ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 59
युक्ताहार , युक्त विहार , युक्त कर्म चेष्टा , युक्त स्वप्न , युक्त बोध ... (अध्याय ६ - श्लोक १७)
யுக்த ஆஹார , யுக்த விஹார் , யுக்த கர்ம சேஷ்டா , யுக்த ஸ்வப்ன , யுக்த போத ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 17)
Yukta Aahaar , Yukta Vihaar , Yukta Karma Cheshtaa , Yukta Swapna , Yukta Bodha ... (Chapter 6 - Sholka 17)
அர்தம் : உகந்த உணவு , உகந்த ப்ரயாணம் (சுற்றல்) , உகந்த முயற்சிகள் , உகந்த உறக்கம் மற்றும் விழிப்பு ...
"உகந்த போஜனம் , உகந்த ப்ரயாணம் , உகந்த உழைப்பு , உகந்த உறக்கம் மற்றும் விழிப்பு .. யோகம் ஸித்தம் ஆகிட இவை அவஶ்யமானவை" என்பதே ஸ்ரீ க்ருஷ்ணனின் அறிவிப்பு .
உகந்தது எது ? ஒருவருக்கு உகந்தது என்பது மற்றவருக்கு உகாதது . அதனால் தான் ஸ்ரீ க்ருஷ்ணன் உகந்தவை எவை என்று பட்டியல் இடவில்லை . உகந்த என்று கூறுவதுடன் நிறுத்திக் கொண்டான் . உனக்குப் பொருந்தக்க கூடியது , உனக்கு ஸுலபமானது , உனக்கு நலன் பயக்கக் கூடியது உனக்கு உகந்தது . ஹிந்து தர்மத்தின் அழகு இதுதான் . இங்கு கட்டளை இல்லை . ஃபத்வா இல்லை . யோஜனைகள் மாத்ரமே உண்டு . இவ்வகையில் நமக்கு சிந்தனை செய்திட , நிர்ணயம் செய்திட , தேர்ந்தெடுத்திட வாய்ப்பு உண்டு . கட்டளைகள் இடும் மதங்களில் சிந்தனைக்கும் நிர்ணயத்திற்கும் தேர்விற்கும் வாய்ப்பு கிடையாது . அவ்வாறு செய்தால் மத விரோதி என்று அறிவிக்கப்பட்டு கொடுமைக்கு , ஏன் கொலைக்கும் ஆளாவான் .
உகந்த போஜனம் ... உகந்த வகை - ஶைவம் , அஶைவம் , ஸமைக்கப் பட்டது , பச்சை உணவு , மஸாலா நிறைந்தது , மிதமான ருசி கொண்டது என்று பல வகை ... உகந்த அளவு .. உகந்த நேரம் - ஒரு வேளை , ரெண்டு வேளை , பல வேளைகள் , .. எனவே , உகந்த என்பது ஒவ்வொரு மநுஷ்யனுக்கும் மாறுபடும் . அவரவரின் வயஸு , உடல் நிலை , தொழில் அல்லது வேலை , குடும்பப் பின்னணி , ஶீதோஷ்ண சூழ்நிலை , ஸுலபமாகக் கிடைத்தல் , ஸமூஹ ஸம்ப்ரதாய வழக்கங்கள் ... போன்ற பல விஷயங்கள் ஒருவனின் போஜனத்தை நிர்ணயிக்கின்றன . வேதத்திலும் ஶாஸ்த்ரங்களிலும் போஜனத்தைப் பற்றிய பொதுவான சில குறிப்புக்கள் உள்ளன . போஜனத்தை வீணடிக்காதே . அன்னத்தைத் தூற்றாதே . பரிஹாஸம் செய்யாதே . அன்னம் ப்ரஹ்மம் . போஜனத்தைப் பகிர்ந்து புஜிக்க வேண்டும் . பகவானுக்காக என்ற ஶ்ரத்தையுடன் போஜனம் ஸமைக்கப் பட வேண்டும் . அன்புடனும் பங்க்தி வஞ்ஜனை இல்லாமலும் பரிமாறப்பட்ட வேண்டும் . போஜனத்தை ஸ்வீகரிப்பவர் இறை ப்ரஸாதமாகக் கருதி ஏற்க வேண்டும் . அமர்ந்து அமைதியாகவும் த்ருப்தியாகவும் உட்கொள்ள வேண்டும் .
பசி என்னும் ஶரீர ரோகத்திற்கு போஜனம் மருந்தாகக் கருதப் படுகிறது . போஜனம் ஆறு ருசிகளும் கூடியதாக இருக்க வேண்டும் . அந்தந்த ப்ரதேஶங்களில் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்து , அந்தந்த ஶீதோஷ்ண சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் தயாரிக்கப் பட வேண்டும் . எவை , எவ்வாறு என்ற விவரங்களை அவரவர் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் .
