ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 60
यथा दीपो निवातस्थो ... (अध्याय ६ - श्लोक १९)
யதா தீபோ நிவாதஸ்தோ ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 19)
Yathaa Deepo Nivaatastho ... (Chapter 6 - Shloka 19)
அர்தம் : காற்றில்லாத இடத்தில் தீப ஜ்யோதி எவ்வாறு இருக்கிறதோ ...
காற்றில் உள்ள ப்ராண வாயு தீபம் எரிவதற்கு அவஶ்யமானதே . ஆனால் காற்று வீசத் தொடங்கினால் , தீபத்தின் ஜ்யோதி தடுமாற ஆரம்பிக்கிறது . காற்றின் வீச்சு வேகமானால் ஜ்யோதி அணைந்தும் விடுகிறது . காற்று வீசாத அறையில் தீப ஜ்யோதி அமைதியாக , ஸ்திரமாக , இருக்கிறது . ப்ரகாஶம் மாத்ரம் இருக்கிறது . படபடப்பு இல்லாததால் , ஜ்யோதி இருந்தும் இல்லாதது போல் ஆகிறது .
இது ஒரு உவமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது . கீதையில் இத்தகைய அழகான பல உவமைகள் உள்ளன . (ஸந்த் ஞாநேஶ்வர் மராடியில் ஞாநேஶ்வரீ என்ற பெயரில் எழுதிய கீதையில் அதிக எண்ணிக்கையில் இத்தகைய அழகிய உவமைகள் உள்ளன .) இந்த உவமை மனஸிற்காக உபயோகப் பட்டுள்ளது . நம் மனஸ் ஸ்திரமாகவும் ஶாந்தமாகவும் இருக்க வேண்டும் (அந்த ஜ்யோதியைப் போல ..) சஞ்சலத் தன்மையே மனஸின் ஸாமாந்ய ஸ்வபாவம் . ஒரு விஷயத்தில் இருப்பதில்லை . குரங்கு போல தாவிக் கொண்டே இருக்கிறது . ஸம்ஸ்க்ருதத்தில் மனோ வேகம் என்றொரு பதம் மனஸின் இத்தன்மையை வெளிப்படுத்துகிறது . ஒளியின் வேகத்தை விட அதிகமானது மனோவேகம் . ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ப்ரயாணிக்க , ஒளிக்கு சில க்ஷணங்கள் ஆகும் . ஆனால் , மனஸ் அதே க்ஷணத்தில் ஒரு விஷயத்தில் இருந்து மற்றொரு விஷயத்திற்கு , தான் இருக்கும் இடத்தில் இருந்து உலகத்தின் மறு கோடிக்கு , மற்றொரு க்ரஹத்திற்கு , ஏன் ! அண்ட சராசரத்தையும் தாண்டிச் சென்று விடும் . உலகில் மற்ற அனைத்து கார்யங்களும் ஸுலபமானவை . மனஸைக் கட்டுப்படுத்தல் , மனஸை ஸ்திரப் படுத்தலே மிகக் கடினமான கார்யம் . மநுஷ்யனுக்குக் கடும் ஸவால் விதிக்கும் கார்யம் .
ஆன்மீக ஸாதனையின் விளைவு அமைதியான , ஸ்திர மனஸே . தீப ஜ்யோதிக்கு காற்றுத் தேவைப் படுவதைப் போல , நமக்கு ஸம்ஸார விஷயங்களுடனான ஸம்பந்தம் தவிர்க்க முடியாதது . இந்த ஸம்பந்தத்தைத் துண்டித்து விட்டு இஹ லோகத்தில் வாழ முடியாது . மனோ நாஶம் ஆன்மீக ஸாதனைகளின் லக்ஷ்யமாகக் கருதப் படுகிறது . மனோ நாஶம் என்பது மனஸைக் கொல்வதில்லை . உலக விஷயங்களைக் கண்டு கலங்காத கல் மனஸ் கொண்டவன் இல்லை ஒரு யோகி . அவனும் கசியும் உள்ளம் கொண்டவன் . காருண்யம் கொண்டவன் . ஒரு காஃபியின் நறுமணத்தை நுகரக் கூடியதுதான் அவனது நாஸி . ஒரு பழத்தின் ருசியில் திளைத்து ஆனந்தம் அடையக் கூடியதுதான் அவனது நாக்கும் . இயற்கையின் ஒரு அத்புதத்தைக் கண்டு ஆஹா ! என்று ப்ரமிக்கக் கூடியதுதான் அவனது மனஸும் . (புயலில் சிக்கி அலைக்கழிக்கப் படும் நம்மை விட , ஒரு யோகியின் இந்த்ரியங்கள் அதிகக் கூர்மையானவை என்பது தான் உண்மை .) ஆனால் , இந்த்ரிய - விஷய ஸம்பந்தத்தின் அநுபவங்கள் அவனுள்ளே தாறுமாறாக ஓடி , தடுமாற்றம் ஏற்படுத்த அவன் அநுமதிப்பதில்லை . ஒரு சில அநுபவங்கள் மீண்டும் மீண்டும் கிடைத்திட இச்சைக் கொள்வதும் மற்ற சில அநுபவங்களைத் தவிர்த்திட ப்ரார்தனை செய்வதும் அவனிடம் இல்லை . கிடைத்த படி அநுபவங்களை ஏற்றுக் கொள்கிறான் . அந்நிலையில் இருந்தும் இல்லாமல் போகிறது , அந்த ஜ்யோதியைப் போல .
இச்சை , த்வேஷம் (இவை ரெண்டும் வெவ்வேறல்ல . ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் . ஒன்றில்லாமல் மற்றது இல்லை .) இவற்றைத் தவிர பயமும் மனஸின் ஸ்திரத் தன்மையை , ஶாந்தியை பாதிக்க வல்லது . எனவேதான் , அபயம் (அ) பயம் அற்ற தன்மை தெய்வத் தன்மையாகப் போற்றப் படுகிறது (அத்யாயம் 16 ) . கவலை பயத்தின் மறு அவதாரம் . ஒரு ஸம்ஸ்க்ருத ஸுபாஷிதம் இவ்வாறு சொல்கிறது . "சிதை சிந்தை இவ்விரண்டில் சிறு வித்யாசமே . ஒன்று பிணத்தை எரிக்கிறது . மற்றது மனஸை" . சிந்தை அல்லது கவலையும் மனஸின் அமைதியை பெரும் அளவு பாதித்திடும் .
விருப்பு வெறுப்பு இல்லாத , பயம் இல்லாத , கவலை இல்லாத மனஸ் கொண்ட ஒருவன் , இவ்வுலகத்தில் பல்வேறு கர்மங்களில் ஈடுபட்டு , சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்ந்திடுவான் , உள்ளே ஸ்திரத்தன்மையையும் ஶாந்தியையும் இழந்திடாமல் , ஆடாமல் அசையாமல் இருந்தும் ஒளி வீசிடும் அந்த ஜ்யோதியைப் போல .

Comments
Post a Comment