ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 75
கீதையில் சில சொற்றொடர்கள் - 75
उदाराः सर्व एवैते । (अध्याय ७ - श्लोक १८)
உதாராஹ ஸர்வ ஏவைதே ... (அத்யாயம் 7 - ஶ்லோகம் 18 )
Udaaraah Sarva Evaihi ... (Chapter 7 - Shloka 18)
அர்தம் : நான்கு வகையினரும் (நான்கு வகை பக்தர்களும்) உயர்ந்தவர்களே ...
ஸ்ரீ க்ருஷ்ணன் க்ஞானி பக்தனை 'விஶேஷமானவன்' என்று ஶ்லோகம் 17'ல் சொல்கிறான் . மேலும் , 'க்ஞானி எனக்கு ப்ரியமானவன்' என்கிறான் . ஶிகரம் வைத்தாற்போல் , "நானே அவன் ... எனது ஸ்வரூபமே அவன்" என்கிறான் 18'ம் ஶ்லோகத்தில் .
மற்ற மூன்று வகை பக்தர்களைப் பற்றி ஸ்ரீ க்ருஷ்ணன் என்ன சொல்கிறான் ? அதே ஶ்லோகம் 18'ல் , "எனது நான்கு வகை பக்தர்களும் உதாராஹ் அல்லது உயர்ந்தவர்கள் !" என்கிறான் . நமக்கு இது புதிராகத் தோன்றலாம் . க்ஞானி பக்தனை இவ்வளவு உயர்வாக போற்றிய பிறகு , மற்ற வகையினரையும் உயர்ந்தவர்கள் என்று கூறுவது ஏன் ? இந்தக் கேள்வியை கீதை சர்சையில் எழுப்பினார் ஸ்ரீ மோஹன ரங்கன் என்ற ஸ்ரீ ரங்க நிவாஸீ .
ஸ்ரீ க்ருஷ்ணன் கூற்றில் குதர்கம் அல்லது முரண்பாடு இருக்க முடியாது . நமக்கு அவ்வாறு தோன்றினால் நமது புரிதலின் குறையாக இருக்கலாமே அன்றி அவனது கூற்றில் அல்ல .
ஹிந்துக்களில் மிகப்பெரும்பாலோர் ஸ்ரீ க்ருஷ்ணன் குறிப்பிட்ட முதல் மூன்று வகைகளில் , இல்லை ரெண்டு வகைகளில் பொருந்தக் கூடியவர்கள் , அதாவது ஆர்த (குறைகளைக் கூறிப் புலம்புபவன்) மற்றும் அர்தார்தி (பொருட்கள் , வஸதிகள் , அநுகூலங்கள் வேண்டுபவன்) . (பொருந்துகிறாற்போல தோன்றுகிறது .)
அழுது புலம்புபவன் ... மநுஷ்ய வாழ்க்கையில் துயரங்களுக்கும் கஷ்டங்களுக்கும் பஞ்ஜம் இல்லை . தெய்வ ஸந்நிதிகளில் தம் ஶரீரக் கஷ்டங்களை , மன து:கங்களைக் கூறி அழுபவர்கள் பலரை நம்மை ஸுற்றிக் காண்கிறோம் . ஆயின் , இவர்கள் தெய்வத்துடன் தம் புலம்பலை நிறுத்திக் கொள்வதில்லை . எதிரில் எவர் வந்தாலும் , ரெண்டு நிமிஷம் காது கொடுக்கத் தயாராக இருந்தால் , இவர்களது புலம்பல் தொடங்கி விடும் . மறு பேச்சு இல்லாமல் இவர்களது புலம்பலைக் கேட்போரில் கடவுளும் ஒருவர் . அவரும் தன் குறைகளைக் கூறி , இவர்களது புலம்பலைத் தடுத்திடாதவர் என்பதால் அவரிடம் புலம்பல் . ஆர்த வகை பக்தனுக்கும் இவர்களுக்கும் பெரும் வித்யாஸம் உண்டு . ஸ்ரீ பரமாத்மன் மீது பரிபூர்ண ஶ்ரத்தை கொண்டவன் ஆர்த பக்தன் .பரமனுக்கு ஸமர்பணமானவன் இவன் . ஒரு குழந்தைக்குத் தாய் எப்படியோ , அப்படியே இவனுக்கு ஸ்ரீ பரமாத்மன் . குழந்தை தாயிடம் தன் குறைகளைக் கூறி அழுதிடும் . தாயிடம் மாத்ரம் . அந்நேரத்தில் அந்யன் ஒருவன் வந்தால் , கண்களைத் துடைத்துக் கொண்டு , "ப்ரஶ்னையா ? எனக்கா ? ஒரு ப்ரஶ்னையும் இல்லையே !" என்பது போல சிரித்திடும் . அதே போல , ஆர்த வகை பக்தனும் . இவனுக்கு "உலகக் காதுகளில்" ஆர்வம் இல்லை . மிக ஸூக்ஷ்மமான , மிகச் சிறந்த இறைவனின் காது மாத்ரமே அவனுடைய ஶ்ரத்தைக்குப் பாத்ரமானது . தன் குறைகள் தீர்ந்தனவா என்பதிலும் இவனுக்கு ஆர்வம் இல்லை . "அவனிடம் சொல்லி விட்டேன் . அவன் பார்த்துக் கொள்வான் " என்ற பூர்ண த்ருப்தியுடன் , ஆனந்தமாக இவன் ஆலயத்தில் இருந்து திரும்புவான் .
