ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 76
वासुदेवः सर्वम् । (अध्याय ७ - श्लोक १९)
வாஸுதேவஹ ஸர்வம் ... (அத்யாயம் 7 - ஶ்லோகம் 19)
Vaasudevah Sarvam ... (Chapter 7 - Shloka 19)
அர்தம் : அனைத்தும் ஸ்ரீ வாஸுதேவனே ...
இதில் மூன்று விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் .
ஒன்று ... அனைத்தும் ஸ்ரீ வாஸுதேவன் ... படைப்பில் உள்ள அனைத்தும் .. அணுவில் இருந்து அண்டம் வரை ... அனைத்து ஜீவன்களிலும் ... ஒவ்வொரு துகளிலும் .. ஸ்ரீ வாஸுதேவன் ..
அவ்வாறெனில் , மோஸமானவை , கொடூரமானவை , அருவருப்பானவை , கோரமானவை , அழகற்றவை , என்று நமக்குத் தோன்றக் கூடியவை ? அவையும் ஸ்ரீ வாஸுதேவனே ... அரபு நாட்டில் தோன்றிய க்றிஸ்தவ , இஸ்லாமிய மதங்களில் ஶைதான் அல்லது Devil என்ற ஒன்று இருப்பதாகக் கருதப்படுகிறது ... அது ஸ்ரீ பரமனுக்கு ஸமமான ஶக்தியும் ஆற்றலும் கொண்டது . மோஸமான , கொடூரமான , அருவருப்பான , கோரமான , அழித்திடும் கார்யங்கள் அனைத்தும் ஶைதானுடையப் பொறுப்பில் நடப்பவை . ஶைதானின் ஸாம்ராஜ்யத்தில் ஸ்ரீ பரமனுடைய ஶக்தி ஶூன்யம் ஆகி விடும் . நம் ஹிந்து தர்மம் 'அவன் ஒருவனே' என்கிறது . அவன்தான் ஸர்வ ஶக்தியும் வாய்ந்தவன் . அவனை மீறி எந்த ஶக்தியும் கிடையாது . அண்ட சராசரம் முழுவதும் அவனது ஆதிக்யமே .
ரெண்டு ... படைப்பில் உள்ள அனைத்தும் அழிகின்றனவே ? அனைத்தும் அவனே என்றால் அவனும் அழியக்கூடியவனா ? படைப்பு அவனில் இருந்து வெளிப்பட்டது . படைப்பில் உள்ள அனைத்தும் இயங்குவதும் அவனாலே . அழிவதும் அவனாலே . அழிந்து லயமாவது , அடங்குவது அவனுள்ளே . படைப்பிற்கு முன்னரும் அவன் இருக்கிறான் . படைப்பில் உள்ள ஒவ்வொன்றிலும் சைதந்யமாக அவன் இருக்கிறான் . அனைத்தும் அழிந்த பிறகும் அவன் இருக்கிறான் . இருப்பது (ஸத்) அவன் மாத்ரமே . படைப்பு இருப்பதாகத் தோன்றுவதும் மறைவதும் அவனது மாயா ஶக்தியினால் . அவனன்றி வேறொன்றும் இல்லை .
மூன்று ... அனைத்தும் ஸ்ரீ வாஸுதேவனே ... என்று சொல்பவன் வாஸுதேவன் என்று அறியப்படும் ஸ்ரீ க்ருஷ்ணன் . அவனது இவ்வார்தைகள் , க்றிஸ்தவ மதத்தில் , "Jesus is the only God" என்று சொல்லப் பட்டது போலவோ ... இஸ்லாத்தில் , "அல்லாஹ் ஒருவனே இறைவன்" என்று சொல்லப் பட்டது போலவோ த்வனிக்கிறதே ! தேவகி - வஸுதேவனுக்குப் பிறந்தவனான , யஶோதா - நந்தனால் வளர்க்கப் பட்ட , புல்லாங்குழல் ஏந்திய ... ஸுதர்ஶன சக்ரம் ஏந்திய ... கம்ஸன் - சாணூரன் ஆகியோரை வதம் செய்த ... குருக்ஷேத்ர யுத்தத்தில் அர்ஜுனனுக்குத் தேரோட்டிய .. அந்த ஸ்ரீ க்ருஷ்ணன் ஒருவனே தேவன் .. அவன் மாத்ரமே பூஜிக்கப் பட வேண்டும் .. என்று அர்தம் ஆகிறதா ... ஸ்ரீ க்ருஷ்ணன் பூஜிக்கப் படும் அர்ஹதை உள்ளவன்தான் என்பதில் ஸந்தேஹம் இல்லை . ஆனால் , அழியக்கூடிய ரூபத்துடன் இந்த லோகத்தில் தோன்றி மறைந்த ஸ்ரீ க்ருஷ்ணன் ஒருவனே தெய்வம் என்று சொல்வது , பரம ஸத்யமான அத்வைத ஸித்தாந்தத்திற்கு முரணாகத் தோன்றுகிறதே ! அனைத்தும் அவனே என்பதும் அவன் ஒருவனே என்பதும் எதிர்மாறாக இருப்பதாகத் தோன்றுகிறதே ! ஸ்ரீ க்ருஷ்ணன் , ஸ்ரீ பரமாத்மனின் அம்ஶமே என்று தன்னை உணர்ந்த நிலையில் வெளிப்பட்டது தான் கீதா . ஸ்ரீ க்ருஷ்ணன் , நான் என்று சொல்வதும் அவன் அல்லது வாஸுதேவன் என்று சொல்வதும் நித்ய , நிராகார (ரூபமற்ற) , நிர்விகார (அழிவற்ற) , நிர்குண (குணங்களற்ற) , ஸத்யமான அந்த ஸ்ரீ பரமாத்மனையே குறிக்கின்றன . இங்கு உருவ வழிபாடு இல்லை , ப்ரஹ்ம தத்வ ஆராதனையே சொல்லப் பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் ..

Comments
Post a Comment