ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 48
நவ த்வாரே புரே தேஹீ ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 13)
Nawadwaare Pure Dehee ... (Chapter 5 - Shlokam 13)
அர்தம் : ஒன்பது வாஸல்கள் கொண்ட நகரத்தில் தேஹீ ...
ஹிந்து தர்ம க்ரந்தங்களில் காணப்படும் அழகானதொரு உவமைகளில் இதுவும் ஒன்று . நம் ஶரீரமே இங்கு ஒன்பது வாசல்கள் கொண்ட நகரமாக வர்ணிக்கப் படுகிறது . அதற்கு ஒன்பது த்வாரங்கள் உண்டு . இங்கு அவையே வாசல்கள் எனப்படுகின்றன . இந்த வாசல்கள் வெளியே , உலகத்தை நோக்கித் திறந்திடுபவை . "ஸ்வ" அல்லது ஜீவன் இவ்வாசல்கள் வழியே வெளியே ஸம்ஸாரத்தில் ஸஞ்சரிக்கின்றது . அத்வாரத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டு , அத்வாரமாகவே தன்னைக் கருதி , ஸம்ஸார விஷயங்களுடன் உறவாடி , போகங்களை அநுபவிக்கிறது . நவ த்வாரங்கள் கொண்ட இந்த நகரம் தேஹம் என்றும் அறியப்படுகிறது .
ஸ்வ அல்லது ஜீவனே இங்கு தேஹீ என்று அழைக்கப்பட்டிருக்கிறது . ஒன்பது த்வாரங்கள் கொண்ட நகரத்தில் , தேஹத்தில் வஸிப்பவராக வர்ணிக்கப் பட்டிருக்கிறது . தேஹம் - தேஹீ என்ற இந்த வார்தை ப்ரயோகம் "தேஹம் வேறு . அதில் வாஸம் செய்திடும் தேஹீ வேறு என்ற கருத்தை வெகு ஸஹஜமாக ப்ரகடனப் படுத்துகிறது . அது நிவாஸம் , இது அங்கு வஸித்திடுவது . அது ஜடம் . இது ஜீவன் . ஒரு ஜட அமைப்பில் வஸிப்பவன் தன்னை அத்துடன் பிணைத்துக் கொள்வதும் , தன்னையே அதுவாகக் கருதி ஐக்யப் படுத்திக் கொள்வதும் இயற்கை . அவ்வாறு தன்னை ஜடத்துடன் பிணைத்துக் கொண்டவன் அந்த ஜட அமைப்பில் விகாரம் , தேய்மானம் , அழிவு ஏற்படும் போது தானே அழிந்து விட்டதாகக் கருதி வருந்துவதும் இயற்கை . இது மணல் , ஸிமெண்ட் , செங்கலால் கட்டப்படும் அமைப்பிற்கும் பொருந்தும் . தன்னை ஜட அமைப்பில் இருந்து விலக்கிக் கொள்ளப் பயில்பவன் , தான் வேறு , தான் வஸித்திடும் ஜட அமைப்பு வேறு என்று அறிந்திருப்பவன் அமைப்பில் அழிவைக் கண்டும் அமைதியை இழப்பதில்லை . தடுமாறுவதில்லை . ஜட அமைப்பில் , தன் வீட்டில் காணப்படும் விகாரங்களை , அழிவை சரி செய்ய அவன் முற்படலாம் . அமைப்பு நல்ல நிலையில் இருந்திட முயற்சிகள் எடுக்கலாம் . ஆனால் , அவனது இம்முயற்சிகள் அமைப்பில் இருந்து விலகி நின்று , நான் வேறு இந்த ஜடம் வேறு , நான் இது இல்லை, நான் இதில் வஸிப்பவன் மாத்ரமே , என்ற தெளிவான புரிதலுடன் செய்யப்படுபவை .
Comments
Post a Comment