அதே போல , அர்தார்தி வகை பக்தனும் . நம்மில் பெரும்பாலோர் கோரிக்கைப் பட்டியலுடன் ஆலயத்திற்குச் செல்வர் . இவர்களை பக்தர்கள் என்றோ , ஸந்நிதியில் இவர்களது பேச்சினை ப்ரார்தனை என்றோ சொல்ல முடியாது . இவர்களுக்கு இறைவன் ஒரு ஏஜண்ட் . தாம் கோரிடும் பொருட்களை அனுப்பி வைக்கும் ஒரு ஏஜண்ட் . கோரும் மற்ற வஸதிகளைச் செய்து வைக்கும் ஒரு ஸர்விஸ் ப்ரொவைடர் (Service Provider) . ஆனால் , ஒரே ஏஜெண்ட் இல்லை . பல ஏஜண்ட்களில் ஒருவன் . ஶக்தி வாய்ந்த ஏஜண்ட் . இவர்கள் அரஸியல்வாதிகளிடம் , அரஸாங்க அமைப்புகளிலும் முட்டி மோதுவர் . சட்டத்திற்குப் புறம்பான வேறு முயற்சிகளும் செய்து பார்ப்பர் . "இறைவன் ஶக்தி வாய்ந்தவன் . நாம் நாடுபவை நமக்குக் கிடைத்திட உதவிடுவான்" என்று நினைப்பதால் அவனிடம் செல்கின்றனர் . மேலும் , "அவனை ஸந்தோஷப் படுத்தவில்லை என்றால் நமக்குக் கிடைக்காமல் தடுத்து விடுவான் " என்று பயம் கொள்வதாலும் அவனிடம் செல்கின்றனர் . அர்தார்தி வகை பக்தன் முற்றிலும் மாறுபட்டவன் . ஸ்ரீ பரமாத்மன் மேல் , அவன் மேல் மாத்ரம் , இவனது ஶ்ரத்தை . தன் கோரிக்கைகளுக்காக இவன் லௌகீக முயற்சிகளில் ஈடுபடுவதில்லை . உலக ஶக்திகள் மீது இவனுக்கு நம்பிக்கை இல்லை . பரமன் தான் இவனுக்கு ஶக்தி . ஆர்த வகை பக்தனைப் போல , இவனுக்கும் கோரிக்கைகள் நிறைவேறினவா என்பதில் கருத்து இல்லை . ஒரு குழந்தைக்கு தந்தை எவ்வாறோ , அவ்வாறே இவனுக்கு இறைவன் . தந்தையிடம் கோரிக்கை வைக்கும் குழந்தை , அடுத்த அகத்தில் உள்ள பணக்காரனையோ , பெரும் ஶக்தி வாய்ந்தவர் போல தோற்றம் அளிக்கும் பிறரையோ நாடுவதில்லை . கோரிக்கைப் பட்டியலுடன் பகவானிடம் பேரம் பேசும் ஏனையோர் , தம் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் , ஆலயத்திற்குச் செல்வதை நிறுத்தி விடுவர் அல்லது இறை வடிவங்களை உடைத்துத் தூக்கி எறிந்து விடுவர் அல்லது வேறு 'இறைவனிடம்' சென்று விடுவர் .
வாக்கு வாதங்கள் செய்திடும் புத்திஶாலிகளும் சிலர் உண்டு . ஆனால் அவர்கள் ஜிக்ஞாஸு வகை பக்தர்கள் இல்லை . தம் அஹங்கார த்ருப்திக்காகவோ , அல்ப மநுஷ்யர்களின் பாராட்டைப் பெறுவதற்காகவோ , பட்டிமன்றத்தில் ஜயிப்பதற்காகவோ , கல்லூரியில் பட்டம் வாங்குவதற்காகவோ இறைவனைப் பற்றி ஆராய்வரே அன்றி அவனை அறிவதற்காக அல்ல . ஜிக்ஞாஸு பக்தன் அவ்வாறில்லை . அவன் மேல் பரம ஶ்ரத்தையுடன் , அவனை அறிந்திடும் ஆர்வத்தில் ஆராய்கிறான் , கேள்விகள் கேட்கிறான் . வேறு எதற்காகவும் அல்ல .
அதனால்தான் ஸ்ரீ க்ருஷ்ணன் தம் பக்தர்களை , நால்வகை பக்தர்களையும் உதாராஹ் - மிக உயர்ந்தவர்கள் என்கிறான் . ஸுக்ருதினஹ - தூய்மையானவர்கள் என்கிறான் . எனது பக்தன் என்று அவன் குறிப்பிடுவது , 'ஆலயங்களுக்கு வருவோரையும் , பக்தி என்ற பெயரில் வெற்று ஷடங்குகள் செய்வோரையும் அல்ல . பின்னர் கீதையின் பன்னிரெண்டாம் அத்யாயத்தில் பக்தனையும் பக்தியையும் விவரிக்கும் போது , ஆலயம் , தீர்த யாத்ரை , நதி ஸ்நானம் , ப்ரதக்ஷிணம் , நைவேத்யம் , மாலை உருட்டுதல் , பஜனை , வ்ரதம் ஸஹஸ்ரநாமம் போன்ற வார்தைகளை ஒரு முறையும் உச்சரிக்கவில்லை ஸ்ரீ க்ருஷ்ணன் .

Comments
Post a Comment