ॐ
கீதையில் ஸில சொற்றொடர்கள் - 40
परि प्रश्नेन सेवया (अध्याय ४ - श्लोक ३४ )
பரி ப்ரஶ்னேன ஸேவயா (அத்யாயம் 4 - ஶ்லோகம் 34)
Pari-Prashnena Sevayaa (Chapter 4 - Shloka 34)
அர்தம் : கேள்வி கேள் ..
கேள்வி கேள் ... விளக்கம் கேள் ... இதுவும் பாரதம் மொத்த மனுஷ்ய ஸமுதாயத்திற்கும் அளித்த ஒரு விஶேஷப் பங்களிப்பு. கேள்வி கேள். ஞானத்தைப் பெறுவதற்காகக் கேள்வி கேள். விளக்கம் .நாடு. விளக்கம் அளிப்பவர் எவ்வளவு பெருந்தகையாக இருப்பினும். நான் சென்ற நாற்பது வர்ஷங்களாக மாணவர்களை ஸந்தித்து உரையாடி வருகிறேன். கேள்வி கேட்கும் பல மாணவர்களை அந்நிகழ்ச்சிகளில் ஸந்தித்திருக்கிறேன். 'கோணலான கேள்வியைக் கேட்டு, பேச்சாளனை எப்படி மடக்கி விட்டேன் பார்' இறுமாப்புடன் மார் தட்டிக் கொண்டு, ஸஹ மாணவர்களின் பாராட்டைப் பெறுவதற்காகவே கேள்வி கேட்பர் பலர். கலப்படம் இல்லாத அஹங்காரம் அக்கேள்விகளுடன் கைக்கோர்த்து வருவதைக் காணலாம். தான் கேட்ட கேள்விக்கு அளிக்கப்படும் பதிலில் அவர்களுக்கு ஆர்வம் இருக்காது. இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் கூறிடும் கருத்து வேறு விதமானது. கேள்வி கேட்பதே முக்யம் இல்லை. அறிந்து கொள்வதற்காக, ஒளியைப் பெறுவதற்காக மாத்ரம் கேள்வி கேட்கப் பட வேண்டும். இவ்வாறு இருந்தால் இயல்பாகவே கேள்வியுடன் சேர்ந்து விநயமும் வெளிப்படும்.
ஹிந்துக்கள் கேள்வி கேட்கும் இந்தத் தன்மையை வேத காலம் முதல் போற்றி போஷித்திருக்கிறார்கள். வேதம் ஸநாதனமானது. என்று பிறந்தது என்று கூற முடியாத அளவிற்கு புராதனமானது. முடிவில்லா எதிர்க்காலத்திலும் நிலைக்கப் போவது. "வேதம் என்ற இந்த புஸ்தகம் கால சக்ரத்தில் மீண்டும் மீண்டும் மறைந்து போனாலும் அது மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்". ர்ஷிகளின் இந்தக் கூற்றில் அவர்களது ஆழமான ஶ்ரத்தை வெளிப்படுகிறது. ஸத்யத்தின் மீதுள்ள அவர்களது ஶ்ரத்தை. கீதையிலும் ஸ்ரீ க்ருஷ்ணன் இதே கருத்தினைச் சொல்கிறார். "படைப்பின் ஆரம்பத்தில் நான் இந்த யோகத்தை ஸூர்யனுக்குக் கூறினேன். காலப்ரவாஹத்தில் அது பலமுறை மறைந்து மறக்கப்பட்டு விட்டது. மீண்டும் மீண்டும் தோன்றியது. இன்று நான் உனக்கு அதே யோகத்தைக் கூறுகிறேன், அர்ஜுனா !" என்கிறார். அவர்களது உறுதியான நம்பிக்கைக்குக் காரணம் ஸத்யத்தின் மீதுள்ள அவர்களது ஶ்ரத்தை. ஸத்யம் கால தேஶ வரம்புகளுக்கு அப்பாற்பட்டது. ஸத்யமே பரமாத்மன். ஸத்யம் தான் வேதம் என்ற புஸ்தகத்திற்கு