ॐ
கீதையில் ஸில சொற்றொடர்கள் - 41
न हि ज्ञानेन सदृशं पवित्रम् ... (अध्याय ४ - श्लोकं ३८)
ந ஹி க்ஞானேன ஸத்ருஶம் பவித்ரம் ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 38)
Na Hi Gyaanena Sadrusham Pavithram ... (Chapter 4 - Shloka 38)
அர்தம் : ஞானத்திற்கு ஸமமாக பவித்ரமானது வேறு எதுவும் இல்லை.
பவித்ரமானது எது ? எது அருகில் இருப்போரை, அருகில் வருவோரைப் பவித்ரம் ஆக்கி விடுமோ, தூய்மையானவர் ஆக்கி விடுமோ அது.
ஞானம் ஸ்வயம் பவித்ரமானது. அதைப் பெறுபவரும் பவித்ரம் ஆகி விடுவார். தூய்மையானவர் ஆகி விடுவார். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மனுஷ்ய ஸமுதாயத்தில், பாரதத்தில் வாழ்ந்திடும் ஹிந்து ஸமுதாயம் மாத்ரமே ஞானத்தின் இந்த மஹத்வத்தை உணர்ந்திருக்கிறது. தெளிவாக, ஸந்தேஹமற உணர்ந்திருக்கிறது.
இந்த நாட்டின் பெயர் பாரதம். பா என்றால் ஒளி. ஸூர்யனுக்கு ஒரு பெயர் பாஸ்கரன். பா - கரங்களைக் கொண்டவன், அதாவது ஒளிக்கரங்களைக் கொண்டவன். {Baa (बा) இல்லை. Bhaa. (भा) தமிழின் எழுத்துக் குறை ! உச்சரிப்புக் குறை !} ரத என்றால் திளைத்து இருத்தல். மூழ்கி இருத்தல். ஒளியில் திளைத்து இருக்கும் நாடு பாரத நாடு. ஒளி என்றால் ஞானம். (ஒளி என்றால் light / வெளிச்சம் என்ற நேரடி அர்தம் கொண்டாலும் இது உண்மைதான். உலகத்திலேயே வர்ஷத்தில் பதினோரு மாஸங்கள் ஒரு நாளில் பதினோரு, பன்னிரண்டு மணி நேரம் ஸூர்யன் ஒளிர் விடும் பாக்யம் பெற்ற ஒரே நாடு பாரத நாடுதான்.) ஞானத்தில் லயித்து இருக்கும் நாடு பாரத நாடு. ஞானத் தேடலையே ப்ரதானமாகக் கருதிடும் மக்களைக் கொண்ட நாடு பாரத நாடு. (இவ்வளவு அழகான அர்தம் உள்ள பெயரை மறந்து விட்டு எப்பாடுபட்டேனும் இந்தியா என்ற கொச்சையான பெயரை நாம் உபயோகப் படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டி முயன்று கொண்டிருக்கிறார்கள் ஸெக்யூலர்வாதிகள். நாம் இந்தியா என்ற இந்த அர்தமற்ற பெயரை உச்சரிக்க மறுப்போம். பாரதம் என்றே பெருமிதத்துடன் உச்சரிப்போம்.)
ஞானம் என்றால் உலகியல் ஞானமே என்று வைத்துக் கொள்வோம். உலகியல் ஞானத்தைப் பெறுவதற்கு மிகத் தீவ்ரப்பற்று உள்ளவர் பாரதீயர்கள் என்பதில் ஸந்தேஹம் இல்லை.
1850களில் தென் ஆஃப்ரிகத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக வேலைச் செய்ய, தமிழகம், பிஹார் மாநிலங்களில் இருந்து பல்லாயிரம் நபர்கள் அழைத்துச் செல்லப் பட்டனர். அவர்கள் அனைவரும் பொருளாதார ஸ்தரத்திலும், கல்வி நிலையிலும், ஸமுதாய அந்தஸ்திலும் மிகக் கீழ் மட்டத்தில் இருந்தோர். பெரும்பாலோர் ஹரிஜனங்கள். அங்கு ஒரு கொட்டகையில் நானூறு, ஐந்நூறு பேர் அடைக்கப் பட்டு, நாள் ஒன்றில் பதினாறு, பதினெட்டு மணி நேரம் கடும் உழைப்பு ஸுரண்டப் பட்டு, மிகக் கேவலமான சூழ்நிலையில் வாழ வேண்டிய நிர்பந்தம். எனினும் அவர்களில் கொஞ்ஜம் எழுத்தறிவு பெற்றிருந்த சிலர், ராத்ரீ 11 மணிக்கு மேல் அங்கிருந்த குழந்தைகளுக்கு மணலில் எழுதி, எழுதப் படிக்கக் கற்று கொடுத்தனராம். ஒரு சில தேவார, திருவாசகப் பாடல்களை, துலஸீ ராமாயண தோஹாக்களை மனப்பாடமாக அறிந்தவர்கள் அவற்றைக் குழந்தைகளுக்கும் ஸ்திரீக்களுக்கும் கற்றுக் கொடுத்தனராம். அதனால்தான் அவர்கள் இன்று 170 வர்ஷங்கள் கழித்தும் இப்பாடல்களை உயிருடன் போஷித்து வைத்துள்ளனர். இப்பாடல்கள் அளித்த ஆன்ம பலத்தில் விபரீதமான சூழலிலும் ஹிந்துக்களாகத் தொடர்கின்றனர். உலகாயத ரீதியிலும் அங்கு அதிகம் படித்த ஸமுதாயமாக நெஞ்ஜு நிமிர்ந்து வாழ்கின்றனர். ஞான தாஹம் !!
ஸுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குப்பங்களில் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ட்யூஷன் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தோம். அபரிமிதமான பண வரவு இருப்பதால் அங்கு கல்வியில் நாட்டம் குறைவாக இருப்பதை அறிந்து, இவ்வகுப்புக்களை அருகில் இருந்த ஹரிஜன காலனிகளுக்கு மாற்றி விட்டோம். இப்பகுதிகளிலும் வறுமை, மங்கிய விளக்குகள், குடி, குடி போதையில் நடந்திடும் ப்ரஸங்கங்கள், சண்டை சச்சரவுகள் எல்லாம் நிறைந்த மோசமான சூழ்நிலைதான். ஆனால், நாம் நடத்திய 30 ஊர்களிலும் மிகையான கல்வி தாஹம் கொண்ட ஒன்றிரண்டு மாணவர்களை, 'அம்பேட்கர்' களைக் காண முடிந்தது. 80% ஶத விஹிதம் மார்க் எடுப்போருக்கு ரூபாய் 2,000 பரிஸு என்று அறிவித்திருந்தோம். பத்து மாணவர்கள் வரலாம் என்ற அநுமானத்தில் ரூபாய் இருபதாயிரம் ஏற்பாடு செய்திருந்த எங்களுக்கு அதிர்ச்சி, ஸுகமான அதிர்ச்சி. மொத்தம் 32 மாணவர்கள் பரிஸினை வாங்கத் தகுதி பெற்றனர். ஞான தாஹம் !!
ஐம்பது அறுபது வருஷங்கள் முன்னர் பல குடும்பங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள். கிடைக்கும் ஸம்பளமோ குறைவு. வயிற்றைக் கட்டி வாழ்ந்தனர். குழந்தைகள் பழையதைச் சாப்பிட்டு வளர்ந்தனர். பலர் கோவிலில் ப்ரஸாதமாக வழங்கப்பட்ட உருண்டைச் சோற்றை சாப்பிவிட்டு வளர்ந்தனர். ஆனால், லவலேஶமும் நாட்டம் குறைந்திடாமல் படித்தனர். வாழ்க்கையில் உன்னதமான நிலைகளை அடைந்தனர். ஞான தாஹம் !!
போக பூமியான அமெரிகாவில், பற்பல கவர்ச்சிகளுக்கு மத்தியில் கல்வியில் அதிக ஈடுபாடு உள்ள மாணவர்கள் பாரதத்தில் இருந்து குடி பெயர்ந்த குடும்பங்களை சார்ந்தவர்கள்.
ஞான தாஹத்தை வற்றிப் போகச் செய்யும் ஆற்றல் போக நாட்டத்திற்கு மாத்திரமே உண்டு. விஷய ஸுகத்தின் மீதுள்ள பற்று ஒன்றுதான் ஞான தாஹத்தை அழித்திடும்.
ஞானம் என்பது உலகாயத ஞானம் இல்லை. நம்முள் இருளை நீக்கி ஒளி ஊட்டிடும் ஞானமே, நம்முள் நிறைந்திருக்கும் அழுக்குகளை அழித்து, தூய்மை ஏற்படுத்தவல்ல ஞானமே உண்மையான ஞானம். லௌகீக ஞானத்தைப் பெற்றிடும் தாஹம் தீவ்ரமாக இருந்தால், நாளடைவில் அதுவே உண்மையான ஞானத்தைப் பெற்றிடும் தாஹமாக மாறி விடும். எனவே, உலகாயத ஞானத்தைப் பெற்றிடும் தீவ்ர ஆர்வம் இருந்தாலும் அது வரவேற்கத் தக்கதே.

Comments
Post a Comment