ॐ
பஶுவுடன் ஒரு உரையாடல் ...
அகோரம் : என்னம்மா ?? நாள் முழுவதும் என்ன பண்ணின ? சாப்பிட்டாயா ??
லக்ஷ்மீ : என்ன பண்ணுவேன் ? என்னைக் கட்டிப் போட்டிருக்கிறாயே, அந்தக் கம்பத்தைச் சுற்றிச் சுற்றி வந்தேன்.. சாப்பிட்டாயா ? என்ன கேள்வி இது ? நீ கொடுத்தால்தானே சாப்பாடு ?
அ : ஏன் ? நான் கொடுப்பதில்லையா ? வைக்கோல், புண்ணாக்கு, புட்டு, சோளம், அரிஸிக் கஞ்ஜி என்று வேளாவேளைக்குத் தீனி வைப்பதிலாலையை ?? மேலும் கடலை மிட்டாய், தேங்காய் போன்ற விஶேஷ தீனிகள் .. ஏன் ஶோகமாக இருக்கிறாய் ??
அ : உண்மைதான். நான் அன்றே பால் கறக்க வரும் பாலு யாதவிடம் சொன்னதைக் கேட்டாயல்லவா ? மூக்கணாங்கயிறு வேண்டாமே என்று நான் சொன்னவுடன் அவர், "மாடு நம் கட்டுப்பாட்டில் எப்படி இருக்கும் ?" என்று அவர் பதில் சொன்னதையும் கேட்டிருப்பாய் .. வேறு வழியில்லை. கட்டிப்போடாமல் என்ன செய்வது ? அவிழ்த்து விட்டால் நீ எந்தெந்த கதிக்கு ஆளாவாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா ? அன்றைக்கு வாஸல் பக்கம் கட்டிப் போடலாம் என்று அழைத்துச் சென்றேன். சாலையில் ஒவ்வொரு வண்டி போகும்போதும் அரண்டு நடுங்கினாய் ..
ல : ஆம் .. ஆம் .. என்ன ஶப்தம் .. அப்பப்பா ! ராக்ஷஸ ஶப்தம் .. குலை நடுங்க வைத்தது .. என்ன செய்வது !! இங்கு வரும் வரை, நான் க்ராமத்தில், வயல்காட்டில் வாழ்க்கையைக் கழித்திருக்கிறேன் .
அ : நானும் அதையே சொல்கிறேன் .. வெறும் ஶப்தத்திற்கே இப்படி என்றால் ... .. இந்த ராக்ஷஸ ஶப்தத்தை எழுப்பும் ராக்ஷஸ வண்டிகள் நிமிஷத்திற்கு நூறு போகும் சாலைகளில், மனுஷ்யனே தடுமாறும் சாலைகளில் நீ என்ன செய்வாய் ?
ல : ஆம் .. நினைத்தாலே வயிற்றைக் கலக்குகிறது . பார் ! பயத்தில் சாணி போட்டு விட்டேன் ...சாணி என்றவுடன் ஞாபகம் வந்தது .. நீங்கள் எல்லோரும் எங்களுக்குப் பெரும் கஷ்டம் கொடுக்கிறீர்கள் அப்பா ! நீங்கள் வீடு கட்டி முடித்து, க்ருஹ ப்ரவேஶம் என்று நடத்தும் போது, என்னை இழுத்துக் கொண்டு போய் !!.. சுற்றிலும் நீங்கள் போடும் கூச்சல் , வழுக்கும் க்ரானைட், மார்பிள் தரை, .. பயத்தில் வயிறு கலங்கி, சாணம் போட்டால் "மங்கலம் நடந்தது .. நல்ல ஶகுனம் "" என்ற பாராட்டு வேறு .. உங்கள் ஸஹவாஸமே வேண்டாம் அப்பா !! என்னை அவிழ்த்து, காட்டில் விட்டு விடு.. நான் பாட்டிற்கு வேண்டியதைத் தின்று, ஸ்வயமாக வாழ்ந்து கொள்கிறேன் ..
