ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 74
ज्ञानी विशिष्यते । (अध्याय ७ - श्लोक १७) ज्ञानी तु आत्मैव । (अध्याय ७ - श्लोक १८)
க்ஞானி விஶிஷ்யதே ... க்ஞானி து ஆத்மைவ ... (அத்யாயம் 7 - ஶ்லோகம் 17 , 18)
Gyaani Vishishyate ... (Chapter 7 - Shloka 17) ... Gyaani Tu Aatmaiva ... (Chapter 7 - Shloka 18)
அர்தம் : க்ஞானி விஶேஷமானவன் ... க்ஞானி எனது ஸ்வரூபமே ...
க்ஞானி விஶேஷமானவன் ... ஸ்வயத்திற்கு எதுவும் தேவை இல்லை . அவனது சிந்தனை , செயல் எல்லாம் ஸ்ரீ பரமனுக்காக , பரமனின் படைப்பிற்காக . எது கிடைத்தாலும் , எவ்வாறு கிடைத்தாலும் அதை ஸ்ரீ பரமனின் ப்ரஸாதமாக ஏற்று வாழ்ந்து விடுபவன் .
தேஶம் முழுவதும் நாஸ்திகம் பரவி உள்ளதை அறிந்து , அதற்குக் காரணமான பௌத்த மதத்தின் ப்ரபாவத்தைத் தணித்து , வைதீக மதத்தை மீண்டும் தழைக்கச் செய்ய வேண்டும் என்று ஸங்கல்பம் செய்த ஒன்பது வயஸு பாலகன் ஶங்கரன் ... ஹிந்து தர்மத்தில் ஸந்ந்யாஸம் வாழ்க்கையின் இறுதியில் தான் என்பதை மாற்றி , "இன்று காலத்தின் அவஶ்யம் . இது ஆபத் தர்மம்" என்று கூறி ஸந்ந்யாஸம் ஏற்க ஸங்கல்பம் செய்த பாலகன் ஶங்கரன் ... அதற்கு தாயாரின் அனுமதி கிடைத்திட 'முதலை நாடகம்' நடத்திய காலடி பாலகன் , ஸந்ந்யாஸம் ஏற்று , முப்பத்து ரெண்டு வர்ஷங்கள் மாத்ரம் வாழ்ந்த ஸ்ரீ ஆத்ய ஶங்கரன் , பாரத தேஶம் முழுவதும் மீண்டும் மீண்டும் ப்ரதக்ஷிணம் வந்து , பௌத்த மதத்தை நிர்மூலமாக்கி , ஜனங்கள் அனைவரையும் வைதீக மதத்திற்கு மாற்றி , புத்த விஹாரங்கள் அனைத்தையும் ஆலயங்களாக மாற்றி , வேத உபநிஷதங்கள் , பகவத் கீதை , ப்ரஹ்ம ஸூத்ரம் , ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் போன்ற அநேக கரந்தங்களுக்கு பாஷ்யம் எழுதி , தெய்வ ஸ்வரூபங்கள் மீது பஞ்சகம் , அஷ்டகம் எழுதி , எதிர்க்காலத்தில் ஹிந்து தர்மம் தழைத்து விளங்க வேண்டும் என்பதற்காக தேஶத்தின் நான்கு திஶைகளிலும் மடங்களை ஸ்தாபித்து , ஸ்ரீ காஞ்சியில் வந்து உயிர் நீத்த யுக புருஷன் ஸ்ரீமத் ஶங்கரன் ...
யவன ராஜா மாபெரும் ஸேனை எடுத்து தேஶத்தைத் தாக்க வரும் நேரத்தில் , தம் கடமையைச் செய்திடாமல் போகத்தில் மூழ்கி இருந்த நந்த மஹாராஜாவை எதிர்த்து , சந்த்ரகுப்தனின் தலைமையில் அநேக ராஜகுமாரர்களை இணைத்து , பயிற்சி அளித்து , மகத ராஜ்ய ஸிஹ்மாஸனத்திற்கு சந்த்ரகுப்தனை உரியவனாக்கி , யவன ஸேனையைத் தோற்கடித்து , நம் தேஶத்தின் பொற்காலம் என்று வர்ணிக்கப் பட்ட குப்த ஸாம்ராஜ்யத்திற்கு வித்திட்ட சாணக்யன் ...
"என்னுடையது எது ? எல்லாம் உன்னுடையது" என்று வாழ்ந்த பாலகன் நானக் , ஜனங்களை வாள் முனையில் முஸ்லிமாக மதம் மாற்றிட முயலும் முகலாய ராஜ்யத்தை எதிர்த்து நின்று தன்னை நிவேதனம் ஆக்கிய ஸ்ரீ குரு தேக் பஹதூர் , தேஶத்தின் எல்லை ப்ரதேஶங்களில் வீர ஸமுதாயம் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காக முனைந்த ஸ்ரீ குரு கோவிந்த ஸிஹ்மன் ...
