ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 34
यस्य सर्वे समारम्भाः काम सङ्कल्प वर्जिताः (अध्याय ४ - श्लोक १९)
யஸ்ய ஸர்வே ஸமாரம்பாஹ காம ஸங்கல்ப வர்ஜிதாஹ (அத்யாயம் 4 - ஶ்லோகம் 19)
Yasya Sarve Samaarambhaah KaamaSankalpa Varjitaah (Chapter 4 - Shloka 19)
அர்தம் : எவருடைய எல்லா கர்மங்களும் விருப்பம் மற்றும் ஸங்கல்பம் அற்று விளங்குகின்றனவோ...
ஸங்கல்பம் : காமத்தின் முன் அவதாரம் ஸங்கல்பம். ஒரு விஷயத்தைப் பார்த்திடும் போதோ, ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டிடும் போதோ, அல்லது ஒரு விஷயத்தைப் பற்றிப் படித்திடும் போதோ.. "இது பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது.."; "இது மலிவாக இருக்கிறது.."; "இது நீடித்து உழைக்கும்.."; "இது தேஹ ஆரோக்யத்திற்கு உகந்தது.."; "இது மிக அரிதானது. மிகக் குறைவான நபர்களிடம் மாத்ரமே இருக்கிறது..."; "இது நம் நாட்டிலேயே தயார் ஆனது.."; "இது பக்க விளைவுகள் இல்லாதது .."; "இது குளிர்ச்சியானது. வெய்யில் காலத்திற்கு ஏற்றது.. நம்மூரில் எவ்வளவு கடுமையான வெய்யில் அடித்திடும் என்பது உங்களுக்குத்தான் தெரியுமே..."; "இதில் பலப்பல வஸதிகள் உண்டு..." என்பவைப் போன்று அவ்விஷயத்திற்கு அனுகூலமான சிந்தனைகள் மனஸில் உதிக்கும்.. இவையே ஸங்கல்பங்கள்.. அவ்விஷயத்திற்கு எதிர்மாறான சிந்தனைகள் விகல்பம் எனப்படும்.. "மலிவுதான் .. ஆனால், ஶீக்ரத்தில் உடைந்து விடும்.."; "இதன் உதிரி பாகங்கள் நம்மூரில் கிடைக்காது.."; "இது இயற்கைக்குக் கேடு விளைவிக்கும்.."; "வஸதியாகத் தான் இருக்கிறது.. நெடுந்தூர ப்ரயாணத்திற்கு ஓ கே .. ஆனால் மஹா நகரத்துக் கூட்ட நெரிஸலுக்கு ஒத்து வராது..";
ஸங்கல்பங்களும் விகல்பங்களும் பரஸ்பரம் மோதிக்கொண்டு விகல்பங்கள் தோற்று மறைந்து விட்டால்.. ஸங்கல்பம் மாத்ரமே எஞ்ஜி நிற்கும்.. அது காமமாக அவதாரம் எடுக்கும்.. "இது எனக்கு வேண்டும்.."; "இதை நான் எப்படியாவது வாங்கி விட வேண்டும்.." "இது கூட இல்லை என்றால் .. நான் வாழ்வதே வீண்.." "நேற்று வந்தவன் எல்லாம் இதை வைத்திருக்கிறான்.. என்னிடம் தான் இல்லை.." காமத்தின் வெளிப்பாடுகள் இவை..
ஸங்கல்பம் மற்றும் காமம் தான் ஒருவனைச் செயல்பட வைத்திடும் என்பது பொதுவான நம்பிக்கை. ஸ்ரீ கிருஷ்ணன் ஆதரிப்பது இவை இரண்டும் இல்லாத கர்மங்களை.. கடமை என்று செய்ய வேண்டும். ஸ்வதர்மத்திற்கு ஏற்றதைச் செய்ய வேண்டும்.. ஸ்வபாவத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும்.. ஶ்ரத்தை இருந்தால் செய்ய வேண்டும். இதுவே ஸ்ரீ கிருஷ்ணனின் கூற்று.
இன்று ஆங்க்லக் கல்வி கற்றதினாலோ நாஸ்திக வாத ப்ரசாரத்தின் விளைவாலோ ...விக்ஞானத்தில் உரஸிப் பார்த்தே ஏற்றுக் கொள்வேன் என்ற ஒரு மன நோய் பீடித்திருக்கிறது.. நம்மிடம் இருப்பதோ அரைகுறை விக்ஞான அறிவு. அதன் அடிப்படையில் ஒரு செயலைச் செய்வதும் செய்யாமல் இருப்பதும் எப்படி ஸரியாகும் ? கர்தவ்யம் அதாவது செய்யப் பட வேண்டியது.. என்றால் செய்ய வேண்டும்.. நம் ஸ்வபாவம் மற்றும் ஸ்வதர்மத்திற்கு ஏற்றதாக இருந்தால் செய்ய வேண்டும்.. ஸங்கல்பத்திற்கும் காமத்திற்கும் (விருப்பத்திற்கும் ) இடம் இல்லை...

Comments
Post a Comment