அ : இதோ பாரம்மா ! புரியாமல் பேசுகிறாய் .. காட்டில் வேட்டையாடும் மிருகங்கள் .. முதல் விஷயம் .. காடு எங்கே இருக்கிறது ?? எல்லாம் தான் அழித்தாகி விட்டதே ! நான் பாட்டிற்கு வாழகிறேன் என்கிறாயே .. உனக்கு வனத்துறை பூமி எது, அரஸுக்குச் சொந்தமான புறம்போக்கு எது, தனியொரு வ்யவஸாயியின் பூமி எது என்றெல்லாம் தெரியுமா ? இதெல்லாம் தெரியாமல் நீ பாட்டிற்குச் சுற்றினால் சாட்டையடி, முள் வேலி, மின்ஸாரம் பாயும் வேலி, துப்பாக்கிச்சூடு .. நினைத்தால் எனக்கே பயமாக இருக்கிறது ..
ல : அம்மம்மா ! இவ்வளவு பயங்கரமா ?? ஹும் .. ஹும் .. ((பெருமூச்சு ..))
அ : இன்னம் கேள் .. உன் ஶரீரத்தின் மாமிஷத்தைச் சாப்பிட அலையும் கூட்டம் .. காட்டுப்ராணிகளின் கூட்டம் இல்லை .. மனுஷ்யர்களின் கூட்டம் ..... உன்னைப் பிடித்து, கொடுமையான நரக வேதனைகளைக் கொடுத்து, தோலினுள் நீராவி பாய்ச்சி, தோலை உரித்து, ரக்தத்தை உறிந்தெடுத்து, கழுத்தை அறுத்து, வெட்டி .. விற்கும் வ்யாபாரிகளின் கூட்டம் ... ஒரு நாள் கூட உன்னால் "உன் பாட்டிற்கு" வாழ முடியாது ..
ல : ஶோகத்தில் மௌனமானாள் ... பெருமூச்சு ஶப்தம் மாத்ரம் கேட்டது ..
ல : ஶோகத்தில் மௌனமானாள் ... பெருமூச்சு ஶப்தம் மாத்ரம் கேட்டது ..
அ : நானும் மௌனமாக அவளது கழுத்தைச் சொறிந்து கொடுத்தேன் ..
ல : அப்போ நீ எனக்கு உபகாரம் தான் செய்கிறாய் என்கிறாயா ??
அ : அதில் என்ன ஸந்தேஹம் ? உபகாரம் இல்லை .. ஸம்ரக்ஷணம் செய்கிறேன் .. காப்பாற்று்கிறேன் ... கோவை, மாதாவாகக் கருத வேண்டும் என்று எங்கள் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்களே ...
அ : அதில் என்ன ஸந்தேஹம் ? நிஶ்சயமாக என் மாதாவிற்கு ஸமமாக உன்னைக் கருதுகிறேன் ..
ல : மாதா என்றெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. முன்னொரு காலத்தில் அவ்வாறு இருந்திருக்கலாம். இப்பொழுது அவ்வாறில்லை .. நீ பொய் சொல்கிறாய் ..
அ : ஏன் அவ்வாறு சொல்கிறாய் ? உனக்காக நேரம் கொடுக்கிறேன் உன்னுடன் பேசுகிறேன் .. உனக்காக ஶரீரத்தால் உழைக்கிறேன் உனக்காகப் பணம் செலவழிக்கிறேன் .. உன் பாலை விற்றுக் கிடைக்கும் மாஸ வருமானம் 1,000 - 1,500 ரூபாய்தான் ஆனால், உனக்கு ஆகும் தீவனச் செலவு மாத்ரம் ஐந்து முதல் ஆறாயிரம் வரை ..