பாரத தேஶத்தின் மத்யத்தில் முகலாய ராஜ்யம் செய்து வரும் அராஜகத்தைக் கண்டு மனஸ் வருந்தி , "தர்ம ராஜ்யம் ஸ்தாபனம் ஆக வேண்டும் , ஆலயங்கள் பாதுகாக்கப் பட வேண்டும் , ஜனங்கள் பாதுகாப்பாக , நிம்மதியாக வாழ வேண்டும்" என்று ஸங்கல்பம் செய்த எட்டு வயஸு பாலகன் , 'ஏனடா மெளனமாக அமர்ந்திருக்கிறாய் ?' என்று கேட்டால் "சிந்தா கரிதோ விஶ்வாசி ... உலகத்தைப் பற்றி சிந்தனை செய்கிறேன்" என்று பதில் அளித்து வந்த சிறுவன் , பெற்றோர் நிஶ்சயம் செய்த விவாஹத்தில் தாலி கட்டும் நேரத்தில் மண்டபத்தில் இருந்து வெளியேறி , வனம் புகுந்து , தபஸ் இயற்றி , ஸ்ரீ ராமதாஸனாக , ஸமர்த ராமதாஸனாக மாறி , க்ராமந்தோறும் ஹநுமான் ஆலயங்கள் நிறுவி , ஊர் இளைஞர்களை உடற்பயிற்சி செய்ய வைத்து , சத்ரபதி ஸ்ரீ ஶிவாஜி மஹாராஜாவின் தலைமையில் ஹிந்து ஸாம்ராஜ்யம் ஸ்தாபனம் ஆவதற்கு அடித்தளம் அமைத்த ஸ்ரீ ஸமர்த ராமதாஸன் ... ஸம காலத்தில் தோன்றிய ஸ்ரீ நாமதேவர் , ஸந்த துகாராம் , ஸ்ரீ ஞானேஶ்வர் , கபீர் தாஸ் போன்ற அநேகானேக ஸாதுக்கள் ...
தென் பாரதத்தில் முகலாய ராஜ்யமும் அராஜக அதர்ம இஸ்லாமும் வேர் விடாமல் தடுத்து அரணாக நின்ற விஜயநகர ஸாம்ராஜ்யத்திற்கு வித்திட்ட ஸ்ரீ வித்யாரண்யர் ...
பக்தி தழைத்திட , தர்மம் ஓங்கிட , ஜனங்கள் தூய வாழ்க்கை வாழ்ந்திட காரணமான ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் ...
பதினான்கு வயஸில் ஞானம் பெற்று , திருவண்ணாமலை குஹையில் வாழ்ந்த கௌபீனத் துறவி ஸ்ரீ ரமண மஹர்ஷீ ... வழிபடும் காளி விக்ரஹத்தை ஜகன்மாதாவாகக் கண்டு , தனக்கு விவாஹம் செய்து வைக்கப் பட்ட சிறுமி ஶாரதாவை ஜகன்மாதாவின் ஸ்வரூபமாகக் கண்டு வாழ்ந்த யுக அவதாரம் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸ ...
சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஸ்ரீ ராம தீர்த , ஸ்ரீ தயானந்த , ஸ்ரீ ஷீர்டி பாபா , ஸ்ரீ காஞ்சி பரமாசார்ய , ஸ்ரீ Dr ஹெட்கேவார் , ஸ்ரீ குருஜி கோல்வால்கர் , ஸ்ரீ ராம ஸுக தாஸ் , ஸ்வாமி விவேகானந்த , போன்ற அநேகானேக ஸாதுக்கள் ...
பல்லாயிர வர்ஷங்களாக நம் தேஶத்தின் அனைத்து ப்ரதேஶங்களிலும் தோன்றி வாழ்ந்த லக்ஷோப லக்ஷ ஸாதுக்கள் , இன்றும் க்ராமந்தோறும் அமைதியாக , தூய வாழ்க்கை வாழ்ந்து , ஞான வாழ்க்கை வாழ்ந்து , ஹிந்துக்கள் தர்ம வாழ்க்கை வாழ்ந்திட ஸத்ப்ரேரணை அளித்து வரும் பல்லாயிர அநாமதேய ஸாது புருஷர்கள் , ஞானி பக்தர்கள் ...
அவன் மேல் பூர்ண ஶ்ரத்தையுடன் , அவன் மேல் ஆழ்ந்த அன்பு வைத்து , தன் மனக்குறைகளை , தன் ஶரீரக் கஷ்டங்களை , தன் கோரிக்கைகளை அவனிடம் எடுத்துச் செல்லாமல் , அவனது ஸ்ருஷ்டியை போஷித்திடவே வாழ்ந்து மறைந்திடும் ஸாதுக்கள் நமக்கு விஶேஷமானவர்கள் . "எனக்கும் விஶேஷமானவர்கள் !" என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் . அதற்கும் மேலே , "இத்தகைய ஞானிகள் என் ஸ்வரூபமே !" என்கிறான் .

ஸ்ரீ பரமாத்மாவின் ஸ்வரூபமான இத்தகைய ஸாதுக்கள் நடமாடிய புண்ய பூமி பாரதத்தில் ஜனித்தது நம் பாக்யம் . இத்தகைய ஞானிகளின் வாழ்க்கையை படித்து அறிபவர்கள் , கேட்டு அறிபவர்கள் பாக்யஶாலிகள் . ஞானிகளின் ஸத்ஸங்கம் , ஞான ஸம்வாதம் , ஞான ஶ்ரவணம் , ஞானத் தேடல் (முமுக்ஷு) , வாழ்க்கையில் பெரும் பாக்யம் .
Comments
Post a Comment