ஆதாரம். ஆனாலும், இதுதான் இறுதி ஸத்யம் என்று வேதம் அறிவிப்பதில்லை. இந்த புஸ்தகம் மாத்ரமே பரமானைப் பற்றிய ஒரே புஸ்தகம் என்றோ இறுதிப் புஸ்தகம் என்றோ அறிவிக்கவில்லை.. நாம் வேதத்தினைப் புனிதமாகக் கருதுகிறோம். எனினும், வேதம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டதல்ல. நாம் வேதம் படிக்கிறோம். ஒவ்வொரு ஹிந்துவும் வேதத்தைப் படிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. பரமாத்மனை, ஸத்யத்தை அறிந்திடவே படிக்கிறோம். ஞானத்தைப் பெறுவது முக்யமே அன்றி, புஸ்தகத்தைப் படிப்பதல்ல. அதனால்தான், பாரதத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும், ஒவ்வொரு ப்ரதேஶத்திலும் மஹாத்மாக்கள், ஸாதுக்கள், தோன்றி இருக்கின்றனர். ஒளியைக்கண்ட ஸாதுக்கள், ஸத்யத்தை உணர்ந்த ஞானிகள். இவர்களில் எவரும் தன்னைத் தானே இறுதி ஞானியாக, அறிவித்துக் கொள்ளவில்லை. இவர்களில் எவரும் எந்தவொரு அமைப்பினாலோ, பீடாதிபதியாலோ Saint அல்லது ஸாது என்று அறிவிக்கப் படவில்லை. (வாடிகன் தெரெஸாவை அறிவித்தது போல...)
ஹிந்துக்களான நாம் நம் வேதங்களைக் கேள்வி கேட்கலாம். மற்ற க்ரந்தங்களைக் கேள்வி கேட்கலாம். நம் ஷடங்குகளைக் கேள்வி கேட்கலாம். நம் பழக்க வழக்கங்களைக் கேள்வி கேட்கலாம். நம் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கலாம். நம் பீடாதிபதிகளைக் கேள்வி கேட்கலாம். கேள்வி கேட்டு மீண்டும் புரிந்து கொள்ளலாம். கேள்வி கேட்டதால் சாட்டையால் அடித்ததாகவோ, கண்களை நோண்டி குருடனாக்கி விட்டதாகவோ, சிலுவையில் அறைந்ததாகவோ கல்லால் அடித்தோ மற்ற வழிகளிலோ கொல்லப்பட்டதாகவோ பாரத நாட்டு நீண்ட கால வரலாற்றில் ஒரு ஸம்பவம் கூட இல்லை. ஹிந்துக்களை ஸஹிப்புத் தன்மை இல்லாதவன் என்றும் பழமைவாதி என்றும் அடிப்படைவாதி என்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவன் என்றும் குருட்டுப் பிடிவாதம் கொண்ட தீவ்ரவாதி என்றும் பழி ஸுமத்துவது மூடத்தனம். இன்று ஹிந்து விரோத 'ஸெக்யூலர் வாதிகள் இதையே செய்கின்றனர். யார் பழமைவாதி ? "ஆயிரம், ரெண்டாயிரம் வர்ஷங்கள் முன்னர் சொல்லப்பட்டதை, எழுதப்பட்டதை ஒரு இம்மி அளவும் மாற்ற அநுமதிக்க மாட்டோம் என்று சொல்பவர்கள் பழமைவாதிகள். அடிப்படைவாதிகள் யார் ? இறைவனிடம் தூதர்களின் stock தீர்ந்து விட்டது என்றும் இனி அவன் தூதர்களை அநுப்ப மாட்டான் என்று நம்புபவன் அடிப்படைவாதி. நம்முடைய ஸ்ரீ ஹநுமானும் ஒரு இறை தூதன். அவனை நாம் வழிபடவும் செய்கிறோம், இறை தூதன் என்பதற்காக