ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 36
द्वन्द्वातीत ... (अध्याय ४ - श्लोक २२)
த்வந்த்வாதீத ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 22)
Dwandwaatheetha ... (Chapter 4 - Shloka 22)
அர்தம் : த்வந்த்வம் என்றால் இருவருக்கு அல்லது இரண்டு விஷயங்களுக்கு இடையே போராட்டம் என்று அர்தம். அதீத என்றால் அப்பால்... தாண்டி என்று அர்தம். த்வந்த்வாதீதம் என்றால் எதிர்மறையான இருமைகளுக்கு அப்பால் என்று அர்தம்
நம்மைச் சுற்றிலும் நாம் பல்வேறு ரெட்டையர்களை, நேர் எதிர்மறையான ரெட்டையர்களை, ஒன்றுக்கொன்று முரணான ரெட்டையர்களைப் பார்க்கிறோம். வெளிச்சமான பகல் இருக்கிறதென்றால் இருண்ட ராத்ரீயும் இருக்கிறது. படு உஷ்ணமான வெய்யில் காலம் உண்டென்றால் கடுங்குளிர்க் காலமும் உண்டு. மதுரமான தேனும் இளநீரும் உண்டென்றால் கசப்பான கடுக்காயும் பாகற்காயுமுண்டு. கண்ணுக்கு அழகான தாமரையும் ரோஜாவும் உண்டென்றால் கோணல்மாணலான கற்றாழையும் உண்டு. காதிற்கு மதுரமான குயில் ஶப்தம் உண்டென்றால் கர்ணகடூரமான கழுதைக் கத்தலும் உண்டு. தொடுதலுக்கு ஹிதமான பட்டும் பட்டாம்பூச்சியும் உண்டென்றால் சொறசொறப்பான கம்பளியும் முள்ளும் உண்டு. இவை எல்லாம் நம் இந்த்ரியங்கள் அடையும் அநுபவங்களில் உள்ள முரண்பாடுகள்.
நம் மனஸும் பற்பல முரண்பாடான அநுபவங்களைப் பெறுகிறது. பாராட்டு உண்டென்றால் வசைகளும் உண்டு. வரவேற்பு உண்டு. எதிர்ப்பும் உண்டு. ப்ரியம் உண்டென்றால் வெறுப்பும் உண்டு. நட்பு உண்டு. பகையும் உண்டு. மனஸிற்கு ஹிதமானவை உண்டென்றால் கசப்பானவையும் உண்டு. நம்பிக்கையுடன் ஏமாற்றமும் உண்டு. லாபத்துடன் நஷ்டமும் உண்டு.
நம் மனஸும் பற்பல முரண்பாடான அநுபவங்களைப் பெறுகிறது. பாராட்டு உண்டென்றால் வசைகளும் உண்டு. வரவேற்பு உண்டு. எதிர்ப்பும் உண்டு. ப்ரியம் உண்டென்றால் வெறுப்பும் உண்டு. நட்பு உண்டு. பகையும் உண்டு. மனஸிற்கு ஹிதமானவை உண்டென்றால் கசப்பானவையும் உண்டு. நம்பிக்கையுடன் ஏமாற்றமும் உண்டு. லாபத்துடன் நஷ்டமும் உண்டு.
இவை அனைத்தும் நம்மைச் சுற்றி உள்ள உலகத்துடன் நாம் உறவாடும் போது, தொடர்பு கொண்டிடும் போது நாம் பெற்றிடும் அநுபவங்கள். நம்மால் உலகத்துடன் எவ்விதப் பிணைப்பும் இல்லாமல் வாழ முடியுமா ? முடியாதல்லவா ? ராத்ரீயையும் பகலையும் தவிர்க்கிட முடியுமா ? வெய்யிலையும் குளிரையும் தவிர்க்க முடியுமா ? புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் தவிர்க்க முடியுமா ? மான அபமானத்தைதான் தவிர்க்க முடியுமா ? நம்மைச் சுற்றிலும் உள்ள உலகத்துடனும் உலக விஷயங்களுடனும் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க முடியாதென்பதால், இந்த அநுபவங்களும் தவிர்க்கப்பட முடியாதவை. எனில் என்ன செய்யலாம் ..?? ஸற்று ஸூக்ஷ்மமாக கவனித்தோம் என்றால் இவ்வநுபவங்களை வர்ணித்திட நாம் உபயோகப்படுத்தியப் பெயர்ச்சொற்களே பேதங்களுக்கு போராட்டங்களுக்கும் காரணம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். கடுமையான, கசப்பான, மதுரமான, ஸுகமான, மென்மையான, அருவருப்பான, ஹிதமான, போன்ற சொற்களே த்வந்த்வங்களுக்குக் காரணம். இவற்றை நீக்கி விட்டால் எஞ்ஜி இருப்பவை வெறும் அநுபவம் மாத்ரமே. நம் அநுபவங்களை வர்ணித்திடாமல் வெறும் அநுபவங்களாக ஏற்றுக் கொண்டால் நாமும் த்வந்த்வாதீதன் ஆகி விட முடியும்.
ஆனால், அனுபவங்கள் வெவ்வேறாகத்தானே தெரிகின்றன. வெவ்வேறாகப் பார்த்திடாமல் ஒன்றாகவே பார்த்திடல் ஸாத்யமா ? ஒவ்வொன்றுக்கும் ஸ்வபாவம் வெவ்வேறு என்பதால் அதனுடன் தொடர்பு கொள்ளும் போது ஏற்படும் அநுபவமும் வெவ்வேறுதான். ரோஜாவின் ஸ்வபாவம், பாறையின் ஸ்வபாவம், ஒரு மிருகத்தின் ஸ்வபாவம், ஒரு பறவையின் ஸ்வபாவம், ஒரு மனுஷ்யனின் ஸ்வபாவம்.. ஒவ்வொன்றும் வெவ்வேறு. ஸ்வபாவத்தை மாற்ற முடியுமா ? தன்னுடைய ஸ்வபாவத்தை மாற்றிக் கொள்வதுதான் மிக ஸுலபமானது. பெரும்பாலோரால் அதுவே இயலவில்லை. பின், அடுத்தவரின் ஸ்வபாவத்தை மாற்றுவதெங்ஙனம் ? இயலாதது. அதே ஸமயம், தொடர்பு கொள்ளாமலும் இருக்க முடியாது. தொடர்பு ஸமயத்தில் ஏற்படும் அநுபவத்தை வர்ணித்திடாமல், அப்படியே ஏற்றுக் கொள்ளத் தனக்குத்தானே பயிற்சி அளித்தல் மாத்ரமே நம்மால் செய்யக் கூடிய ஒன்று. அநுபவங்கள் அநுகூலம் - ப்ரதிகூலம், இனிப்பு - கசப்பு, ஹிதம் - கஷ்டம் போ ன்றவை நம்முள் இறங்கி எவ்வித சலனத்தையும் ஏற்படுத்த அநுமதிக்கக் கூடாது. நம்மை நாமே மாற்றிக் கொள்ளலாம். உலகத்தை மாற்றிட முயலக் கூடாது.
Comments
Post a Comment