாம் கருதக் கூடிய கர்மங்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.. எனவே, கர்தா பாவம் தான் ப்ரஶ்னை. நான் செய்கிறேன் என்ற உணர்வுதான் ப்ரஶ்னை. அதை நீக்கி விட்டால்... வெளிப்படையாக செயலற்று இருந்து, மனஸளவில் பெரும் புயலெனச் செயல்களில் மூழ்கி இருக்கும் நிலை நமக்குப் பழக்கமானது. அதற்கு எதிர்மாறாக, வெளிப்படையாக கர்மங்களில் திளைத்திருந்தாலும் உள்ளே அமைதியாக, செயலற்று ஆனந்தமாக இருப்பது பழக வேண்டும். இதைத்தான், ஸ்ரீ க்ருஷ்ணன் அஹங்கார விமூடாத்மா கர்தாஹம் இதி மன்யதே .... (अहङ्कार विमूढात्मा कर्ताहम् इति मन्यते ). அதாவது "அஹங்காரம் நிறைந்த மூடன் தான் தன்னை கர்தா, செயல்களைச் செய்பவன்.. என்று கருதுகிறான்", என்கிறார்.
Comments
Post a Comment