நாம் ஸ்வய நினைவுடன் தான் உண்கிறோமா ? உணவை ருசித்து ஆனந்தமாக உண்கிறோமா ? ஸ்வய நினைவுடனும் ஆனந்தமாகவும் உண்பது நமக்கு உகந்த உணவை அறிவதில் உதவிடும் .
நம் பாரம்பர்யம் உணவை வ்யாபார விஷயம் ஆக்குவதைத் தவிர்க்கச் சொல்கிறது . ஆனால் , இன்று போஜனமே மிக அதிக லாபம் தரும் வ்யாபாரம் ஆக இருக்கிறது . நம் பாரம்பரியத்தில் வ்யாபாரம் கூட தர்ம விதிகளுக்கு உட்பட்டது . ஆனால் , இன்று உணவு ஸம்பந்தமான வ்யாபாரத்தில் மிக அதிக அதர்மம் தழைக்கிறது . GM விதைகள் , விதைகளின் மீது காப்புரிமை , பூச்சி மருந்துகள் , உரம் மற்றும் ஊட்ட ஸத்து என்ற பெயரில் விஷ மருந்துகள் , கலப்படம் , மாஸு , வ்யாபாரத்தில் பதுக்கல் , கடத்தல் போன்ற மோசடி , குறைந்த எடை , வ்யாபார மய போஜன மையங்கள் (ஹோடல்கள்) , தூய்மை அற்ற வழிமுறைகள் , அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்படும் உணவுகளில் நிறங்கள் , ருசி ஊக்கிகள் , ஆக்ஸின்ட்ஸ் , ப்ரிஸர்வேடிவ் , என்ற பெயர்களில் மிகையான ரஸாயன சேர்க்கைகள் , அதிக அளவில் வீணாதல் , இறுதியாக நம் பாக்கெட்டில் இருந்து மருத்துவ மையங்களுக்கும் மருந்து கம்பெனிகளுக்கும் செல்வத்தின் கடத்தல் .
விஹாரம் என்பது ஸுற்றுதல் . ப்ரயாணம் என்றும் அர்தம் எடுக்கலாம் . மிகையான நடை நம் ஶரீரத்தின் மீது பெரும் பாதிப்பு ஏற்படுத்திடாது . ஆனால் வண்டியில் மிகையான , வேகமான ப்ரயாணம் ஏற்படுத்தும் பாதிப்பும் மிகையானதே .
உழைப்பு . உகந்த அளவில் உழைப்பு , உகந்த வகையான உழைப்பு . திட்டம் இடுதல் , செயல்பாட்டையும் விளைவையும் ஆய்வு செய்தல் மற்றும் அநுபவங்களில் இருந்து கற்றல் ஆகியவை மூலம் உகந்த உழைப்பை அறியலாம் .
உகந்த உறக்கம் .. உகந்த விழிப்பு .. எவ்வளவு நேர உறக்கம் , எந்த ஸமயத்தில் உறக்கம் , எத்தகைய உறக்கம் , இவை கூட்டாக உகந்த உறக்கம் எனலாம் . உழைப்பும் உறக்கமும் நேர் விஹிதத்தில் மாறக் கூடியவை . ஆனால் , உழைப்பை விட கவலை அற்ற , அமைதியான மனஸே உறக்கத்திற்கு ப்ரதான அவஶ்யகம் .
ஒரு கேள்வி எழுகிறது . இவை ஆன்மீக முயற்சியில் ஸாதனமாவது எவ்வாறு ? இவை எங்ஙனம் நம்மை பரமனுக்கு அருகே அழைத்துச் செல்லும் ? இவை ஸ்வய நினைவை , அதற்கு மேல் ஸ்வய ப்ரக்ஞாவை வளர்த்து விடுகின்றன (ஸ்வய உணர்வு) . நம் விருப்பு வெறுப்புக்களின் மேல் வெற்றி காண இவை உதவுகின்றன . 'மனஸிற்குப் பிடித்தது' என்பதை விட 'உகந்தது' என்பதற்கு அதிக மஹத்வம் கொடுக்கும் வகையில் நம்மை மாற்றுகின்றன . நம் இந்த்ரியங்களை வஶப் படுத்தவும் உள்-குரலை கேட்கக் கூடிய கூரான "காதுகளை" உருவாக்கவும் பயன் படுகின்றன .இறுதியாக , அறியாததை நோக்கிய எந்த ப்ரயாணமும் அறிந்ததில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது விதி .

Comments
Post a Comment