ॐ
கீதையில் ஸில சொற்றொடர்கள் - 42
श्रद्धावाँल्लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ... (अध्याय ४ - श्लोक ३९)
ஶ்ரத்தாவா(ன்) லபதே க்ஞானம் தத்பரஹ ஸம்யதேந்த்ரியஹ ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 39)
Shraddhaavaa(n) Labhate Gyaanam Thathparah Samyatendriyah ... (Chapter 4 - Shlokam 39)
அர்தம் : ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவனும் புலன்களைக் கட்டுப்படுத்தியவனும் ஆன அந்த ஶ்ரத்தை உள்ளவனுக்கு க்ஞானம் ப்ராப்தி ஆகும்..
மஹாபாரத காலத்தில் ஏகலவ்யன் முதல் ஸமீப காலத்து டாக்டர் அம்பேத்கர் வரை இந்த வாக்யத்தினை ப்ரகடனப் படுத்துகின்றனர். ஶ்ரத்தை இருந்தால் க்ஞானம் கிடைத்திடும். க்ஞானம் கிடைப்பதற்கான மார்கம் கிடைத்திடும். இந்த ஶப்தாவலியில்,இந்தச் சொற்றொடரில் அதிகமான ஒரு விஷயம் சொல்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன். ஈடுபாட்டுடன் கூடிய முயற்சி இருக்க வேண்டும். இந்திரியங்கள் வஶமாகி இருக்க வேண்டும்.
ஒரே விக்ஞானியிடம் பல மாணவர்கள் பயில்கின்றனர் ... ஆனால், எவரோ ஒருவர்தான் அப்துல் கலாம் ஆகிறார் .. ஒரே ஸங்கீத வித்வானிடம் பல ஶிஷ்யர்கள் பயில்கின்றனர். எவரோ ஒருவர்தான் MS ஆகிறார் . ஒரே டாக்டர் ஹெட்கேவாருடன் பல இளைஞர்கள் பழகினர். அனைவரும் குருஜி கோல்வால்கர் ஆகவில்லை . ஒரே ஸங்கத்தில் அநேகர் பயிற்சி பெற்றனர் . அனைவரும் தீனதயாள உபாத்யாய ஆகவில்லை . இவர்களிடம் என்ன விஶேஷம் ? தீவ்ரமான ஈடுபாட்டுடன் தீவ்ரமான முயற்சி மற்ற பலரும் செய்திருப்பர் என்பதில் ஸந்தேஹம் இல்லை , இந்த்ரியங்களை வஶமாக்குதல் என்பதில் பின்னடைந்திருக்கலாம். வஶமான இந்த்ரியங்கள் என்பதிலும் ஒரு ஸிலர் வெற்றி அடைந்திருக்கலாம் . அவர்களாலும் ஶிகரத்தைத் தொட முடியவில்லை . மற்ற அனைத்தும் இருந்தும் ஶ்ரத்தையில் குறை இருந்தால் வெற்றி, க்ஞானம், முழுமை வஞ்ஜிக்கப்படும் . ஶ்ரத்தை முழுமையாக இருந்தால் மற்ற விஷயங்களில் குறை இருந்தாலும் அவை நிவர்தி செய்யப்பட்டு, ஶிகரத்தில் கொண்டு சேர்த்து விடும் .
ஶ்ரத்தை இயல்பாக ஸ்வயமாக ஒருவனிடம் இருந்திடுமா அல்லது முயற்சி செய்து ஶ்ரத்தையை வளர்த்துக் கொள்ள முடியுமா ? இது பட்டிமன்றத்திற்கான விஷயம் . ரெண்டிலும் பகுதி உண்மை உள்ளது . ஶ்ரத்தை இயல்பாக ஸிலரிடம் காணப்படுகிறது, ஜன்மம் எடுக்கும் போதே உடன் வருகிறது . இதுதான் நம்மைச் சுற்றி உள்ள உலகம் நமக்கு உணர்த்துகிறது . ஆனால், அது முந்தைய பல ஜன்மங்களில் அந்த ஜீவன் செய்த முயற்சியின் விளைவே அது என்பது நம் குறுகிய அறிவால் பார்க்க முடியாத உண்மை .

Comments
Post a Comment