ॐ
கீதையில் ஸில சொற்றொடர்கள் - 39
प्रणिपादेन .... (अध्याय ४ - श्लोक ३४)
ப்ரணி பாதேன .... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 34)
PraNi Paadena .... (Chapter 4 - Shloka 34)
அர்தம் : காலில் விழுந்து வணங்கி ...
நமஸ்காரம், நமஸ்தே, வணக்கம், நமஸ்காரா, நமஸ்கரிக்குன்னு, நமஸ்காரமண்டி, பாய் லாகூ,, சரண் சூ, ஜய ஸ்ரீ கிருஷ்ண, ராம் ராம், இவை எல்லாம் பாரத நாட்டில் வெவ்வேறு ப்ரதேஶங்களில் ஒருவர் மற்றவரை ஸந்திக்கும் போது சொல்லப் படும் வார்தைகள். இவை அனைத்தின் அர்தமும் ஒன்றேதான். தேவ ரூபமான உன்னை வணங்குகிறேன் என்பதுதான் அது. வெவ்வேறு மொழிகளில் வார்தைகள் மாறுபட்டாலும், மனுஷ்யன் பரமாத்மாவின் ஸ்வரூபம் என்பதும் அதனால் வணங்கப்பட வேண்டும் என்பதும் நம் பாரத நாடு முழுவதும் ஏற்கப்படும் பொதுவான பார்வை.
இவ்வார்தைகளுடன் இணைந்து வரும் செயல்கள் எத்தகையவை ? ஶிரம் தாழ்த்துதல், ரெண்டு உள்ளங்கைகளையும் சேர்த்தல், குனிந்து பாதத்தைத் தொடுதல், ஸாஷ்டாங்கமாக பூமியில் விழுதல், ஐரோப்ப, ஆஃப்ரிக்க, அமெரிக கண்டங்களில் வணங்குதல் என்ற வழக்கம் கிடையாது, எனவே, அங்குள்ள மொழிகளில் அதற்கான வார்தையும் கிடையாது. பௌத்த மதம் அனுஷ்டிக்கப்படும் தேஶங்களில் இந்த பழக்கமும் உண்டு. அங்குள்ள பாஷைகளில் அதற்கான வார்தையும் உண்டு .. ஆனால், பாரதத்தில் மாத்ரமே காலைத் தொட்டு வணங்குதல், காலில் விழுதல், ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் என்ற பழக்கம் வேரூன்றி இருக்கிறது. நான் பாரதம் என்று சொல்லும் போது, இந்தியா எனப்படும் துண்டிக்கப்பட்ட இன்றைய பூமியுடன் சேர்த்து, நம்முடன் இணைந்திருந்த நேபாளம், ஸ்ரீ லங்கா, தாயலாந், ப்ரஹ்மதேஶம், திபெத், பாகிஸ்தான், பங்க்ளாதேஶம், ஆகிய பூ ப்ரதேஶங்களையும் குறிப்பிடுகிறேன். அதாவது, அகண்ட பாரதத்தைக் குறிப்பிடுகிறேன்.
காலில் விழுவதற்கு மனஸில் விநயம் வேண்டும். மனஸ் விறைத்து நின்றால் காலில் விழுந்து வணங்க முடியாது. அப்படியே விழுந்தாலும் அது வறட்டு ஷடங்காக மாத்ரம் இருந்திடும்.
தன் கால் அல்லது காலில் உள்ள செருப்பை அவனது தலையில் வைப்பதோ அல்லது அவ்வாறு வைப்பதாகச் சொல்வதோ தான் ஒருவனை அபமானப் படுத்துவதற்காக, அவனுடைய 'நானை' புண்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் உபயோகப் படுத்தப் படும் செய்கைகள்.. இதற்கு நேர் எதிர் மாறாக, தன் தலையை ஸ்வயமாக அடுத்தவனுடைய காலடியில் வைப்பது தன்னுடைய நானை அழிக்க உதவும் அல்லவா ?
காலில் விழுதல் ..இதற்கு மற்றும் ஒரு கோணமும் உண்டு. ஶரணடைதல் என்பதே அது. ஶரணடைதலும் ஸுலபமானதல்ல. 'என்னுடைய ஸ்வய முயற்சி எதுவும் இல்லை, எல்லாம் உன் விருப்பப்படி' என்ற பாவமே ஶரணடைதல். ஆற்றல், அதிகாரம், பலம், செல்வம் ஆகியவற்றால் தன்னை விட பன்மடங்கு உயர்ந்தவனை ஶரணடைதல் ஸுலபம். இந்த அனைத்து ஶரணடைதல்-களிலும் பயம் அல்லது ஸ்வயநல எதிர்ப்பார்ப்பு காரணமாக இருந்திடும் வாய்ப்பு மிக அதிகம். ஆனால், குணம் மற்றும் வித்யை இவற்றை மாத்ரம் பூஷணமாக அணிந்து, எவ்வித அதிகாரமும், செல்வமும், பலமும் இல்லாத ஆசார்யனிடம் ஶரணடைதல் -- ஸ்ரீ க்ருஷ்ணன் இந்த சொற்றொடர் மூலம் ப்ரகடனப் படுத்தும் கருத்து இதுதான்.
ப்ரணி பாதேன மூலம் நான் அற்றுப் போக வேண்டும். ஶரணடைதல் விளைய வேண்டும்.

Comments
Post a Comment