ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 49
विद्या विनय सम्पन्ने ब्राह्मणे। . (अध्याय ५ - श्लोक १८)
வித்யா விநய ஸம்பன்னே ப்ராஹ்மணே ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 18)
Vidyaa Vinaya Sampanne Braahmane .. (Chapter 5 - Shlokam 18)
அர்தம் : வித்யையும் விநயமும் நிறைந்த ப்ராஹ்மணன் ...
ரெண்டு வார்தைகளின் ப்ரயோகம் உள்ளது . வித்யை மற்றும் விநயம் . வித்யை என்றால் அறிந்து கொள்ள வேண்டியவை . நம் உலகம் , உலகத்தைத் தாண்டி உள்ள படைப்பு , உலகத்தில் உள்ள பல்வேறு வகை ஜீவன் ஜந்துக்கள் , ஸ்தாவரங்கள் , அவற்றின் ஶரீரங்கள் , மனஸ் , குணங்கள் , பல்வேறு செயல்கள் , அவற்றைச் செய்திடும் முறைகள் , என்று எதை எல்லாம் அறிந்து கொள்ள முடியுமோ அவை எல்லாம் வித்யை . வேதம் என்பதே மூல வார்தை . வேதமே அறிந்து கொள்ள வேண்டியது . அறிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும் வேதத்தில் உள்ளது . ஒரு ஸமயத்தில் வேதம் (என்ற அந்த புஸ்தகம்) மாத்ரமே என்றும் இருந்தது .
அறிந்து கொண்டால் ஞானம் பிறக்கும் என்பது நிஶ்சயம் இல்லை . ஞானம் லபிப்பதற்குத் தடையாக இருப்பது விறைத்து நிற்கும் அந்த நான் . அஹங்காரம் ஞான மார்கத்தில் உள்ள கடைஸி தடை . நம்மைத் தடுத்து நிறுத்திடும் வாஸல் . மூடி இருக்கும் கதவு . அந்த வாஸலைத் தாண்டி அநஹங்கார நிலையை அடைதல் ஞான ப்ராப்திக்கு , பரமனின் ப்ராப்திக்கு அதி அவஶ்யம் . அநஹங்காரம் அல்லது அஹங்காரம் அற்ற நிலை உள் நிலை . விநயம் அந்நிலையின் வெளிப்பாடு . அநஹங்காரம் தெரியாதது , நம் கண்களுக்குப் புலப்படாதது . புலப்படுவது விநயம் . ஶரீரம் மற்றும் வாக் மூலம் வெளிப்படும் . விறைப்பு இல்லாத ஶரீரம் , மென்மையான வாக் இவை விநயத்தின் வெளிப்பாடு . அறிந்தவன் நான் , விஶேஷமானவன் நான் என்ற உணர்வு அஹங்காரம் என்றால் அறிந்தவன் என்பதையே மறந்திருப்பது விநயம் . இவ்விரண்டையும் ஒருங்கே பெற்ற ப்ராஹ்மணன் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் இந்த ஶப்தாவலீயில் ....

Comments
Post a Comment