ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 52
ஸர்வ பூத ஹிதே ரதாஹ ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 25)
Sarva Bhoota Hite Rataah ... (Chapter 5 - Shloka 25)
அர்தம் : எல்லா ஜீவன்களின் நலன் நாடி , அதிலே திளைத்திருப்பவன் ..
ஸர்வ பூத ஹிதே ரதாஹ .. எத்தகை உயர்ந்த லக்ஷ்யம் !! ஸர்வ பூத ஹிதம் .. அனைத்து உயிர்களின் நலன் மாத்ரம் விழைதல் ... ரதாஹ .. அதிலேயே திளைத்து இருத்தல் ... மூழ்கி இருத்தல் .. ஒரு ஸமுதாயத்தின் கண் முன் வைக்கப்படும் லக்ஷ்யம் எந்த அளவிற்கு உயர்ந்ததாக , மஹோன்னதமாக இருக்கிறதோ , அந்த அளவிற்கு அந்த ஸமுதாயம் உயர்ந்ததாக , உன்னதமாக விளங்கிடும் . நம் பாக்யத்தில் நமக்கு வாய்த்திருக்கும் ஶ்ரேஷ்டமான ர்ஷீ பரம்பரை நம் வாழ்க்கை லக்ஷ்யமாக இத்தகை உயர்ந்த பாவனைகளை நம்முன் வைத்துச் சென்றுள்ளனர் . அதனால்தான் இன்று மேற்கத்திய தேஶங்களில் உதித்து நம் தேஶத்தை நாற்புறமும் சூழ்ந்திருக்கும் ஸுக போகம் என்ற புயலுக்கு மத்தியிலும் ஸர்வ ஸாமான்ய ஹிந்து இத்தகை உயர்ந்த வாழ்க்கை லக்ஷ்யத்திற்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்திட முயல்வதைக் காண முடிகிறது .
முழு ஸமுதாயமும் இந்த பாவனையில் ப்ரேரணை பெற்று வாழ்கிறதா ? ஸமுதாயத்தின் ஒவ்வொரு நபரும் அனைத்து உயிர்களின் நலன் விழையும் வாழ்க்கையை வாழ்கிறானா ? எந்த ஒரு ஸமுதாயத்திலும் இது நடைமுறையில் ஸாத்யமா ? .இல்லை இல்லை . ஆனால் ஒரு விஷயம் மாத்ரம் ஸத்யமே . முழு ஸமுதாயத்தின் வாழ்க்கை திஶை மாத்ரம் இதுதான் . ஒவ்வொரு நபரும் இந்த திஶையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் . அவனவன் தத்தம் குணம் , ஸ்வபாவம் , சூழ்நிலை , வாழ்க்கை ஸ்தரம் ஆகியவற்றைப் பொருத்து வெவ்வேறு நிலையில் இந்த பாவனையைத் தன் வாழ்வில் செயல் படுத்துகிறான் அல்லது செயல்படுத்த முயல்கிறான் . ஆயிரங்களில் ஒருவன் இந்த பாவனையை தன்னுள் பூர்ணமாக க்ரஹித்துக் கொள்ள முயல்கிறான் . தன் ஒவ்வொரு ஶ்வாஸத்திலும் , பேசும் ஒவ்வொரு ஶப்தத்திலும் , செய்திடும் ஒவ்வொரு கர்மத்திலும் இந்த பாவனையை வெளிப்படுத்த முயல்கிறான். விழித்த நிலையிலும் ஸ்வப்ன நிலையிலும் இதே பாவனை தன்னுள் நிலைத்திட முயல்கிறான் . அத்தகைய மனுஷ்யன் மிக உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து விட்டுச் செல்கிறான் . அதனால்தான் பாரத தேஶத்தில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பாரத பூ ப்ரதேஶத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எண்ணற்ற ஸாது மஹாத்மாக்கள் ஜனித்துள்ளனர் . பல தலைமுறைகளுக்கு ப்ரேரணை அளிக்கவல்ல வாழ்க்கை வாழ்ந்து சென்றுள்ளனர் .