அல்ல. அவனுடைய வலிமைக்காக, அவனுடைய எல்லையற்ற பராக்ரமத்திற்காக, அப்பழுக்கற்ற அவனது ஒழுக்கத்திற்காக, ஒப்புயர்வற்ற அவனது குணங்களுக்காக, கூர்மையான அவனது புத்திஶாலித்தனத்திற்காக, அவனை வழிபடுகிறோம். "நான்தான் இறைவனின் இறுதி தூதுவன்" என்று அறிவித்தவனை வழிபட்டுப் பின்பற்றுபவன் அடிப்படைவாதி. குருட்டுப் பிடிவாதம் கொண்ட தீவ்ரவாதி யார் ? அந்த இறுதி தூதனையும் அவனது கட்டளைகளையும் ஏற்க மறுப்போரை, கேள்வி கேட்போரை, கொன்றிட ஆயுதம் ஏந்தி அலைபவன் தான் குருட்டுப் பிடிவாதம் பொருந்திய தீவ்ரவாதி. குறுகிய மனப்பான்மை கொண்டவன் யார் ? எங்கோ இருக்கும் ஒரு கல்லையும் எங்கோ ஒரு அரண்மனையில் அமர்ந்திருக்கும் ஒரு மனுஷ்யனையும் தெய்வீகத்தின் ஒருங்கிடங்கு என்று கருதி, தன்னுள் இறைத்தன்மையைப் பார்க்க மறுப்பவன், என்.? "பரமனின் அந்த ஒளி உன்னுள் இருக்கிறது" என்ற யோஜனையையும் மறுப்பவன் அன்றோ குறுகிய மனப்பான்மைக் கொண்டவன். ஸஹிப்புத் தன்மை அற்றவன் யார் ? மாற்றுக் கருத்து கொண்டோர், மாற்றுப் பழக்க வழக்கங்கள் கொண்டவர், மாற்று மதத்தை ஸார்ந்தவர், இவர்களுடன் இணக்கமாக, அமைதியாக வாழ மறுப்பவன்தான் ஸஹிப்புத் தன்மை அற்றவன். அவர்களைத் தன் ஆட்டு-மந்தை மனப்பான்மைக்கு மாற்றி விடத் துடிப்பவன்தான் ஸஹிப்புத் தன்மை அற்றவன். அவ்வாறு மாற்றுவதற்காக வன்முறை, மொஸடி, சதி, ஏமாற்றுதல், என்று எந்த வழியையும் பின்பற்றத் துடிப்பவன்தான் ஸஹிப்புத் தன்மை அற்றவன். கடந்த ஆயிர வர்ஷ ஐரோப்பிய வரலாறு இத்தகையோரை படம் போட்டுக் காட்டுகிறது. ஸ்ரீ லங்காவில் நடந்திடும் போராட்டத்திற்கும் பெளத்த மதத் துறவிகளின் இத்தகைய ஸஹிப்புத் தன்மை அற்ற மனப்பான்மையே பெருமளவில் காரணம். இந்த மந்தைகளில் ஒரு புதிய கூட்டமும் சேர்ந்திருக்கிறது. அது கம்யூனிஸ மார்க்ஸ்வாதிகளின் கூட்டம். இரண்டு நூற்றாண்டுகள் முன்பு, பொருளாதாரம், வரலாறு, ஆட்சி முறை, என்று அனைத்துத் துறைகளைப் பற்றியும் வள-வளவென்று பேசியவரைப் பின்பற்றுபவர்கள் இக்கூட்டத்தினர். அவரை சிந்தனையாளர் என்று போற்றும் இவர்கள், வேறு எவரேனும் சிந்தனைச் செய்தால் அவரை ஸைபீரியா பாலைவனத்திற்கோ சிறைச்சாலைக்கோ அல்லது துப்பாக்கி முனைக்கோ அனுப்புவது இவர்களது மரபு. அவர்தான் இறுதிச் சிந்தனையாளர். இந்த எல்லா மந்தைக்கு கூட்டங்களும் ஹிந்துக்களைப் பார்த்து, மேற்கூறிய அடைமொழிகளைப் பேசுவது திருடி விட்டு ஓடும் திருடன், "திருடன், திருடன், பிடியுங்கள், திருடன்" என்று கத்துவது போலாகும்.
