ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 58
समं काय शिरोग्रीवम ... (अध्याय ६ - श्लोक १३)
ஸமம் காய ஶிரோக்ரீவம் ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 13)
Samam Kaaya ShiroGreevam ... (Chapter 6 - Shloka 13)
அர்தம் : ஶரீரம் (முதுகெலும்பு) , கழுத்து மற்றும் தலை மூன்றையும் நேர்க்கோட்டில் நிறுத்துதல் ...
இது ஶரீரத்தின் இயல்பான ஒரு நிலை அல்லவா ? ஒரு யோஜனையாக இதை முன் வைப்பது அவஶ்யமா ? மநுஷ்யன் உலக விஷயங்களில் மூழ்கும் போது , தன் இயல்பில் இருந்து , இயற்கையில் இருந்து தூர விலகி விடுகிறான் . அவனுடைய உண்மை இயல்பை , ஞாபகப் படுத்த வேண்டிய அவஶ்யம் உள்ளது என்பதில் ஸந்தேஹம் இல்லை .
ஸ்ரீ க்ருஷ்ணன் வழங்கும் இந்த யோஜனை ஶரீரத்தின் ஒரு நிலை . குறிப்பாக , த்யானம் செய்திடும் போது தேஹத்தை நிறுத்த வேண்டிய நிலை . ஆனால் , மற்ற ஸாதாரண ஸமயங்களிலும் இந்நிலை பயன் உள்ளது . நிமிர்ந்த முதுகெலும்பு , கழுத்து மற்றும் ஶிரத்துடன் நேர்க்கோட்டில் .
முதலில் நாம் இந்நிலை மாறுபட்டு இருந்தால் என்ன விளைவுகள் என்பதைப் பார்ப்போம் . அதாவது , கூன் விழுந்த முதுகு , தளர்ந்து தொங்கும் தோள்கள் , கழுத்தினுள் புதைந்த தலை , தேஹத்தின் இத்தகைய நிலை என்ன விளைவிக்கும் ? உடலின் மேல் பகுதி உடலின் கீழ்ப் பகுதியைத் தன் பாரத்தால் அழுத்திடும் . ஜீர்ண அமைப்பை பாதித்திடும் . முதுகெலும்பின் அடிப்பகுதியில் வலி ஏற்படுத்தும் . தொப்பையை அதிகரிக்கும் . கழுத்து ஶரீரத்தின் மிக முக்யப் பகுதி . ஶரீரத்தை மூளையுடன் பாலம் . அழுத்தப்படும் கழுத்து , நேர் இல்லாத கழுத்து மூளைக்கு அநுப்பப் படும் ரக்த ஓட்டத்தினை பாதிக்கும் . மார்புப் பகுதி அழுத்தப் பட்டு , நுரை ஈரலில் மூச்சு குறைவாக இழுக்கப் படும் . ஸூக்ஷ்ம தளத்தில் பார்த்தால் கூன் விழுந்த முதுகு , தளர்ந்து தொங்கும் தோள்கள் , கழுத்தினுள் புதைந்த தலை , தேஹத்தின் இந்நிலை பயம் , நம்பிக்கை இன்மை , மற்றும் தாழ்வு மனப்பான்மையை ப்ரகடனப் படுத்திடும் .

நேர்க் கொண்ட பார்வை என்றான் பாரதி . அடுத்தவரின் கண்ணை நேராக நோக்கும் பார்வை தன்னம்பிக்கையைத் தூண்டும் . பேசப்படும் வார்த்தைகளுக்கு மதிப்பைப் பெற்றுத் தந்திடும் . நேற்கொண்ட பார்வை என்பதைத் தனியாக விலக்க முடியாது . நிமிர்ந்த ஶரீரத்தின் இயல்பான அங்கமே நேர்க்கொண்ட பார்வை .
நிமிர்ந்த முதுகெலும்பு , விரிந்த மார்பு , திரண்ட தோள்கள் , உயர்ந்த கழுத்து , உயர்த்திப் பிடித்த தலை , இத்தகைய தேஹ நிலை உடல் ஆரோக்யத்திற்கு உகந்தது . மனவளத்திற்கு மருந்து . ஆன்மீக முயற்சிக்கும் உபயோகமானது . த்யானத்தில் குண்டலினி ஶக்தியை மேல் நோக்கி எழும்பிடச் செய்யும் நிலை இது . அதாவது , குண்டலினி ஶக்தியை முதுகெலும்பின் அடியில் மூலாதாரத்தில் இருந்து உச்சியில் ஸஹஸ்ராரம் நோக்கி எழுந்திடச் செய்யும் .

நான்கு கால் ப்ராணிகளுக்கு இது இயற்கையாகவே அமைந்திருக்கும் நிலை . ரெண்டு கால் மநுஷ்யனுக்கு இது பயிற்சியாக அளிக்கப்பட வேண்டி உள்ளது .
Comments
Post a Comment