இன்று நம் தேஶத்தின் ப்ரதமர் ஸ்ரீ நரேந்த்ர மோதி ஸ்ரீ பஸவப்பா ஜயந்தி வைபவத்தில் உரை ஆற்றிடும் போது , முஸ்லீம் ஸமுதாயத்திற்கு ஒரு அறைகூவல் விடுத்தார் . "ஶக்தி வாய்ந்த மஹாபுருஷர்களைப் படைத்திடுங்கள் .. அந்த மஹாபுருஷர்கள் நம் தேஶத்து முஸ்லிம்கள் மாத்ரம் அல்லாது உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் ஸமுதாயமும் .. மனுஷ்யத்வத்தை .நோக்கித் திரும்பிட ப்ரேரணை அளித்திடட்டும் .. " என்றார் . சென்ற 1,400 வர்ஷங்களில் ஒரு ஸாது மஹாத்மா கூட உதித்திடாத ஒரு ஸமுதாயத்திடம் வைக்கப்படும் எதிர்ப்பார்ப்பு .. ஸ்ரீ மோதியின் நல்ல மனஸைக் காட்டுகிறது .. அவ்வளவே ..(நம் தேஶத்தில் ஸ்ரீ கபீர் தாஸ் , ஸ்ரீ ரஸ கான் , ஸ்ரீ ஷீர்டி ஸாயீபாபா போன்ற மஹாத்மாக்கள் உதித்துள்ளனரே என்று நீங்கள் கேட்கலாம் .. இத்தகையோர் இங்கு தோன்றியது ஹிந்து ஸம்ஸ்காரங்களாலே அன்றி இஸ்லாம் அளித்த போதனையால் அல்ல ... ) இஸ்லாம் ஒரு ஸாமான்ய முஸ்லீம் முன் வாழ்க்கை லக்ஷ்யமாக எதை வைக்கிறது ? மற்றவரை முஸல்மான் ஆக மாற்றுங்கள் ... விக்ரஹ வழிபாட்டை அழித்திடுங்கள் .. அந்த திஶையில் ஆலயங்களைத் தகர்த்திடுங்கள் .. காஃபிரின் உயிர் , சொத்து , பெண் இவற்றை அவரிடம் இருந்து பறித்திடுங்கள் ... ரம்ஜான் மாஸத்தில் தானம் செய்யவும் சொல்லி இருக்கிறது .. ஜன்னத்தில் கிடைக்கப் போகும் 72 அறை .. 72 நித்ய குமரி அழகிகள் என்ற ஆஶை காட்டி .. இத்தகைய ஸமுதாயம் எங்ஙனம் ஸாது மஹாத்மாக்களை உருவாக்கிடும் ?
மற்றொரு பக்கம் ஸுகபோகத்தை உத்தேஶமாகக் கொண்டு , இயற்கை வளங்களை ஸுரண்டி அழித்தல் , பலஹீன மநுஷ்யர்களையும் அடிமைப் படுத்தல் என்ற வகையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மேற்கத்திய தேஶங்களும் உயர்ந்த ஸாது மஹாத்மாக்களை உருவாக்குவதில் தோல்வியே அடைந்துள்ளன .
மனுஷ்ய வாழ்க்கையில் குணம் , ஆற்றல் , நிபுணத்வம் , என்று அனைத்துமே கோபுர வடிவில் அமைந்திடும் . கீழே விஸ்தாரம் .. மேலே உச்சியில் குறுகல் . கீழே விஸ்தாரம் அதிகம் ஆக ஆக கோபுரத்தின் உயரம் அதிகமாகும் . அதே போல , ஸாமான்ய ஸமுதாயத்தில் எவ்வளவு அதிக ஜனங்கள் ஒரு திஶையில் முயற்சி செய்கின்றனரோ அந்த அளவிற்கு அவ்விஷயத்தில் உயரத்தை , உன்னத நிலையை ஸமுதாயம் அடைந்திடும் . அதே விஹிதத்தில் அந்த மஹோந்நத நிலையை அடைந்தவர்களின் எண்ணிக்கையும் இருந்திடும் . இந்த வகையில் நம் ர்ஷீக்களின் பங்கு மஹத்வம் வாய்ந்தது . வேதம் , உபநிஷதம் , ஸ்ரீ ராமாயணம் , மஹாபாரதம் , ஸ்ரீ கீதை போன்ற புஸ்தகங்கள் மூலம் மனுஷ்ய வாழ்க்கை லக்ஷ்யத்தின் விளக்கம் ... அந்த லக்ஷ்யத்திற்கு அநுகூலமான குடும்ப வாழ்க்கை மற்றும் ஸமுதாய வாழ்க்கையின் அமைப்பு .. தன் வாழ்க்கையில் இந்த மாஹோன்னத லக்ஷ்யத்தைக் கடைப்பிடிக்க முயன்ற அநேகாநேக ஸாதுக்களின் பரம்பரை .. உதாஹரணமான அவர்களது வாழ்க்கையினால் மேலும் த்ருடம் அடைந்த லக்ஷ்யம் . கழிந்த ஆயிரம் ஆயிரம் வர்ஷங்களாக பாரத தேஶத்தில் இதே சக்ரம் ஸுழந்றுள்ளது ..
Comments
Post a Comment