ல : பார்த்தாயா .. பார்த்தாயா !!! நானும் இதையே சொல்கிறேன் .. உன் வீட்டுப் பெண் அல்லது உன் அம்மாவிற்கு நீ பணக்கணக்குப் போடுவாயா ?? அது மாத்ரமா ? உனக்கு ஆண் குழந்தைப் பிறந்தால் நீ ஸந்தோஷப் படுகிறாய் .. ஆனால் எனக்கு ??? பெண் குட்டி பிறந்தால் தான் உனக்கு ஸந்தோஷம் ... உங்கள் வீட்டுப் பெண் ப்ரஸவம் ஆகிய பின் வெகு ஶீக்ரம் தாய்ப்பால் ஸுரப்பது நின்று விட வேண்டும் என்று நினைக்கிறாள் .. அதற்காக ஊஸி, மருந்துகள் ஏற்கிறாள் .. ஆனால் நான் ?? எப்பொழுதும் பால் ஸுரந்து கொண்டே இருக்க வேண்டும் .. அதிகம், இன்னம் அதிகம் பால் ஸுரந்திட மருந்துகள் . தீவனங்கள் .. உன் பால் பேராஶைக்காக .. வெறும் புல் தின்னும் எனக்கு ஆட்டுக் கொழுப்பும் மீன் கருவாடும் கலந்த தீவனம் .. விக்ஞான ஆராய்ச்சிகள் செய்து, கர்பமாய் இதுக்கும் பொழுதும் புருஷனுடன் படுக்கலாம் என்றெல்லாம் ப்ரசாரம் செய்கிறீர்கள் நீங்கள் .. .. ஆனால் என்னை காளையுடன் சேர விடாமல் .. ஊஸி மூலம் கர்பம் தரிக்க வைக்கிறாய் .. குட்டி பிறந்தவுடன் பால் அருந்த அதை அநுமதிக்காமல் தடுக்கிறாய் .. என்னிடம் இருந்து பிரிக்கிறாய் .. இதெல்லாம் தான் நீ செய்திடும் ஸம்ரக்ஷணமா ...
அ : சற்று நேரம் நான் வாயடைத்துப் போனேன் .. ம் ம் உன்னுடையக் கேள்விகளுக்கு என்னால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை .. நான் ஏன் உன்னைக் கட்டிப் போட்டிருக்கிறேன், ஏன் பால் கறக்கிறேன், ஏன் கன்றுக்குட்டியை உன்னிடம் இருந்து பிரித்துக் கட்டுகிறேன் .. என்பதெல்லாம் எனக்குப் புரியவில்லை எனபது ஸத்யமே .. .. மனுஷ்ய ஸமுதாயத்தில் பணி புரிந்திடும் பல்வேறு ஸமூஹ, அரஸியல் அமைப்புகளில் எனக்குப் பொறுப்பேதும் இல்லாததாலா,... செய்வதற்கு வேறு வேலை ஏதும் இல்லாமல் நேரம் நிறைய இருப்பதாலா, Selfie எடுத்து, வெளியிட்டு தற்புகழ்ச்சி தேடுவதற்காகவா .. அஹங்கார த்ருப்திக்காகவா ... ஏதோ சாகிற காலத்தில் புண்யம் ஸம்பாதித்துக் கொள்வதற்காகவா .. ஆனால் செய்கிறேன் .. ஒவ்வொருத்தனும் அவனவன் ஸ்வபாவப் படி எதையோ செய்தாக வேண்டும் .. ஶ்வாஸம் ஓடும் வரைச் செய்தாக வேண்டும் ... நானும் செய்கிறேன் .. இதனால் உனக்கு நன்மையா, கேடா என்பது தெரியாது ,.. எனக்கு நன்மையா கேடா என்பதும் தெரியவில்லை .. என் செயலால் உனக்கு ஏற்படும் வலி, வேதனை, கஷ்டங்களுக்கு மன்னிப்புக் கோருவதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை ...என்னை மன்னித்து அருள் புரிந்திடு !!!
बहुत बढ़िया आत्म विचार
ReplyDelete