வேதம் இறுதியான கட்டளை ரூபத்தில் உள்ள ஒரு அறிவிப்பு இல்லை. கீதையிலும் ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனுடன் நிகழ்த்திய ஸம்வாதத்தில் கட்டளை எதுவும் இல்லை. கீதையின் இறுதியில், "நீ எனக்கு ப்ரியமானவன் என்பதால் உனக்கு இதை எல்லாம் கூறினேன். இனி உன் விருப்பத்திற்கு ஏற்ப நீ செயல்படு." என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன். கேள்வி கேட்கப்பட முடியாத கட்டளைகள் இங்கு கிடையாது. இதன் காரணமாகவே ஹிந்து தர்மமும் ஹிந்து ஸமுதாயமும் கடந்த ஸில நூற்றாண்டுகளில் வாளேந்தி வந்த இஸ்லாமியக் கூட்டங்களின் வெறித்தனமான தாக்குதல்களையும், வ்யாபாரம் என்னும் போர்வை போர்த்தி வந்து, பாரதத்தின் இயற்கை வளத்தையும் செல்வத்தையும் ஸுரண்டி எடுத்துச் சென்ற ஐரோப்பிய, க்றிஸ்தவ கூட்டங்களின் கொள்ளைகளையும் புத்த மதத்தவர் மற்றும் மார்க்ஸ்வாதம் என்ற சடலத்தை ஏந்தியோரின் வன்முறை நிறைந்த கொடுங்கோல் ஆட்சிகளையும் மீறி இன்றும் தழைத்துச் செழித்தோங்கி நிற்கின்றன. தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள், குறிப்பாக ப்ராஹ்மணர்கள், கடந்த எழுபது, எண்பது வர்ஷங்கள் த்ராவிடக் கூட்டத்தினர் வன்முறையுடன் கூடிய அவமதிப்பு-கேலி-கிண்டல்களையும் மீறி இன்றும் தலை நிமிர்ந்து பெருமதிப்புடன் நிற்கின்றனர். ஹிந்துக்கள் உலகத்தின் எந்த ப்ரதேஶத்திலும் எந்த ஒரு ஸமுதாயத்தினருடனும் ஒத்து, அமைதியாக வாழ முடிவதற்கும் இதுவே காரணம். எந்த ஒரு நதியும் எமக்கு கங்கையே. எனவே புனிதமானது. பூமியின் எந்த ஒரு பகுதியும் எமக்கு பூ-மாதாவே. எனவே புனிதமானது. எமது ஆலயங்கள் மாத்ரம் அல்லாமல் படைப்பின் ஒவ்வொரு துகளும் எமக்கு பரமாத்மாவின் அம்ஶம் என்பதால் புனிதமானவை. ஒவ்வொரு புஸ்தகத்தையும் ஸரஸ்வதியின் ஸ்வரூபமாகக் கருதிடும் எமக்கு அத்தனை புஸ்தகங்களும் புனிதமானவை. விக்ஞானமும் விக்ஞானத்தின் எந்த ஒரு ப்ரகடனமும் பரமனுக்கு எதிரானவை அல்ல. பரமனின் ப்ராப்திக்காக யாம் செய்திடும் முயற்சியில் எம்மை அவனை நோக்கி முன்னேற்றிடும் படிக்கற்களே. ஹிந்துக்களின் பார்வையில் இவை அனைத்தும் வெகு ஸஹஜம். இதற்குரிய அடிப்படைக் காரணம் "பரி-ப்ரஶ்னேன" என்ற பெயரில் எம் முன்னோர்களிடம் இருந்து யாம் பெற்ற பொக்கிஷம். இந்தப் பொக்கிஷத்தினை, கேள்வி கேட்டிடும் இந்த தன்மையை நாம் போற்றிப் பாதுகாப்போம். இதை மறுத்து அழிக்க முயலும் ஶக்திகள் மீது வெற்றி காண்போம்.
pl rearrange the layout. archive is simply not view-able!
ReplyDeleteDone Sir .. I did not know the route to correct the font and background . Now, it is done ...
Delete