ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 51
न प्रहृष्येत प्रियम् प्राप्य नो द्विजेत प्राप्य च अप्रियम् | (अध्याय ५ - श्लोक २०)
ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய ச அப்ரியம் ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 20)
Na Prahrushyet Priyam Praapya Nodwijet Praapya cha Apriyam .. (Chapter 5 - Shlokam 20)
ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய ச அப்ரியம் ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 20)
Na Prahrushyet Priyam Praapya Nodwijet Praapya cha Apriyam .. (Chapter 5 - Shlokam 20)
அர்தம் : ப்ரியமானது கிடைத்திடும் போது மகிழ்ச்சியில் துள்ளாமலும் அப்ரியமானது கிடைக்கும் போது து:கத்தில் மூழ்காமலும் இருப்பது ...
கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் கருத்து இது . மனஸின் ஸமநிலை ... ஸமத்வம் .. இதுதான் கீதையின் ப்ரதான கருத்து ..
ப்ரியமானது கிடைத்தால் ஸுகம் அடைவது .. மகிழ்ச்சி அடைவது மனுஷ்யனின் ஸாதாரண இயல்புதானே .. அதே போல அப்ரியமானது கிடைக்கும் போது து:கம் கொள்வதும் இயல்புதானே .. ஆனால் இந்த மகிழ்ச்சியும் து:கமும் நிரந்தரமானவையா ..? ப்ரியமானது கிடைத்திடும் அந்த க்ஷணத்தில் ஏற்படும் மகிழ்ச்சி ஒரு ஸில க்ஷணங்களில் , ஒரு ஸில மணி நேரங்களில் .. அதிக பக்ஷம் ஒரு ஸில தினங்களில் வற்றி விடுகிறது அல்லவா ? அதே போல அப்ரியமானது கிடைத்திடும் அந்த க்ஷணத்தில் ஏற்படும் து:கமும் மறைந்து விடுகிறது ..
க்ஷண நேரத்தில் தோன்றி மறையும் போலியானதில் ... மாயமானதில் மூழ்குவது அறியாமை அல்லவா ? குழந்தைத்தனம் அல்லவா ? அறியாமையில் இருந்து வெளியே வாருங்கள் ... குழந்தைத்தனத்தில் இருந்து வளர்ந்து பக்வம் அடையுங்கள் .. என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. நீர்த்திவலைகளில் மூழ்க முயற்சிக்காமல் நிரந்தரமானதில் மூழ்குதல் சிறப்பு என்கிறார் ..
Comments
Post a Comment